இலங்கை A அணியானது பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு நான்கு நாள் போட்டிகள் மற்றும் மூன்று உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
குறித்த இந்த தொடருக்காக இலங்கை A அணி நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளதுடன், முதலாவது நான்கு நாள் போட்டி நவம்பர் 11ம் திகதி முதல் 14ம் திகதிவரை நடைபெறவுள்ளது.
>>இலங்கையை வீழ்த்தி சம்பியனாகியது ஆப்கானிஸ்தான் A அணி!<<
அதனை தொடர்ந்து இரண்டாவது நான்கு நாள் போட்டி 18ம் திகதி முதல் 21ம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த இந்த இரண்டு போட்டிகளையடுத்து நவம்பர் 25, 27 மற்றும் 29ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மூன்று போட்டிகளும் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
- முதல் நான்கு நாள் போட்டி – நவம்பர் 11 -14
- இரண்டாவது நான்கு நாள் போட்டி – நவம்பர் 18-21
- முதல் ஒருநாள் – நவம்பர் 25
- இரண்டாவது ஒருநாள் – நவம்பர் 27
- மூன்றாவது ஒருநாள் – நவம்பர் 29
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<