பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை A கிரிக்கெட் அணி அங்கு பங்களாதேஷ் A அணியுடன் மூன்று உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், மூன்று உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் விளையாடுகின்றது.
இலங்கையின் இக்கட்டான நிலையில் உபாதைக்குள்ளாகிய குசல் பெரேரா
மேற்கிந்திய தீவுகளுடனான…
இந்த சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக மூன்று போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெறுகின்றது. அந்தவகையில், நான்கு நாட்கள் கொண்ட இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (26) சிட்டகொங்கின் ஸாஹூர் அஹ்மத் செளத்ரி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை A அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தனது தரப்புக்கு முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை எடுத்துக் கொண்டார்.
இதன்படி, இலங்கை A அணியின் துடுப்பாட்டத்தினை அணித்தலைவர் திமுத் கருணாரத்னவும், 24 வயதான இளம் வீரர் லஹிரு மிலன்தவும் தொடங்கினர்.
இந்த தொடரில் உள்வாங்கப்பட்ட ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணத்திலக்க மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகியதால், அவரின் இடத்தினை A அணியில் நிரப்ப அழைக்கப்பட்டிருந்த லஹிரு மிலன்த எதிர்பார்த்த ஆரம்பத்தினை தராமல் வெறும் நான்கு ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.
இதன்பிறகு புதிய துடுப்பாட்ட வீரராக வந்த லஹிரு திரிமான்னவுடன் கைகோர்த்த இலங்கை A அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன இரண்டாம் விக்கெட்டுக்காக 85 ஓட்டங்களினை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன், அரைச்சதமும் விளாசி 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
கருணாரத்னவினை அடுத்து துடுப்பாட களம்நுழைந்த அஷான் பிரியஞ்சன் மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் குறிப்பிடும் படியான ஆட்டத்தினை வெளிப்படுத்தாது போயிருந்தனர். எனினும், லஹிரு திரிமான்ன அரைச்சதம் ஒன்றினை கடந்து இலங்கை தரப்புக்கு வலுச் சேர்ந்திருந்தார்.
சமிந்த வாஸின் 23 வருடகால சாதனையை முறியடித்த லஹிரு குமார
சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய…
லஹிரு திரிமான்னவின் அரைச்சதத்தோடு இலங்கை A அணி போட்டியில் முன்னேறிக் கொண்டிருந்த போது, மழையின் இடையூறு ஆட்டத்தில் உருவாக மைதான நடுவர்கள் முதல் நாளுக்கான ஆட்டம் முடிந்ததாக அறிவித்தனர்.
இதன்படி முதல் நாள் ஆட்ட நிறைவில், இலங்கை A அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 60.2 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களுடன் உறுதியான நிலையொன்றில் காணப்படுகின்றது.
களத்தில் லஹிரு திரிமான்ன 66 ஓட்டங்களுடனும், சரித் அசலன்க 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது காணப்படுகின்றனர்.
பங்களாதேஷ் A அணியின் முதல் நாளுக்கான பந்துவீச்சில் வலதுகை வேகப்பந்து வீச்சாளரான காலேத் அஹ்மட் 37 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் சுருக்கம்
இலங்கை A அணி (முதல் இன்னிங்ஸ்) – 171/4 (60.2) லஹிரு திரிமான்ன 66*, திமுத் கருணாரத்ன 60, காலேத் அஹ்மட் 3/37
இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<