இலங்கை A அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் A அணிக்கும் இடையிலான நான்கு நாள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டியின், முன்றாம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவின்போது, இலங்கையின் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் மேற்கிந்திய தீவுகள் A அணியினர் தடுமாற்றத்தை எதிர்கொண்டனர். இதனால் அவ்வணி, 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 55 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றது.
முதல் இன்னிங்சில் 7ஆம் விக்கெட்டுக்காக களம் இறங்கிய அசேல குணரத்ன, முதலாம் இன்னிங்சுக்காக இலங்கை A அணி 72 ஓட்டங்களுடன் முன்னிலை பெற்றிருந்த போது லஹிறு குமாரவுடன் இணைந்து ஒன்பதாவது விக்கெட்டுக்காக மேலும் 49 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கினார்.
அதன் பிறகு களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் A அணியின் துடுப்பாட்ட வீரர் ராஜேந்திர சந்திரிகா மற்றும் சமர் ப்ரூக்ஸின் விக்கெட்டுக்களை வீழ்த்தி அசேல குணரத்ன மேற்கிந்திய தீவுகள் அணியை துவம்சம் செய்தார். அவ்வணியின் நான்கு துடுப்பாட்ட வீரர்கள் 20 ஓட்டங்களை கடந்த போதும் எவராலும் நிலையாக நின்று 50 ஓட்டங்களை கூட பெற முடியவில்லை. விஷவுல் சிங்க் மாத்திரமே 46 ஓட்டங்களை அதிகூடிய ஓட்டங்களாக பதிவு செய்தார்.
Photo Album: Sri Lanka “A” vs West Indies ‘”A”- Day 3
அசேல குணரத்ன மற்றும் சுழல் பந்து வீச்சாளர் சரித் அசலங்க இருவரும் தலா இரு விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ, விஷவுல் சிங்க்கின் விக்கெட்டையும் கைப்பற்ற மேற்கிந்திய தீவுகள் A அணி 132 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
எனினும், ஒன்பதாவது விக்கெட்டுக்காக களம் இறங்கிய குடகேஷ் மொட்டி கின் மற்றும் கான் ஜோசப் ஆகியோர் இலங்கை பந்து வீச்சாளர்களை சவாலுக்கு உட்படுத்தி 19 ஓவர்கள் பந்தை தடுத்தாடினர். குடகேஷ் மொட்டி கின் 34 ஓட்டங்களைய பெற்றுக்கொண்டார். வலுவான போராட்டத்தின் மத்தியில் ஆட்ட நேர முடிவுக்கு முன்னரான இறுதி ஓவரில், இறுதிப் பந்தில் லக்க்ஷன் சண்டகன் நுணுக்கமான முறையில் பந்து வீசி குடகேஷ் மொட்டி கின் விக்கெட்டினை விழ்த்தினார்.
முன்னர் இன்றைய நாள் ஆட்ட நேர ஆரம்பத்தில், ரகீம் கார்ன்வெல், இலங்கை அணியின் இறுதி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி, 108 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகள் என்ற சிறந்த பந்து வீச்சு பதிவை முற்கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.
போட்டியின் சுருக்கம்
மேற்கிந்திய தீவுகள் A அணி (முதல் இன்னிங்ஸ்): 276 (86.4) – விஷாலுல் சிங் 96, சமர் ப்ரூக்ஸ் 65, கெமர் ரோச் 45, கிரான் பவல் 36, அசோலா குணரத்ன 27/3, அசித்த பெர்னாண்டோ 35/2, சரித அசலங்க 53/2
இலங்கை A அணி (முதல் இன்னிங்ஸ்): 386 (93) – திமுத் கருணாரத்ன 131, குஷால் ஜனித் பெரேரா 87, நிரோஷான் டிக்வெல 59, அசேல குணரத்ன 38,
ரகீம் கார்ன்வெல் 87/6
மேற்கிந்திய தீவுகள் A அணி (இரண்டாம் இன்னிங்ஸ்): 165/9 (75.5) – விஷவுல் சிங்க் 46, குடகேஷ் மொட்டி கின் 34, ஜோசப் ப்ரூக்ஸ் 28, ஜான் கம்பெல் 22, லக்ஷான் சந்தகன் 47/3, அசித பெர்னாண்டோ 16/2, சரித் அசலங்க 27/2, அசேல குணரத்ன 30/2,