சுற்றுலா இலங்கை A அணி மற்றும் இந்திய A அணிகள் ஆகியவை இடையிலான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின், முதல் போட்டியின் முதல் நாள் நிறைவில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிவரும் இந்திய A அணி மிகவும் வலுவான நிலையில் காணப்படுகின்றது.
இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை A அணி, அங்கே இந்திய A அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடர் என்பவற்றில் விளையாடுகின்றது.
இசுரு உதான மற்றும் அவிஷ்கவின் உபாதை குறித்து திமுத் கருணாரத்ன
தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நேற்று (24)…
இந்த சுற்றுப் பயணத்தில் இலங்கை A அணி முதல் கட்டமாக பங்கெடுக்கும் நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெல்கவி நகரில் இன்று (25) ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய A அணியின் தலைவர் பிரியாங்க் பாஞ்சல் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக தேர்வு செய்து கொண்டார்.
இதன்படி முதலில் துடுப்பாடத் தொடங்கிய இந்திய A அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக அதன் தலைவர் பிரியாங்க் பாஞ்சல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் களம் வந்தனர்.
தொடக்கம் முதலே இலங்கை A அணியின் பந்துவீச்சாளர்களை மிகவும் வெற்றிகரமாக எதிர்கொண்ட இரண்டு இந்திய துடுப்பாட்ட வீரர்களும் ஓட்ட மழை பொழிந்தனர்.
இதனால் முதல் நாளின் மதிய போசண இடைவேளை வரை, இலங்கை A அணியினரால் இந்திய A அணியின் விக்கெட்டுக்கள் எதனையும் கைப்பற்ற முடியவில்லை.
தொடர்ந்து முன்னேறிய போட்டியில் இந்திய A அணித் தலைவரான பிரியாங்க் பாஞ்சல் முதல்தரப் போட்டிகளில் தான் பெற்ற 21 ஆவது சதத்தினை பதிவு செய்தார். மறுமுனையில், இலங்கை A அணியின் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடிதந்த வெறும் 23 வயதேயான அபிமன்யு ஈஸ்வரன் முதல்தரப் போட்டிகளில் தனது 12 ஆவது சதத்தினை பூர்த்தி செய்தார்.
இரண்டு வீரர்களினதும் சதங்களோடு இந்திய A அணி, போட்டியின் முதல் நாள் தேநீர் இடைவேளையை விக்கெட்டுக்கள் எதனையும் பறிகொடுக்காமல் அடைந்தது.
பின்னர் போட்டியின் மூன்றாம் இடைவெளியில் இலங்கை A அணிக்கு விஷ்வ பெர்னாந்து இந்திய A அணித்தலைவர் பிரியாங்க் பாஞ்சலின் விக்கெட்டினை கைப்பற்றி ஆறுதல் தந்தார்.
இந்திய A அணியின் முதல் விக்கெட்டாக ஓய்வறை நடந்த பிரியாங்க் பாஞ்சல், 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பெளண்டரிகள் அடங்கலாக 261 பந்துகளில் 160 ஓட்டங்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஞ்சலின் விக்கெட்டினை அடுத்து அபிமன்யு ஈஸ்வரன் இந்திய A அணியினை தொடர்ந்தும் பலப்படுத்தினார்.
இவரின் துடுப்பாட்ட உதவியோடு இந்திய A அணி, போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது தமது முதல் இன்னிங்ஸில் 87 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 376 ஓட்டங்களை குவித்திருந்தது.
திமுத் கருணாரத்னவின் போராட்டம் வீண்; பயிற்சிப் போட்டியில் இலங்கை தோல்வி
இந்திய A அணியின் துடுப்பாட்டத்தில் அதனை பலப்படுத்திய அபிமன்யு ஈஸ்வரன் 189 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்க, புதிய துடுப்பாட்ட வீரராக களம் வந்த ஜயந்த் யாதவ் 6 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இலங்கை A அணி, போட்டியின் முதல் நாளில் 8 பந்துவீச்சாளர்களை உபயோகம் செய்திருந்த போதிலும் விஷ்வ பெர்னாந்துவினால் மட்டுமே விக்கெட் ஒன்றினை கைப்பற்ற முடியுமாக இருந்தது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
PK Panchal | c Niroshan Dickwella b Vishwa Fernando | 160 | 261 | 9 | 2 | 61.30 |
AR Easwaran | lbw b Akila Dananjaya | 233 | 321 | 22 | 3 | 72.59 |
Jayant Yadav | c Niroshan Dickwella b Vishwa Fernando | 8 | 18 | 1 | 0 | 44.44 |
Anmolpreet Singh | not out | 116 | 165 | 11 | 0 | 70.30 |
Ricky Bhui | b Lakshan Sandakan | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Siddhesh Lad | c Niroshan Dickwella b Lahiru Kumara | 76 | 89 | 6 | 1 | 85.39 |
Extras | 28 (b 8 , lb 12 , nb 5, w 3, pen 0) |
Total | 622/5 (141 Overs, RR: 4.41) |
Fall of Wickets | 1-390 (44.4) Jayant Yadav, 2-352 (83.1) PK Panchal, 3-466 (109.6) AR Easwaran, 4-469 (110.5) Ricky Bhui, 5-622 (141.6) Siddhesh Lad, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 20.1 | 0 | 83 | 2 | 4.13 | |
