Home Tamil மழையினால் கைவிடப்பட்ட இலங்கை – இந்திய A அணிகளுக்கிடையிலான போட்டி

மழையினால் கைவிடப்பட்ட இலங்கை – இந்திய A அணிகளுக்கிடையிலான போட்டி

472

இலங்கை மற்றும் இந்திய A அணிகளுக்கு இடையிலான நான்காவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் சர்வதேச போட்டி வெற்றி தோல்வியின்றி (no result) முடிவுற்றது.

இதன் மூலம் இந்த ஒருநாள் தொடரில் 2-1 என இந்திய A அணி முன்னிலை பெற்றிருப்பதோடு இலங்கை A அணியின் தொடர் வெற்றி ஒன்றுக்கான வாய்ப்பு கைநழுவியது.

எதிர்வரும் சனிக்கிழமை (15) நடைபெறவுள்ள ஐந்தாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டியில் தொடர் தோல்வியை தவிர்ப்பதற்கு இலங்கை அணி வெற்றிபெறுவது கட்டாயமாகும்.

ஹுப்லி, நேஹ்ரு அரங்கில் இன்று (13) நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டி மழையால் நீண்ட நேரம் தடைப்பட்ட நிலையில் அணிக்கு 22 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

சகலதுறை ஆட்டத்தினால் இந்திய A அணியை வீழ்த்திய இலங்கை A

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இந்திய A அணி அதிரடியாக துடுப்பெடுத்தாடி 22 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 59 பந்துகளில் 84 ஓட்டங்களை விளாசினார். முதல் வரிசையில் வந்த அன்மோல்பிரீத் சிங் 46 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பெற்றார். இந்த இருவரும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 125 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் சவாலான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட வந்த இலங்கை A அணி 1.5 ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை இழந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதை டுத்து போட்டி கைவிடப்பட்டது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<    

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka A Team
10/1 (1)

India A Team
208/4 (22)

Batsmen R B 4s 6s SR
Shubman Gill b Lakshan Sandakan 19 21 1 2 90.48
Ruturaj Gaikwad b Lahiru Kumara 84 59 3 4 142.37
Anmolpreet Singh not out 85 46 10 2 184.78
Ishan Kishan b Lahiru Kumara 0 1 0 0 0.00
Deepak Hooda c Bhanuka Rajapaksa b Chamika Karunaratne 11 5 0 1 220.00
Prashant Chopra not out 6 1 0 1 600.00


Extras 3 (b 0 , lb 0 , nb 1, w 2, pen 0)
Total 208/4 (22 Overs, RR: 9.45)
Fall of Wickets 1-56 (7.3) Shubman Gill, 2-181 (20.1) Ruturaj Gaikwad, 3-190 (20.5) Ishan Kishan, 4-201 (21.4) Deepak Hooda,

Bowling O M R W Econ
Ishan Jayaratne 5 0 49 0 9.80
Lahiru Kumara 4 0 34 2 8.50
Chamika Karunaratne 5 0 57 1 11.40
Lakshan Sandakan 4 0 36 1 9.00
Akila Dananjaya 4 0 32 0 8.00


Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella lbw b Washington Sundar 8 5 1 0 160.00
Sadeera Samarawickrama not out 2 2 0 0 100.00
Bhanuka Rajapaksa not out 0 4 0 0 0.00


Extras 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0)
Total 10/1 (1 Overs, RR: 10)
Fall of Wickets 1-9 (0.6) Niroshan Dickwella,

Bowling O M R W Econ
Washington Sundar 1 0 9 1 9.00
Sandeep Warrier 0.5 0 1 0 2.00