பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் விளையாடவுள்ள இலங்கை A குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை A அணியானது பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு நான்கு நாள் போட்டிகள் மற்றும் மூன்று உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதன்படி, நான்கு நாள் குழாமின் தலைவராக பசிது சூரியபண்டாரவும், ஒருநாள் அணிக்கு நுவனிது பெர்னாண்டோவும் தலைவராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, இலங்கை அணிக்காகவும், இலங்கை A அணிக்காகவும் விளையாடி வருகின்ற ஓஷத பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, சஹான் ஆராச்சிகே, துஷான் ஹேமந்த மற்றும் டில்ஷான் மதுசங்க போன்ற வீரர்களும் இந்த சுற்றுப்பயணத்திற்கு பெயரிடப்பட்டுள்ளனர்.
இரு அணிகளிலும் தலா 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளதோடு, பவன் ரத்நாயக்க, சொனால் தினூஷ, தினுர களுபஹன, அஹான் விக்ரமசிங்க மற்றும் வனுஜ சஹன் ஆகிய வீரர்கள் நான்கு நாள் மற்றும் ஒருநாள் தொடருக்காக பெயரிடப்பட்ட இலங்கை A குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
- இலங்கை A – பாகிஸ்தான் A தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது
- நியூசிலாந்து தொடருக்கான இலங்கை T20i ஒரு நாள் குழாம்கள் அறிவிப்பு
- பல்லேகலையில் நடைபெறவுள்ள லங்கா T10 சுப்பர் லீக்!
அதேபோல, இறுதியாக நடைபெற்ற தென்னாப்பிரிக்க A அணிக்கெதிரான சுற்றுப்பயணத்தில் இடம்பெறாத நிபுன் தனஞ்சய, புலிந்து பெரேரா, விஷ்வ பெர்னாண்டோ, நிசல தாரக, அஷேன் டேனியல் ஆகியோர் இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றுள்ளனர். மேலும் பாகிஸ்தான் A அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்காக எஷான் மாலிங்க மற்றும் லஹிரு உதார ஆகியோர் பெயரிடப்பட்டுள்ள நிலையில், நிபுன் ரன்சிக ஒருநாள் போட்டிகளுக்கு மாத்திரம் பெயரிடப்பட்டுள்ளார்.
இதனிடையே, இலங்கை A அணி வீரர்கள் இன்று (7) நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.
இதேவேளை, இலங்கை A அணியுடன் நடைபெறவுள்ள நான்கு நாள் மற்றும் ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் A அணியின் தலைவராக 22 வயது வலது கை துடுப்பாட்ட வீரரான மொஹமட் ஹுரைரா நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா இலங்கை A அணிக்கும் பாகிஸ்தான் A (ஷஹீன்ஸ்) அணிக்கும் இடையிலான முதலாவது நான்கு நாள் போட்டி நவம்பர் 11ஆம் திகதி ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது.
நான்கு நாள் அணி:
பசிந்து சூரியபண்டார (தலைவர்), நிபுன் தனஞ்சய, ஓஷத பெர்னாண்டோ, புலிந்து பெரேரா, பவன் ரத்நாயக்க, சொனால் தினூஷ, அஹான் விக்ரமசிங்க, விஷாத் ரந்திக, வனுஜ சஹன், விஷ்வ பெர்னாண்டோ, இசித விஜேசுந்தர, சாமிக குணசேகர, நிசல தாரக, அஷேன் டேனியல் மற்றும் தினுர களுபஹன
ஒருநாள் அணி:
நுவனிந்து பெர்னாண்டோ (தலைவர்), லஹிரு உதார, கமில் மிஷார, பசிந்து சூரிபண்டார, பவன் ரத்நாயக்க, சஹான் ஆராச்சிகே, அஹான் விக்ரமசிங்க, சொனல் தினுஷஷ, தினுர களுபஹன, துஷான் ஹேமன்த, கவிந்து நதீஷான், வனுஜ சஹன், எஷான் மாலிங்க, நிஷான் மலிங்க, டில்ஷான் மதுசங்க, நிபுன் ரன்சிக
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<