இலங்கை “ஏ”, பாகிஸ்தான் “ஏ” மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் விளையாடும் முக்கோண ஒருநாள் தொடரின் 4ஆவது ஒருநாள் போட்டி நேற்று நார்த்தாம்டனின் கவுண்டி மைதானத்தில் இடம்பெற்றது.
ஏற்கனவே தாம் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில் இலங்கை “ஏ” அணி பாகிஸ்தான் “ஏ” அணியை எதிர்த்து விளையாடியது.
இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை “ஏ”அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.
இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை “ஏ” அணி 46.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை “ஏ” அணி சார்பாக பானுக ராஜபக்ஷ 63 பந்துகளுக்கு முகம் கொடுத்து ( 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் ) அடங்கலாக 56 ஓட்டங்களையும், திஸர பெரேரா 40 பந்துகளுக்கு முகம் கொடுத்து ( 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் ) அடங்கலாக 45 ஓட்டங்களையும், நிரோஷான் திக்வெல்ல 31 பந்துகளுக்கு முகம் கொடுத்து ( 8 பவுண்டரிகள் ) அடங்கலாக 44 ஓட்டங்களையும், எஞ்சலோ பெரேரா 43 பந்துகளுக்கு முகம் கொடுத்து ( 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் ) அடங்கலாக 35 ஓட்டங்களையும், அஷான் பிரியன்ஜன் 49 பந்துகளுக்கு முகம் கொடுத்து ( 5 பவுண்டரிகள் ) அடங்கலாக 34 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் “ஏ” அணியின் பந்து வீச்சில் ஷதாப் கான் 8.5 ஓவர்கள் பந்து வீசி 51 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும், முஹமத் நவாஸ் 10 ஓவர்கள் பந்து வீசி 39 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும், ஹஸன் அலி 9 ஓவர்கள் பந்து வீசி 50 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும் கைப்பற்றி இருந்தார்கள்.
பிறகு 255 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் “ஏ” அணி 48.1 ஓவர்களில் 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 258 ஓட்டங்களைப் பெற்று 11 பந்துகள் மீதம் இருக்க 4 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் “ஏ” அணியின் துடுப்பாட்டத்தில் ஜாஹிட் அலி 104 பந்துகளுக்கு முகம் கொடுத்து ( 5 பவுண்டரிகள் ) அடங்கலாக 77 ஓட்டங்களையும், பாபர் அசாம் 77 பந்துகளுக்கு முகம் கொடுத்து ( 7 பவுண்டரிகள் ) அடங்கலாக 73 ஓட்டங்களையும், சர்ஜீல் கான் 18 பந்துகளுக்கு முகம் கொடுத்து ( 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் ) அடங்கலாக 29 ஓட்டங்களையும், சவுத் ஷகீல் 29 பந்துகளுக்கு முகம் கொடுத்து ( 3 பவுண்டரிகள் ) அடங்கலாக 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை “ஏ” அணியின் தரப்பில் பந்து வீச்சில் லஹிரு கமகே 8 ஓவர்கள் பந்து வீசி 43 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும், சச்சித் பத்திரண 10 ஓவர்கள் பந்து வீசி 49 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்கள்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை “ஏ” அணி – 254/10 ( 46.5 )
பானுக ராஜபக்ஷ 56, திஸர பெரேரா 45, நிரோஷான் திகவெல்ல 44, எஞ்சலோ பெரேரா 35, அஷான் பிரியன்ஜன் 34
ஷதாப் கான் 51/3, முஹமத் நவாஸ் 39/2, ஹஸன் அலி 50/2
பாகிஸ்தான் “ஏ” அணி – 258/6 ( 48.1 )
ஜாஹிட் அலி 77, பாபர் அசாம் 73, சர்ஜீல் கான் 29, சவுத் ஷகீல் 25
லஹிரு கமகே 43/3, சச்சித் பத்திரண 49/2
முடிவு – பாகிஸ்தான் “ஏ” அணிக்கு 4 விக்கட்டுகளால் வெற்றி