ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று (25) நடைபெற்று முடிந்திருக்கும் முக்கோண ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை A அணியானது அயர்லாந்து A வீரர்களை 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருப்பதோடு தொடரின் சம்பியன் பட்டத்தினையும் வென்றிருக்கின்றது.
தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரருக்கு PSL போட்டிகளில் ஆட தடை
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை, அயர்லாந்து மற்றும் ஆப்கான் ஆகியவற்றின் A கிரிக்கெட் அணிகள் பங்கெடுக்கும் ஒருநாள் தொடர் நடைபெற்று வந்தததோடு தொடரின் லீக் போட்டிகளின் அடிப்படையில் தோல்வியுறாத இலங்கை A மற்றும் அயர்லாந்து A அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை A வீரர்கள் முதலில் அயர்லாந்து வீரர்களினை துடுப்பாடப் பணித்தனர். இதன்படி முதலில் துடுப்பாடிய அயர்லாந்து A அணியானது 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 200 ஓட்டங்களை மட்டும் எடுத்துக் கொண்டது.
அயர்லாந்து A அணியின் துடுப்பாட்டம் சார்பில் மோர்கன் டொப்பிங் அரைச்சதம் பெற்று 73 ஓட்டங்களை எடுக்க, தோமஸ் மேயஸ் 36 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இலங்கை A அணியின் பந்துவீச்சு சார்பில் தரிந்து ரத்நாயக்க 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மிலான் ரத்நாயக்க 3 விக்கெட்டுக்களைச் சுருட்டினார். அதேநேரம் துஷான் ஹேமன்த 2 விக்கெட்டுக்களையும் மொஹமட் சிராஸ் ஒரு விக்கெட்டினையும் எடுத்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 201 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய இலங்கை A அணியானது போட்டியின் வெற்றி இலக்கினை 34.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களுடன் அடைந்தது.
ஐ.சி.சி. தொடர்களில் இந்திய – பாகிஸ்தான் மோதல் நடைபெறுவதில் சிக்கல்?
இலங்கை A அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றியினை உறுதி செய்த பவான் ரத்நாயக்க மற்றும் மிலான் ரத்நாயக்க ஆகியோர் தலா 77 ஓட்டங்கள் வீதம் பெற்று தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தார்.
அயர்லாந்து A அணியின் பந்துவீச்சில் தோமஸ் மேய்ஸ் 3 விக்கெட்டுக்களையும், லியாம் மெக்கார்த்தி 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தமது தரப்பிற்காக போராடிய போதும் அது வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை A அணியின் மிலான் ரத்நாயக்க தெரிவானார்.
போட்டியின் சுருக்கம்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<