ஆசிய இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் குழு B இல் இடம்பெற்றுள்ள இலங்கை தமது இறுதி குழுநிலைப் போட்டியில் சீனா-தாய்பேய் அணியை 83-17 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு முதல் தோல்வி
தென்கொரியாவில் நடைபெற்று வரும் இந்த இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் நேற்று (14) சிங்கப்பூரினை எதிர்கொண்ட இலங்கை அதில் 29-51 என்கிற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவியிருந்தது.
இந்த நிலையில் ஆசிய இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப் அரையிறுதிப் போட்டிக்காக சீனா-தாய் அணியுடன் கட்டாய வெற்றியை எதிர்பார்த்து களமிறங்கிய இலங்கை இளம் வீராங்கனைகள், சீனா-தாய்பேய் அணிக்கு எதிரான வெற்றியுடன் தொடரின் அரையிறுதிக்கு தெரிவாகும் அணிகளில் ஒன்றாகவும் மாறியிருக்கின்றனர்.
சீனா-தாய்பேய் அணிக்கு எதிரான மோதலில் முதல் கால்பகுதியினை 23-02 எனக் கைப்பற்றிய இலங்கை, போட்டியின் முதல் பாதியை 48-06 என அபார முன்னிலையுடன் நிறைவு செய்தது.
பின்னர் போட்டியின் இரண்டு கால்பகுதிகளையும் 18-02 மற்றும் 17-09 என்கிற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய இலங்கை, போட்டியில் சீனா-தாய்பேய் அணியை 83-17 என வீழ்த்தியது.
இலங்கை மங்கைகள் சார்பில் அதன் வெற்றியை உறுதி செய்வதற்கு தில்மி விஜேநாயக்க, பாஷி உடகெதர மற்றும் சஜி ரத்நாயக்க ஆகியோர் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<