லிதுவேனியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை B அணி அறிவிப்பு

883
Sri Lanka B squad

நட்பு ரீதியிலான கால்பந்து தொடரில் பங்கு கொள்வதற்காக இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள லிதுவேனியா கால்பந்து அணியுடன் விளையாடவுள்ள இலங்கை B அணியின் குழாத்தை இலங்கை கால்பந்து சம்மேளனம் இன்று (10) அறிவித்துள்ளது.

லிதுவேனியாவுடனான மோதலை சமநிலையில் முடித்த இலங்கை

கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இன்று (08) மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகிய…

நீண்ட காலம் சர்வதேசப் போட்டிகளில் பங்கு கொள்ளாத இலங்கை கால்பந்து அணியினர், சுமார் 20 மாதங்களின் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை லிதுவேனிய அணியுடன் நட்பு ரீதியிலான போட்டியில் பங்கோண்டனர். இலங்கை வீரர்கள் அந்த ஆட்டத்தை எந்தவித கோல்களும் இன்றி சமநிலையில் நிறைவு செய்தனர்.

குறித்த போட்டியைத் தொடர்ந்து, எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் சுசுகி கிண்ண தொடருக்கான பயிற்சிகள் மற்றும் பயிற்சிப் போட்டிகளில் பங்கு கொள்வதற்காக இலங்கை தேசிய கால்பந்து அணியினர் ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ளனர்.

இதேவேளை, இந்த சுற்றுத் தொடரில் லிதுவேனிய அணியினர் பங்கு கொள்ளும் இரண்டாவது ஆட்டமாக இலங்கை B அணியுடனான போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.  இந்தப் போட்டி 11ஆம் திகதி (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் ஆரம்பமாகவுள்ளது. 

எனவே, குறித்த போட்டிக்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டது. இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகத்தின் மத்திய பின்கள வீரரான பண்டார வரகாகொடவின் தலைமையின் கீழான இந்த அணியில் டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடிய அனுபவம் கொண்ட அதிகளவான இளம் வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதில், ஏற்கனவே இலங்கை தேசிய அணியில் இடம்பெற்ற வீரர்களுடன், 23 வயதின் கீழ் தேசிய அணி மற்றும் 19 வயதின் கீழ் தேசிய அணி என்பவற்றில் விளையாடிய வீரர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை குழாம்

  1. பண்டார வரகாகொட (அணித் தலைவர்)
  2. மஹேந்திரன் தினேஷ் (கோல் காப்பாளர்)
  3. தரிந்து மதுசங்க
  4. விகும் அவிஷ்க
  5. மொஹமட் வசீத்
  6. ஷெஹான் யஷ்மில
  7. மொஹமட் அமான்
  8. பரூட் பாயிஸ்
  9. ஹசித்த பிரியன்கர
  10. பாசித் அஹமட்  
  11. தெஷான் பெரேரா
  12. மொஹமட் சஹீல்
  13. மதுரங்க பெரேரா
  14. ரியாஸ் அஹமட்
  15. நெத்ம மல்ஷான்
  16. நவீன் ஜூட்
  17. ரிஸ்கான் பைசர்
  18. தரிந்து தனுஷ்க
  19. லஹிரு தாரக்க  
  20. கவிந்து இஷான்
  21. டிலான் டி சில்வா  
  22. பிரபாத் ருவன் அறுனசிறி (கோல் காப்பாளர்)
  23. ஜீவன்த பெர்னாண்டோ
  24. ஹர்ஷ பெர்னாண்டோ
  25. சுதேஷ் சுரங்க

அதிகாரிகள்  

பயிற்றுவிப்பாளர் – திலக் அல்பொன்சு
கோல்காப்பு பயிற்றுவிப்பாளர் – S. பத்மனாதன்
முகாமையாளர் – சஹரான் சின்கவன்ச