சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை A அணி மிலிந்த சிறிவர்தன, லசித் எம்புல்தெனிய, மொஹமட் சிராஸ் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரின் சிறப்பாட்டத்தோடு 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றியினை பதிவு செய்துள்ளது.
வெற்றியை நெருங்கியிருக்கும் இலங்கை A கிரிக்கெட் அணி
சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணிகள்..
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து A அணி தமது இலங்கை சுற்றுப் பயணத்தில் முதற்கட்டமாக விளையாடும் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இந்த முதலாவது போட்டி கடந்த சனிக்கிழமை (5) கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.
நான்கு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து A அணித்தலைவர் ஹர்ரி டெக்டர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக தெரிவு செய்தார். இதன்படி முதலில் துடுப்பாடிய அயர்லாந்து A அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 153 ஓட்டங்களை பெற்றது.
அயர்லாந்து A அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் சார்பாக ஜேம்ஸ் மெக்கல்லம் 76 ஓட்டங்களை குவிக்க இலங்கை A அணியின் பந்துவீச்சு சார்பில் லசித் எம்புல்தெனிய மற்றும் மொஹமட் சிராஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.
இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை A அணி தேசிய அணி வீரரான மிலிந்த சிறிவர்தன பெற்றுக்கொண்ட சத்தத்தின் உதவியோடு 77.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 308 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
Photo Album – Ireland A Team Tour to Sri Lanka 2018/19 – 1st Four Day Game – Day 2
இலங்கை A அணியின் துடுப்பாட்டத்தில் சதம் பெற்ற மிலிந்த சிறிவர்தன 103 ஓட்டங்களை குவிக்க, கமிந்து மெண்டிஸ் 91 ஓட்டங்களைப் பெற்றுத்தந்திருந்தார். இதேநேரம், அயர்லாந்து A அணியின் பந்துவீச்சுக்காக ஜேம்ஸ் கெமரூன் டோவ் 7 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Photos: Ireland A Team Tour to Sri Lanka 2018/19 | 1st Four Day Game | Day 3
இதன் பின்னர் 155 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த அயர்லாந்து A அணி, இலங்கை A அணியினை விட வெறும் 27 ஓட்டங்களால் முன்னிலை பெற்று தமது இரண்டாம் இன்னிங்ஸிற்காக 182 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (6) நிறைவுக்கு வந்தது. அயர்லாந்து A அணியின் துடுப்பாட்டத்தில் ஜொனதன் கார்த் 9 ஓட்டங்களுடனும், ஜேம்ஸ் கேமரூன் டோவ் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றிருந்தனர்.
பின்னர் இன்று (7) போட்டியின் மூன்றாம் நாளில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த அயர்லாந்து A அணி 54.3 ஓவர்களில் 196 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்ததோடு போட்டியின் வெற்றி இலக்காக இலங்கை A அணிக்கு 42 ஓட்டங்களை மட்டுமே நிர்ணயம் செய்தது.
அயர்லாந்து A அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் ஜேம்ஸ் சன்னோன் 32 ஓட்டங்களுடன் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையினை பதிவு செய்ய இலங்கை A அணியின் பந்துவீச்சாளர்களில் லசித் எம்புல்தெனிய 5 விக்கெட்டுக்களையும் மொஹமட் சிராஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அதிரடியான முறையில் செயற்பட்டிருந்தனர்.
ஒருநாள் அரங்கில் வரலாறு படைத்த திசர பெரேராவின் சாதனைத் துளிகள்
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது..
இதன் பின்னர் அயர்லாந்து A அணியினால் நிர்ணயம் செய்யப்பட மிகவும் சவால் குறைந்த இந்த வெற்றி இலக்கினை, அடைவதற்கு பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை A அணி வெறும் 6.5 ஓவர்களில் விக்கெட்டுக்கள் எதனையும் பறிகொடுக்காமல் 44 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கினை அடைந்தது.
