Home Tamil இலங்கைக்கு எதிராக இமாலய ஓட்டங்களைக் குவித்துள்ள இந்திய A அணி

இலங்கைக்கு எதிராக இமாலய ஓட்டங்களைக் குவித்துள்ள இந்திய A அணி

345
PTI

சுற்றுலா இலங்கை A அணி மற்றும் இந்திய A அணி ஆகியவை இடையே இடம்பெற்றுவரும் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில் இந்திய A அணி தமது முதல் இன்னிங்ஸில் இமாலய ஓட்டங்களை குவித்து வலுப்பெற்றிருக்கின்றது.

பிரியாங்க், அபிமன்யு ஆகியோரின் சதத்தோடு வலுப்பெற்றுள்ள இந்திய A அணி

சுற்றுலா இலங்கை A அணி மற்றும் இந்திய A அணிகள் ஆகியவை இடையிலான உத்தியோகபூர்வமற்ற

இலங்கை A அணியின் இந்திய சுற்றுப் பயணத்தின் முதல்கட்டமாக இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெறுகின்றது. அந்தவகையில் நான்கு நாட்கள் கொண்ட இந்த  டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று (25) பெல்கவி நகரில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இந்திய A அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 376 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

நேற்றைய நாளில் இந்திய A அணியினை பலப்படுத்தியிருந்த அதன் தலைவர் பிரியாங்க் பாஞ்சல் சதம் கடந்து 160 ஓட்டங்கள் பெற்றிருக்க, இன்னுமொரு சதம் மூலம் இந்திய A அணிக்கு பெறுமதி சேர்த்த அபிமன்யு ஈஸ்வரன் 189 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இன்று போட்டியின் இரண்டாம் நாளில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இந்திய A அணி சார்பில் சிறிது நேரத்திலேயே அபிமன்யு ஈஸ்வரன் இரட்டைச்சதத்தினை பூர்த்தி செய்தார்.

பின்னர் அகில தனன்ஞயவின் பந்துவீச்சினால் அபிமன்யு ஈஸ்வரனின் விக்கெட் வீழ்த்தப்பட்டது. அவர்ஆட்டமிழக்கும் போது 321 பந்துகளில் 22 பெளண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 233 ஓட்டங்களை குவித்திருந்தார். இது அபிமன்யு ஈஸ்வரன் முதல்தரப் போட்டிகளின் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகவும் பதிவானது.

ஜீவன் மெண்டிஸின் கனவு நனவான உலகக் கிண்ணம்

இதன் பின்னர் இந்திய A அணிக்கு அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் சித்தேஷ் லாட் ஆகியோர் தமது சிறப்பாட்டங்களோடு உதவினர். இந்த இரண்டு வீரர்களினதும் துடுப்பாட்ட உதவியோடு இந்திய A அணி, தமது முதல் இன்னிங்ஸினை 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 622 ஓட்டங்கள் குவித்த நிலையில் இடைநிறுத்தியது.

இந்திய A அணியின் துடுப்பாட்டம் சார்பாக அன்மோல்ப்ரீத் சிங், முதல்தரப் போட்டிகளில் பெற்ற தனது 5ஆவது சதத்தோடு 116 ஓட்டங்கள் குவித்தும், சித்தேஷ் லாட் அரைச்சதம் ஒன்றுடன் 76 ஓட்டங்கள் குவித்தும் ஆட்டமிழக்காது இருந்தனர்.

இதேநேரம், இலங்கை A அணியின் பந்துவீச்சு சார்பில் விஷ்வ பெர்னாந்து 2 விக்கெட்டுகளையும், லஹிரு குமார, அகில தனன்ஞய மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை A அணி, போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 83 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து காணப்படுகின்றது.

இசுரு உதான மற்றும் அவிஷ்கவின் உபாதை குறித்து திமுத் கருணாரத்ன

இலங்கை A அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் வந்திருந்த சங்கீத் கூரே (0), பெதும் நிஸங்க (6) ஆகியோர் பத்து ஓட்டங்களுக்கு குறைவாக பெற்று ஆட்டமிழந்திருக்க, சதீர சமரவிக்ரம 31 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதேநேரம், இரண்டாம் நாள் ஆட்டநேரம் நிறைவுக்கு வரும் போது இலங்கை A அணி சார்பில் களத்தில் நின்ற நிரோஷன் திக்வெல்ல மற்றும் அஷான் பிரியஞ்சன் ஆகியோர் தலா 22 ஓட்டங்கள் வீதம் பெற்றிருந்தனர்.

