நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 22 பேர்கொண்ட குழாத்தினை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (07) அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அறிவிக்கப்பட்டுள்ள 22 பேர்கொண்ட குழாத்திலிருந்து டெஸ்ட் குழாம் எதிர்வரும் சில தினங்களில் 15 ஆக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழாத்தில், இலங்கை அணியின் கடைசி டெஸ்ட் தொடரில் இணைக்கப்பட்டிருக்காத அனுபவ துடுப்பாட்ட வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் மீண்டும் டெஸ்ட் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு எதிரான நியூசிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு
மயிரிழையில் உலகக் கிண்ணத்தை இழந்த நியூசிலாந்து …….
இலங்கை அணி இறுதியாக தென்னாபிரிக்காவுக்கு டெஸ்ட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது, குறித்த தொடருக்கான குழாத்திலிருந்து தினேஷ் சந்திமால் நீக்கப்பட்டதுடன், அவர் அணித் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டிருந்தார். அத்துடன், மெதிவ்ஸ் உபாதை காரணமாக தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. தற்போது இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ள தினேஷ் சந்திமால், கனடாவில் நடைபெற்று வரும் க்ளோபல் T20I லீக்கில் மொன்டீரியல் டைகர்ஷ் அணிக்காக விளையாடி வருகின்றார்.
அதேவேளை, அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தின் படி, இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன தொடர்ந்தும் செயற்படவுள்ளார். இவரின் தலைமையில் இறுதியாக இலங்கை அணி, தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்ததுடன், குறித்த தொடரில் இலங்கை 2-0 என வரலாற்று வெற்றியை பெற்றிருந்தது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14ம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி 22ம் திகதி கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவிருக்கிறது. குறித்த இந்த இரண்டு போட்டிகளும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் போட்டிகளாக அமையவுள்ளன.
இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடரினை, எமது Thepapare.com இணையத்தளத்தின் ஊடாக நேரலையாக பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஹதுருசிங்க நீக்கம்
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பொறுப்பில் ……….
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான 22 பேர்கொண்ட இலங்கை குழாம்
திமுத் கருணாரத்ன (தலைவர்), அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, அஞ்செலோ பெரேரா, ஓசத பெர்னாண்டோ, தனுஷ்க குணதிலக்க, செஹான் ஜயசூரிய, சாமிக்க கருணாரத்ன, டில்ருவான் பெரேரா, அகில தனன்ஜய, லசித் எம்புல்தெனிய, லக்ஷான் சந்தகன், சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித, அசித பெர்னாண்டோ
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<