இலங்கை A அணியின் வெற்றியினை ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்திருந்த பெதும் நிஸ்ஸங்க 26 ஓட்டங்களுடனும், அவிஷ்க பெர்ணாந்து 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நின்று உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ் வெற்றியுடன் இலங்கை A அணி அயர்லாந்து அணியுடனான உத்தியாகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருக்கும் நிலையில் இரண்டு அணிகளும் மோதும் உத்தியாகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
ஸ்கோர் விபரம்
// var socket=io('http://localhost:8080'); var socket=io('http://202.124.184.250:8080');
jQuery( document ).ready(function() { console.log( "ready" ); var prev_bat_team = 0;
socket.on('message',function (message) { message = JSON.parse(message); console.log(message); if( message.data.cric.commentary){ jQuery('#cmt_wrap').prepend('
'+message.data.cric.commentary.event+'
'+message.data.cric.commentary.comment+'
'); } if(message.data.cric.match){ console.log(message.data.cric.match.teams_1_inn2_r[0]); function ove(balls) { var overs = 0; if(balls %6 == 0){ overs = balls/6; }else{ overs = parseInt(balls/6)+"."+(+balls - +parseInt(balls/6)*6); } console.log(overs); return overs; }
if(!message.data.cric.match.teams_1_inn2_r[0]){
jQuery('#score_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html(message.data.cric.match.teams_1_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_1_r[0]['wkts']); jQuery('#over_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_r[0]['balls'])+" overs)"); }else { jQuery('#score_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html(message.data.cric.match.teams_1_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_1_r[0]['wkts']+" & "+message.data.cric.match.teams_1_inn2_r[0]['score']+" / "+message.data.cric.match.teams_1_inn2_r[0]['wkts']); jQuery('#over_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_inn2_r[0]['balls'])+" overs)"); } if(!message.data.cric.match.teams_2_inn2_r[0]){
jQuery('#score_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html(message.data.cric.match.teams_2_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_2_r[0]['wkts']); jQuery('#over_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_r[0]['balls'])+" overs)"); }else { jQuery('#score_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html(message.data.cric.match.teams_2_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_2_r[0]['wkts']+" & "+message.data.cric.match.teams_2_inn2_r[0]['score']+" / "+message.data.cric.match.teams_2_inn2_r[0]['wkts']); jQuery('#over_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_inn2_r[0]['balls'])+" overs)"); }
if(message.data.cric.match.teams_1_r[0]['extras']!=null){ jQuery('#extras_1_r_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_r[0]['extras'])); } if(message.data.cric.match.teams_2_r[0]['extras']!=null){ jQuery('#extras_2_r_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_r[0]['extras'])); } if(message.data.cric.match.teams_1_inn2_r[0]['extras']!=null){ jQuery('#extras_1_r_2_'+message.data.cric.match.teams_1_inn2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_inn2_r[0]['extras'])); } if(message.data.cric.match.teams_2_inn2_r[0]['extras']!=null){ jQuery('#extras_1_r_2_'+message.data.cric.match.teams_2_inn2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_inn2_r[0]['extras'])); }