Lahiru Kumara | 21 | 2 | 81 | 0 | 3.86 | |
Akila Dananjaya | 29 | 0 | 136 | 1 | 4.69 | |
Chamika Karunaratne | 18.5 | 1 | 62 | 0 | 3.35 | |
Lakshan Sandakan | 28 | 0 | 145 | 1 | 5.18 | |
Ashan Priyanjan | 12 | 1 | 48 | 0 | 4.00 | |
Bhanuka Rajapaksa | 10 | 0 | 27 | 0 | 2.70 | |
Sangeeth Cooray | 2 | 0 | 15 | 0 | 7.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sangeeth Cooray | b Sandeep Warrier | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Pathum Nissanka | c AR Easwaran b Shivam Dube | 6 | 38 | 1 | 0 | 15.79 |
Sadeera Samarawickrama | b Sandeep Warrier | 31 | 56 | 5 | 0 | 55.36 |
Bhanuka Rajapaksa | c PK Panchal b Shivam Dube | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Ashan Priyanjan | c Ricky Bhui b Jayant Yadav | 49 | 87 | 8 | 2 | 56.32 |
Niroshan Dickwella | c Ankit Rajpoot b PK Panchal | 103 | 113 | 13 | 0 | 91.15 |
Chamika Karunaratne | b Rahul Chahar | 1 | 11 | 0 | 0 | 9.09 |
Akila Dananjaya | c KS Bharat b Rahul Chahar | 16 | 28 | 2 | 1 | 57.14 |
Lakshan Sandakan | lbw b Jayant Yadav | 13 | 37 | 0 | 0 | 35.14 |
Vishwa Fernando | not out | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Lahiru Kumara | c Ricky Bhui b Rahul Chahar | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Extras | 11 (b 0 , lb 5 , nb 6, w 0, pen 0) |
Total | 232/10 (63.4 Overs, RR: 3.64) |
Fall of Wickets | 1-1 (1.3) Sangeeth Cooray, 2-18 (11.4) Pathum Nissanka, 3-18 (11.5) Bhanuka Rajapaksa, 4-50 (20.1) Sadeera Samarawickrama, 5-161 (42.4) Ashan Priyanjan, 6-170 (45.4) Chamika Karunaratne, 7-203 (51.6) Akila Dananjaya, 8-229 (61.1) Niroshan Dickwella, 9-231 (62.2) Lakshan Sandakan, 10-232 (63.4) Lahiru Kumara, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Ankit Rajpoot | 11 | 4 | 13 | 0 | 1.18 | |
Sandeep Warrier | 12 | 2 | 50 | 2 | 4.17 | |
Shivam Dube | 6 | 1 | 19 | 2 | 3.17 | |
Rahul Chahar | 17.4 | 1 | 78 | 4 | 4.48 | |
Jayant Yadav | 17 | 2 | 67 | 2 | 3.94 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sangeeth Cooray | c Ricky Bhui b Sandeep Warrier | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Pathum Nissanka | c KS Bharat b Ankit Rajpoot | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Sadeera Samarawickrama | c Ricky Bhui b Rahul Chahar | 48 | 92 | 6 | 0 | 52.17 |
Bhanuka Rajapaksa | b Ankit Rajpoot | 1 | 9 | 0 | 0 | 11.11 |
Ashan Priyanjan | st KS Bharat b Rahul Chahar | 39 | 69 | 7 | 0 | 56.52 |
Niroshan Dickwella | c KS Bharat b Sandeep Warrier | 27 | 39 | 0 | 0 | 69.23 |
Chamika Karunaratne | c Jayant Yadav b Rahul Chahar | 20 | 20 | 0 | 0 | 100.00 |
Akila Dananjaya | st KS Bharat b Jayant Yadav | 10 | 19 | 0 | 0 | 52.63 |
Lakshan Sandakan | not out | 10 | 30 | 0 | 0 | 33.33 |
Vishwa Fernando | st KS Bharat b Jayant Yadav | 10 | 18 | 0 | 0 | 55.56 |
Lahiru Kumara | b Rahul Chahar | 8 | 10 | 0 | 0 | 80.00 |
Extras | 11 (b 4 , lb 6 , nb 0, w 1, pen 0) |
Total | 185/10 (52.3 Overs, RR: 3.52) |
Fall of Wickets | 1-1 (0.5) Pathum Nissanka, 2-3 (1.3) Sangeeth Cooray, 3-4 (4) Bhanuka Rajapaksa, 4-92 (28.4) Ashan Priyanjan, 5-99 (30.4) Sadeera Samarawickrama, 6-133 (36.1) Chamika Karunaratne, 7-153 (41.4) Akila Dananjaya, 8-153 (42.6) Niroshan Dickwella, 9-166 (47.6) Vishwa Fernando, 10-185 (52.3) Lahiru Kumara, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Ankit Rajpoot | 5.2 | 1 | 11 | 2 | 2.12 | |
Sandeep Warrier | 10.4 | 4 | 26 | 2 | 2.50 | |
Shivam Dube | 7 | 0 | 27 | 0 | 3.86 | |
PK Panchal | 1 | 0 | 8 | 0 | 8.00 | |
Rahul Chahar | 13.3 | 2 | 45 | 4 | 3.38 | |
Jayant Yadav | 15 | 0 | 58 | 2 | 3.87 |
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<