இலங்கை A அணி ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அயர்லாந்து A மற்றும் ஆப்கானிஸ்தான் A அணிகளுடன் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முத்தரப்பு தொடர் நடைபெறவுள்ளதுடன், மாத இறுதியில் ஆப்கானிஸ்தான் A அணிக்கு எதிராக ஒரு நான்கு நாள் போட்டியிலும் இலங்கை A அணி விளையாடவுள்ளது.
>>டெல்லி கெபிடல்ஸ் அணியுடன் இணையும் கெவின் பீடர்சன்<<
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறும் முத்தரப்பு தொடர் ஏப்ரல் 13ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், ஏப்ரல் 25ம் திகதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.
அதனை தொடர்ந்து இலங்கை – ஆப்கானிஸ்தான் இடையிலான நான்கு நாள் போட்டி ஏப்ரல் 29ம் திகதி முதல் மே இரண்டாம் திகதிவரை நடைபெறவுள்ளது. முத்தரப்பு மற்றும் நான்கு நாள் போட்டிகள் அனைத்தும் அபு தாபியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முத்தரப்பு தொடருக்கான போட்டி அட்டவணை
- ஏப்ரல் 13 – இலங்கை A எதிர் அயர்லாந்து A – அபு தாபி
- ஏப்ரல் 15 – இலங்கை A எதிர் ஆப்கானிஸ்தான் A – அபு தாபி
- ஏப்ரல் 19 – இலங்கை A எதிர் அயர்லாந்து A – அபு தாபி
- ஏப்ரல் 23 – இலங்கை A எதிர் ஆப்கானிஸ்தான் A – அபு தாபி
- ஏப்ரல் 25 – இறுதிப்போட்டி – அபு தாபி
நான்கு நாள் போட்டி அட்டவணை
- ஏப்ரல் 29 – மே 2 – இலங்கை எதிர் A ஆப்கானிஸ்தான் A – அபு தாபி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<