சிட்டகொங்கில் நடைபெற்று முடிந்திருக்கும் சுற்றுலா இலங்கை A அணி மற்றும் பங்களாதேஷ் A அணிகளுக்கு இடையிலான முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.
பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை A கிரிக்கெட் அணி தமது சுற்றுப் பயணத்தின் முதல் அங்கமாக பங்களாதேஷ் A கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது.
ஹொசைன், ரஹ்மான் ஆகியோரது சதங்களுடன் வலுப்பெற்றுள்ள பங்களாதேஷ் A அணி
இதன்படி, நான்கு நாட்கள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை (26) ஆரம்பமாகியிருந்தது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை A அணியின் இன்னிங்ஸை (449) அடுத்து தங்களது முதல் இன்னிங்ஸில் ஆடிய பங்களாதேஷ் தரப்பு ஆட்டத்தின் நேற்றைய மூன்றாம் நாள் நிறைவில் 360 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் வலுவான நிலையில் காணப்பட்டிருந்தது. களத்தில் சப்பீர் ரஹ்மான் 144 ஓட்டங்களுடனும், சாகிர் ஹசன் 27 ஓட்டங்களுடனும் தமது விக்கெட்டுக்களை பறிகொடுக்காமல் இருந்தனர்.
போட்டியின் இன்றைய இறுதி நாளில் இலங்கை A அணியினை விட 89 ஓட்டங்கள் மாத்திரமே பின்தங்கிக் காணப்பட்டவாறு பங்களாதேஷ் A அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்தது.
போட்டியின் இறுதி நாள் மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்
இப்போட்டியில் பொறுமையான ஆட்டத்தினை வெளிக்கொணர்ந்த ரஹ்மான் 287 பந்துகளுக்கு 16 பெளண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 165 ஓட்டங்களினைக் குவித்திருந்தார்.
சப்பீர் ரஹ்மானின் விக்கெட்டினை அடுத்து துடுப்பாட களம் வந்த பங்களாதேஷ் A அணியின் பின்வரிசை வீரர்கள் ஒருவரேனும் கூட இரட்டை இலக்க ஓட்டங்களை பெறவில்லை. இதனால் அவ்வணி 135 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து முதல் இன்னிங்ஸிற்காக 414 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
ஒரு கட்டத்தில் 386 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட பங்களாதேஷ் A அணியின் அனைத்து விக்கெட்டுக்களையும் 414 ஓட்டங்களுடன் சுருட்டிய இலங்கைத் தரப்பின் பந்துவீச்சில் சுழல் வீரர்களான லக்ஷான் சந்தகன் 5 விக்கெட்டுக்களையும், பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.
இதன் பின்னர் சிறிய முன்னிலை ஒன்றுடன் (35) தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை A அணி, போட்டியின் நான்காம் நாளுக்கான ஆட்டம் நிறைவுறும் போது 57 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 262 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் காணப்பட்டிருந்தது. இதனால், போட்டி சமநிலை அடைந்தது.
சமிந்த வாஸின் 23 வருடகால சாதனையை முறியடித்த லஹிரு குமார
இலங்கை தரப்பின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரராக வந்த அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மிகச்சிறந்த முறையிலான ஆட்டத்தினைக் காட்டி சதம் விளாசியதுடன் 165 பந்துகளுக்கு 23 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக மொத்தமாக 161 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். இது திமுத் முதல்தரப் போட்டிகளில் பெற்றுக் கொண்ட 36 ஆவது சதமாக அமைந்திருந்தது.
இதேவேளை, இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் ஒன்றினை கடந்த லஹிரு திரிமான்ன இந்த இன்னிங்ஸில் அரைச்சதம் ஒன்றுடன் (67) ஆட்டமிழக்காது நின்றிருந்தார். இதனால் இப்போட்டியின் ஆட்ட நாயகனுக்கான விருது இரண்டு இன்னிங்ஸ்களிலும் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட லஹிரு திரிமான்னவுக்கு கிடைத்தது.
ஸ்கோர் விபரம்
இலங்கை A (முதல் இன்னிங்ஸ்) – 448/8d (131.1) லஹிரு திரிமான்ன 168, சரித் அசலன்க 90, சம்மு அஷான் 70, திமுத் கருணாரத்ன 60, காலேத் அஹ்மட் 92/4, அபு ஹைடர் 69/2
பங்களாதேஷ் A (முதல் இன்னிங்ஸ்) – 411 (135) சப்பீர் ரஹ்மான் 165, மொசாதிக் ஹொசைன் 135, லக்ஷான் சந்தகன் 108/5, பிரபாத் ஜயசூரிய 83/3
இலங்கை A (இரண்டாம் இன்னிங்ஸ்) – 262/2 (57) திமுத் கருணாரத்ன 161, லஹிரு திரிமான்ன 67*
முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க