எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள இலங்கை ‘A’ அணியின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான 16 பேர் கொண்ட குழாத்தை இலங்கை தேசிய தேர்வுக் குழு பெயரிட்டிருப்பதாக ThePapare.com க்கு தெரியவருகிறது.
மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் தனன்ஜய டி சில்வா குறித்த அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதோடு கடந்த ஆண்டின் 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணித் தலைவரான சரித் அசலங்க உப தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். இருவரும் ரிச்மன்ட் கல்லூரியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ThePapare.com – Sri Lanka’s No.1 Sports HUB
Watch Live Sri Lanka Cricket, Sri Lanka Rugby, Sri Lanka Footall, Basketball, athletics scores,…
ஜமைக்காவில் வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தொடரில் இலங்கை A அணி நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகள் மூன்றிலும் அதே எண்ணிக்கையிலான A நிலை ஐம்பது ஓவர்கள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. பயிற்சியாளர் அவிஷ்க குணவர்தன மற்றும் முகாமையாளர் சரித் சேனனாயக்கவுடன் இலங்கை குழாம் வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி நாட்டில் இருந்து மேற்கிந்திய தீவுகள் நோக்கி புறப்பட எதிர்பார்த்துள்ளது.
இதில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்பொழுது ஆடி வரும் இலங்கை டெஸ்ட் அணியில் உள்ள இரு வீரர்களும் இந்த அணியில் உள்ளனர். பாகிஸ்தானுடனான தொடர் முடிந்த பின் சதீர சமரவிக்ரம மற்றும் ரொஷேன் சில்வா ஆகிய இரு வீரர்களும் இக்குழாமுடன் இணைகின்றனர்.
முன் வரிசை துடுப்பாட்ட வீரர்களான ரொன் சன்திரகுப்தா, சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன மற்றும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் விமுக்தி பெரேரா ஆகியோர் இலங்கை டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காத நிலையில் இவ்வணியில் ஆடுகின்றனர். மலின்த புஷ்பகுமார மற்றும் லஹிரு குமார ஆகிய வீரர்களும் இந்த குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழாமில் 7 சிறப்பு துடுப்பாட்ட வீரர்கள், 3 சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து சகலதுறை வீரர்கள் மற்றும் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் அடங்குகின்றனர்.
பெயரிடப்பட்டிருக்கும் இந்த குழாம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
தினேஷ் சந்திமாலின் சதத்துடன் இமாலய ஓட்டங்களைப் பெற்ற இலங்கை
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் …
இலங்கை ‘A’ குழாம்
தனன்ஜய டி சில்வா (தலைவர்), சரித் அசலங்க (உப தலைவர்), சதீர சமரவிக்ரம, ரொஷேன் சில்வா, சன்துன் வீரக்கொடி, ரொன் சந்திரகுப்தா, ஷெஹான் ஜயசூரிய, தசுன் ஷானக்க, வனிது ஹசரங்க, அமில அபொன்சோ, மலின்த புஷ்பகுமார, சாமிக்க கருணாரத்ன, லஹிரு குமார, விமுக்தி பெரேரா, அசித பெர்னாண்டோ, கசுன் ராஜித
மேலதிக வீரர்கள்
பினுர பெர்னாண்டோ, நிஷான் பீரிஸ், பிரபாத் ஜயசூரிய, செஹான் மதுசன்க, நிபுன் கருணானாயக்க
போட்டி அட்டவணை (இலங்கை ‘A’ எதிர் மேற்கிந்திய ‘A’)
உத்தியோகபூர்வமற்ற முதல் டெஸ்ட்– ஒக்டோபர் 11-14 – ட்ரெலவ்னி அரங்கு
உத்தியோகபூர்வமற்ற 2ஆவது டெஸ்ட் – ஒக்டோபர் 19-22 – ட்ரெலவ்னி அரங்கு
உத்தியோகபூர்வமற்ற 3ஆவது டெஸ்ட் – ஒக்டோபர் 26-29 – சபீனா பார்க்
உத்தியோகபூர்வமற்ற முதல் ஒருநாள் – நவம்பர் 1 – சபீனா பார்க்
உத்தியோகபூர்வமற்ற 2ஆவது ஒருநாள் – நவம்பர் 3 – சபீனா பார்க்
உத்தியோகபூர்வமற்ற 3ஆவது ஒருநாள் – நவம்பர் 5 – ட்ரெலவ்னி அரங்கு