முதல் ஒருநாள் போட்டிக்கான இலங்கை A குழாம் அறிவிப்பு

1027

சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இலங்கை A கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் விளையாடும் இலங்கை A குழாமானது அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பணிப்பாளருக்கு அபராதம்

மொத்தம் 15 பேர் அடங்கிய இந்த குழாத்தில் அணித்தலைவர் பொறுப்பு விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான சதீர சமரவிக்ரமவிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் இலங்கை தேசிய அணி வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ, சாமிக்க கருணாரட்ன, பிரவீன் ஜயவிக்ரம, நுவனிது பெர்னாண்டோ ஆகியோரும் இந்த குழாத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர். அதேநேரம் அனுபவமிக்க மத்திய வரிசை சகலதுறைவீரரான அஞ்செலோ மெதிவ்ஸ் உம் இந்த குழாத்தில் இடம்பெற்றிருக்கின்றார்.

அஞ்செலோ மெதிவ்ஸ் நீண்ட காலமாக இலங்கையின் ஒருநாள் குழாத்தில் உள்ளடக்கப்படாத நிலையில் அவருக்கு A அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது அவருக்கு மீண்டும் இலங்கையின் ஒருநாள் அணியில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் ஒன்றினை உருவாக்கி கொடுத்திருக்கின்றது.

இலங்கை A அணியின் பிரதான வேகப்பந்துவீச்சாளர்களாக பிரமோத் மதுசான், மிலான் ரத்நாயக்க மற்றும் சாமிக்க கருணாரட்ன ஆகியோர் காணப்பட அணிக்கு நம்பிக்கை தரும் துடுப்பாட்டவீரர்களாக நுவனிது பெர்னாண்டோ, லசித் குரூஸ்புள்ளே மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் காணப்படுகின்றனர். அதேநேரம் அணியின் பிரதான சுழல்பந்துவீச்சாளர்களாக பிரவீன் ஜயவிக்ரம காணப்படுகின்றார்.

இலங்கை A – இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் வியாழன் (15) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதோடு, இப்போட்டியுடன் சேர்த்து இரு அணிகளும் மொத்தம் மூன்று உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டிகள் நடைபெறவிருக்கின்றது.

இந்தியா – அவுஸ்திரேலியா மூன்றாவது டெஸ்டில் புதிய மாற்றம்!

அணிக்குழாம்

அவிஷ்க பெர்னாண்டோ, லசித் குரூஸ்புள்ளே, நுவனிது பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், சதீர சமரவிக்ரம, சஹான் ஆராச்சிகே, சாமிக்க கருணாரட்ன, பிரவீன் ஜயவிக்ரம, பிரமோத் மதுசான், துஷான் ஹேமன்த, மிலான் ரத்நாயக்க, கவிஷ்க அஞ்சுல, லஹிரு உதார, நிப்புன் தனன்ஞய, சுமிந்த லக்ஷான்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<