அபார வெற்றியுடன் ஒருநாள் தொடரை ஆரம்பித்த இலங்கை A அணி

Sri Lanka A tour of South Africa 2024

2
Sri Lanka A tour of South Africa 2024

தென்னாபிரிக்க A அணிக்கு எதிராக அவர்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற முதலாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை A அணி 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணியானது கமில் மிஷாரவின் அரைச்சதத்துடன் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டு ஓட்டங்களை குவித்தது.

>>இலங்கை A – தென்னாபிரிக்கா A தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

கமில் மிஷார 75 பந்துகளில் 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இரண்டாவதாக களமிறங்கிய நுவனிது பெர்னாண்டோ மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 101 பந்துகளில் 97 ஓட்டங்களை விளாசிய போதும், மூன்று ஓட்டங்களால் சதத்தை தவறவிட்டார்.

இவர்கள் இருவரையும் தவிர்த்து தேசிய அணியில் இடம்பிடித்துள்ள சகலதுறை வீரர் சமிந்து விக்ரமசிங்க 39 பந்துகளில் 55 ஓட்டங்களை விளாச இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 298 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் அண்டிலே பெஹ்லுக்வாயோ மற்றும் டிரிஸ்டன் லூஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

கடினமான வெற்றியிலக்கை நோக்கிய தென்னாபிரிக்க அணிக்கு டொனி டி ஷோர்ஷி சிறந்த ஆரம்பத்தை கொடுத்து அரைச்சதம் கடந்த போதும், ஏனைய வீரர்கள் பெரிதான பங்களிப்பை வழங்கவில்லை.

இலங்கை அணியின் பந்துவீச்சில் வனுஜ சஹான் மற்றும் துஷான் ஹேமந்த ஆகியோர் தென்னாபிரிக்க அணிக்கு சவால் கொடுக்க, டொனி டி ஷோர்ஷி மாத்திரம் அரைச்சதம் கடந்து 53 ஓட்டங்களை பெற்றார். இவரை தவிர்த்து டெவால்ட் பிரேவிஸ் 39 ஓட்டங்களையும், ஈதன் பொஸ்க் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

>>இரண்டாவது டெஸ்டில் மேலும் முன்னேறிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி

அதன்படி துடுப்பாட்டத்தை பொருத்தவரை போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாபிரிக்க A அணி 36.5 ஓவர்கள் நிறைவில் 205 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

பந்துவீச்சை பொருத்தவரை வனுஜ சஹான் மற்றும் துஷான் ஹேமந்த ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்க்க, மொஹமட் சிராஸ், சமிந்து விக்ரமசிங்க மற்றும் சொனால் தினுஷ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரில் இலங்கை A அணி 1-0 என முன்னிலைப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Insert Scorecard here –

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<