//extras_1_r_2_ // if(prev_bat_team != message.data.cric.team_id){ jQuery('#widget_wrapper').load(document.URL + ' #widget_wrapper'); // } // prev_bat_team = message.data.cric.team_id // }
}); });
Full Scorecard
Ireland A
153/10 & 196/10
(54.3 overs)
Result
Sri Lanka A
308/10 & 44/0
(6.5 overs)
SL A won by 10 wickets
Ireland A’s 1st Innings
Batting | R | B | ||||
---|---|---|---|---|---|---|
S Doheny | c Siriwardane b M Shiraz | 7 | 16 | |||
JA McCollum | b L Ambuldeniya | 76 | 108 | |||
A Gillespie | lbw by M Shiraz | 2 | 6 | |||
JNK Shannon | b M Shiraz | 0 | 3 | |||
H Tector | b N Peiris | 0 | 10 | |||
L Tucker | lbw by N Peiris | 0 | 2 | |||
MR Adair | c M Sarathchandra b L Ambuldeniya | 11 | 9 | |||
N Rock | c Fernando b M Shiraz | 28 | 54 | |||
J Little | b L Ambuldeniya | 5 | 21 | |||
JJ Garth | c N Peiris b L Ambuldeniya | 10 | 30 | |||
J Cameron-Dow | not out | 7 | 18 |
Bowling | O | M | R | W | E |
---|---|---|---|---|---|
Nisala Tharaka | 6 | 1 | 20 | 0 | 3.33 |
Mohamed Shiraz | 13 | 1 | 47 | 4 | 3.62 |
Lasith Ambuldeniya | 13.2 | 1 | 46 | 4 | 3.48 |
Nishan Peiris | 11 | 0 | 30 | 2 | 2.73 |
Ashan Priyanjan | 2 | 0 | 9 | 0 | 4.50 |
Sri Lanka A’s 1st Innings
Batting | R | B | ||||
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | b Cameron-Dow | 11 | 41 | |||
Avishka Fernando | c Tucker b Adair | 20 | 31 | |||
Ashan Priyanjan | c Tucker b Adair | 6 | 6 | |||
Angelo Perera | c Tucker b Adair | 4 | 8 | |||
Milinda Siriwardane | c Gillespie b Cameron-Dow | 104 | 126 | |||
Kamindu Mendis | b Cameron-Dow | 91 | 135 | |||
Manoj Sarathchandra | lbw by Cameron-Dow | 20 | 38 | |||
Nisala Tharaka | b Cameron-Dow | 6 | 11 | |||
Lasith Ambuldeniya | c Hector b Cameron-Dow | 10 | 23 | |||
Mohomed Shiraz | c Adair b Cameron-Dow | 17 | 41 | |||
Nishan Peiris | not out | 5 | 10 |
Bowling | O | M | R | W | E |
---|---|---|---|---|---|
Joshua Little | 11 | 1 | 67 | 0 | 6.09 |
James Cameron-Dow | 26.1 | 7 | 77 | 7 | 2.95 |
Mark Adair | 14 | 3 | 43 | 3 | 3.07 |
Jonathan Garth | 7 | 0 | 28 | 0 | 4.00 |
Harry Tector | 11 | 0 | 54 | 0 | 4.91 |
James Shannon | 8 | 0 | 32 | 0 | 4.00 |
Ireland A’s 2nd Innings
Batting | R | B | ||||
---|---|---|---|---|---|---|
S Doheny | c K Mendis b L Ambuldeniya | 7 | 18 | |||
JNK Shannon | lbw by L Ambuldeniya | 32 | 47 | |||
A Gillespie | c A Fernando b L Ambuldeniya | 13 | 23 | |||
H Tector | lbw by K Mendis | 1 | 16 | |||
L Tucker | c M Siriwardane b M Shiraz | 26 | 57 | |||
MR Adair | c A Fernando b L Ambuldeniya | 17 | 42 | |||
N Rock | c N Tharaka b L Ambuldeniya | 17 | 41 | |||
J Little | c K Mendis b M Shiraz | 18 | 10 | |||
JJ Garth | not out | 15 | 29 | |||
J Cameron-Dow | b A Priyanjan | 18 | 27 |
Bowling | O | M | R | W | E |
---|---|---|---|---|---|
Nisala Tharaka | 8 | 1 | 25 | 1 | 3.13 |
Mohamed Shiraz | 10 | 2 | 47 | 2 | 4.70 |
Lasith Ambuldeniya | 21 | 6 | 73 | 5 | 3.48 |
Nishan Peiris | 7 | 0 | 29 | 0 | 4.14 |
Kamindu Mendis | 8 | 3 | 13 | 1 | 1.63 |
Ashan Priyanjan | 0.3 | 0 | 4 | 1 | 13.33 |
Sri Lanka A’s 2nd Innings
Batting | R | B | ||||
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | not out | 26 | 23 | |||
Avishka Fernando | not out | 16 | 18 |
Bowling | O | M | R | W | E |
---|---|---|---|---|---|
Mark Adair | 3 | 0 | 21 | 0 | 7.00 |
James Cameron-Dow | 3 | 1 | 13 | 0 | 4.33 |
Jonathan Garth | 0.5 | 0 | 8 | 0 | 16.00 |