Home Tamil தசுன் ஷானகவின் அதிரடி வீணாக வெற்றியீட்டியது நியூசிலாந்து!

தசுன் ஷானகவின் அதிரடி வீணாக வெற்றியீட்டியது நியூசிலாந்து!

185

இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் கட்டுநாயக்க சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற T20I பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நியூசிலாந்து அணி நிர்ணயித்திருந்த 169 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

நியூசிலாந்துடன் மோதவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி வெளியீடு

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் …

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததுடன், ரொஸ் டெய்லர் மற்றும் கொலின் மன்ரோ ஆகியோரின் அபார ஆட்டங்களின் உதவியுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

ஆரம்ப துடுப்பாட்ட வீராக களமிறங்கிய கொலின் மன்ரோ, 27 பந்துகளில் 48 ஓட்டங்களை குவித்து அடுத்த வீரருக்கு துடுப்பாட்ட வாய்ப்பினை வழங்கும் முகமாக களத்தில் இருந்து வெளியேற, மார்டின் கப்டில் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதற்கு அடுத்தப்படியாக களமிறங்கி டிம் செய்பர்ட் மற்றும் டொம் ப்ரூஸ் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

எனினும், இவர்களுக்கு அடுத்தப்படியாக களமிறங்கிய அனுபவ துடுப்பாட்ட வீரர் ரொஸ் டெய்லர் தனது பங்கிற்கு  4 சிக்ஸர்கள் அடங்கலாக 23 பந்துகளில் 41 ஓட்டங்களை குவித்து களத்திலிருந்து ஆட்டமிழக்காமல் அடுத்த வீரருக்கு வாய்ப்பு வழங்கும் முகமாக வெளியேற, மிச்சல் சென்ட்னர் மற்றும் ஸ்கொட் குகலெய்ன் இருவரும் தலா 13 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும், செஹான் ஜயசூரிய மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆரம்பத்திலிருந்து தடுமாறியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க 20 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, அடுத்துவந்த வீரர்கள் ஓட்டங்களை பெற்றாலும், ஓட்டவேகம் அணிக்கு சாதகமாக அமையவில்லை.

சதீர சமரவிக்ரம, அணித் தலைவர் அஷான் பிரியன்ஜன் மற்றும், அஞ்செலோ பெரேரா ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, செஹான் ஜயசூரிய மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் சிறிய இணைப்பாட்டமொன்றை பகிர்ந்தனர். எனினும், ஓட்டவேகம் குறைவாக இருந்த நிலையில், பானுக ராஜபக்ஷ 22 ஓட்டங்களுடனும், செஹான் ஜயசூரிய 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

மாலிங்க தலைமையிலான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ……

விக்கெட்டுகள் அடுத்தடுத்து பறிபோன நிலையில் களமிறங்கிய தசுன் ஷானக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். ஏனைய துடுப்பாட்ட வீரர்களின் தொடர்ச்சியான ஆட்டமிழப்பு காரணமாக வேகமாக துடுப்பெடுத்தாடிய இவர் 11 பந்துகளில் 25 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்ததுடன், இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுளை இழந்து 135 ஓட்டங்களை பெற்றதுடன், 33 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ஸ்கொட் குகலெய்ன் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், இஸ் சோதி 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 

இதேவேளை, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரின் முதல் போட்டி எதிர்வரும் முதலாம் திகதி கண்டி – பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Photos: New Zealand vs Sri Lanka Board President’s XI – T20 Match

போட்டி சுருக்கம்

Result


Sri Lanka Board President’s XI
135/9 (20)

New Zealand
168/7 (20)

Batsmen R B 4s 6s SR
Colin Munro retired 48 27 6 1 177.78
Martin Guptill b Shehan Jayasuriya 22 24 0 2 91.67
Tim Seifert ( st Sadeera Samarawickrama b Wanindu Hasaranga 6 7 0 0 85.71
Tom Bruce st Sadeera Samarawickrama b Wanindu Hasaranga 13 10 0 0 130.00
Ross Taylor retired 41 23 0 4 178.26
Daryl Mitchell b Kasun Rajitha 9 11 0 0 81.82
Mitchell Santner not out 13 10 0 0 130.00
Scott Kuggeleijn run out (Dasun Shanaka) 1 1 0 0 100.00
Tim Southee not out 13 4 3 0 325.00


Extras 2 (b 0 , lb 1 , nb 0, w 1, pen 0)
Total 168/7 (20 Overs, RR: 8.4)
Fall of Wickets 1-70 (7.6) Colin Munro, 2-83 (8.3) Tim Seifert (, 3-74 (8.6) Martin Guptill, 4-105 (12.6) Tom Bruce, 5-139 (16.6) Ross Taylor, 6-153 (18.6) Daryl Mitchell, 7-155 (19.2) Scott Kuggeleijn,

Bowling O M R W Econ
Nuwan Pradeep 2 0 18 0 9.00
Kasun Rajitha 3 0 23 1 7.67
Danushka Gunathilaka 1 0 12 0 12.00
Lahiru Madushanka 3 0 33 0 11.00
Shehan Jayasuriya 2 0 7 1 3.50
Lakshan Sandakan 3 0 26 0 8.67
Wanindu Hasaranga 4 0 36 2 9.00
Dasun Shanaka 2 0 15 0 7.50


Batsmen R B 4s 6s SR
Danushka Gunathilaka c Colin Munro b Scott Kuggeleijn 20 16 4 0 125.00
Sadeera Samarawickrama c Martin Guptill b Scott Kuggeleijn 4 7 0 0 57.14
Bhanuka Rajapaksa c Scott Kuggeleijn b Ish Sodhi 22 23 0 1 95.65
Ashan Priyanjan c Tim Southee b Scott Kuggeleijn 3 13 0 0 23.08
Angelo Perera c Colin de Grandhomme b Mitchell Santner 1 2 0 0 50.00
Shehan Jayasuriya c Tom Bruce b Ish Sodhi 26 25 2 1 104.00
Dasun Shanaka c Tim Southee b Daryl Mitchell 25 11 2 2 227.27
Wanindu Hasaranga c Tim Seifert ( b Scott Kuggeleijn 0 1 0 0 0.00
Lahiru Madushanka c Martin Guptill b Ish Sodhi 12 7 1 1 171.43
Lakshan Sandakan not out 13 12 1 0 108.33
Kasun Rajitha not out 3 3 0 0 100.00


Extras 6 (b 0 , lb 0 , nb 0, w 6, pen 0)
Total 135/9 (20 Overs, RR: 6.75)
Fall of Wickets 1-20 (3.2) Sadeera Samarawickrama, 2-24 (3.5) Danushka Gunathilaka, 3-35 (7.1) Ashan Priyanjan, 4-37 (8.1) Angelo Perera, 5-80 (14.1) Bhanuka Rajapaksa, 6-80 (14.2) Shehan Jayasuriya, 7-94 (15.1) Wanindu Hasaranga, 8-110 (16.5) Lahiru Madushanka, 9-125 (18.2) Dasun Shanaka,

Bowling O M R W Econ
Ish Sodhi 4 0 43 3 10.75
Tim Southee 3 0 13 0 4.33
Seth Rance 4 0 25 0 6.25
Scott Kuggeleijn 4 0 19 4 4.75
Mitchell Santner 4 0 22 1 5.50
Daryl Mitchell 1 0 11 1 11.00



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<