இந்திய A அணியின் பந்துவீச்சு சார்பில் சந்தீப் வாரியர் மற்றும் சிவாம் தாபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka A Team
232/10 (63.4) & 185/10 (52.3)

India A Team
622/5 (141)

Batsmen R B 4s 6s SR
PK Panchal c Niroshan Dickwella b Vishwa Fernando 160 261 9 2 61.30
AR Easwaran lbw b Akila Dananjaya 233 321 22 3 72.59
Jayant Yadav c Niroshan Dickwella b Vishwa Fernando 8 18 1 0 44.44
Anmolpreet Singh not out 116 165 11 0 70.30
Ricky Bhui b Lakshan Sandakan 1 3 0 0 33.33
Siddhesh Lad c Niroshan Dickwella b Lahiru Kumara 76 89 6 1 85.39


Extras 28 (b 8 , lb 12 , nb 5, w 3, pen 0)
Total 622/5 (141 Overs, RR: 4.41)
Fall of Wickets 1-390 (44.4) Jayant Yadav, 2-352 (83.1) PK Panchal, 3-466 (109.6) AR Easwaran, 4-469 (110.5) Ricky Bhui, 5-622 (141.6) Siddhesh Lad,

Bowling O M R W Econ
Vishwa Fernando 20.1 0 83 2 4.13
Lahiru Kumara 21 2 81 0 3.86
Akila Dananjaya 29 0 136 1 4.69
Chamika Karunaratne 18.5 1 62 0 3.35
Lakshan Sandakan 28 0 145 1 5.18
Ashan Priyanjan 12 1 48 0 4.00
Bhanuka Rajapaksa 10 0 27 0 2.70
Sangeeth Cooray 2 0 15 0 7.50
Batsmen R B 4s 6s SR
Sangeeth Cooray b Sandeep Warrier 0 6 0 0 0.00
Pathum Nissanka c AR Easwaran b Shivam Dube 6 38 1 0 15.79
Sadeera Samarawickrama b Sandeep Warrier 31 56 5 0 55.36
Bhanuka Rajapaksa c PK Panchal b Shivam Dube 0 1 0 0 0.00
Ashan Priyanjan c Ricky Bhui b Jayant Yadav 49 87 8 2 56.32
Niroshan Dickwella c Ankit Rajpoot b PK Panchal 103 113 13 0 91.15
Chamika Karunaratne b Rahul Chahar 1 11 0 0 9.09
Akila Dananjaya c KS Bharat b Rahul Chahar 16 28 2 1 57.14
Lakshan Sandakan lbw b Jayant Yadav 13 37 0 0 35.14
Vishwa Fernando not out 2 6 0 0 33.33
Lahiru Kumara c Ricky Bhui b Rahul Chahar 0 5 0 0 0.00


Extras 11 (b 0 , lb 5 , nb 6, w 0, pen 0)
Total 232/10 (63.4 Overs, RR: 3.64)
Fall of Wickets 1-1 (1.3) Sangeeth Cooray, 2-18 (11.4) Pathum Nissanka, 3-18 (11.5) Bhanuka Rajapaksa, 4-50 (20.1) Sadeera Samarawickrama, 5-161 (42.4) Ashan Priyanjan, 6-170 (45.4) Chamika Karunaratne, 7-203 (51.6) Akila Dananjaya, 8-229 (61.1) Niroshan Dickwella, 9-231 (62.2) Lakshan Sandakan, 10-232 (63.4) Lahiru Kumara,

Bowling O M R W Econ
Ankit Rajpoot 11 4 13 0 1.18
Sandeep Warrier 12 2 50 2 4.17
Shivam Dube 6 1 19 2 3.17
Rahul Chahar 17.4 1 78 4 4.48
Jayant Yadav 17 2 67 2 3.94


Batsmen R B 4s 6s SR
Sangeeth Cooray c Ricky Bhui b Sandeep Warrier 1 6 0 0 16.67
Pathum Nissanka c KS Bharat b Ankit Rajpoot 0 2 0 0 0.00
Sadeera Samarawickrama c Ricky Bhui b Rahul Chahar 48 92 6 0 52.17
Bhanuka Rajapaksa b Ankit Rajpoot 1 9 0 0 11.11
Ashan Priyanjan st KS Bharat b Rahul Chahar 39 69 7 0 56.52
Niroshan Dickwella c KS Bharat b Sandeep Warrier 27 39 0 0 69.23
Chamika Karunaratne c Jayant Yadav b Rahul Chahar 20 20 0 0 100.00
Akila Dananjaya st KS Bharat b Jayant Yadav 10 19 0 0 52.63
Lakshan Sandakan not out 10 30 0 0 33.33
Vishwa Fernando st KS Bharat b Jayant Yadav 10 18 0 0 55.56
Lahiru Kumara b Rahul Chahar 8 10 0 0 80.00


Extras 11 (b 4 , lb 6 , nb 0, w 1, pen 0)
Total 185/10 (52.3 Overs, RR: 3.52)
Fall of Wickets 1-1 (0.5) Pathum Nissanka, 2-3 (1.3) Sangeeth Cooray, 3-4 (4) Bhanuka Rajapaksa, 4-92 (28.4) Ashan Priyanjan, 5-99 (30.4) Sadeera Samarawickrama, 6-133 (36.1) Chamika Karunaratne, 7-153 (41.4) Akila Dananjaya, 8-153 (42.6) Niroshan Dickwella, 9-166 (47.6) Vishwa Fernando, 10-185 (52.3) Lahiru Kumara,

Bowling O M R W Econ
Ankit Rajpoot 5.2 1 11 2 2.12
Sandeep Warrier 10.4 4 26 2 2.50
Shivam Dube 7 0 27 0 3.86
PK Panchal 1 0 8 0 8.00
Rahul Chahar 13.3 2 45 4 3.38
Jayant Yadav 15 0 58 2 3.87



போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<