பசிந்து சூரியபண்டாரவின் தலைமையில் இலங்கை A குழாம் அறிவிப்பு

Sri Lanka 'A' tour to UAE 2025

8

ஆப்கானிஸ்தான் A அணிக்கு எதிராக நடைபெறவுள்ள நான்கு நாள் போட்டிக்கான இலங்கை A குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை A குழாத்தின் தலைவராக உள்ளூர் போட்டிகளில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்திவந்த பசிந்து சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். 

ரோயல் செலஞ்சர்ஸ் உடனான மோதலில் அணித்தலைவரினை இழக்கும் ராஜஸ்தான்

இவருடன் தேசிய சுப்பர் லீக்கில் பிரகாசித்த ரவிந்து ரசந்த, கமில் மிஷார, லஹிரு உதார மற்றும் பவன் ரத்நாயக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

அதேநேரம் நுவனிது பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம ஆகிய தேசிய அணியில் விளையாடிய முன்னணி வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர். 

அதேநேரம் பந்துவீச்சை பொருத்தவரை டில்சான் மதுசங்க, அசங்க மனோஜ், மிலான் ரத்நாயக்க, இசித விஜேசுந்தர போன்ற வீரர்களுடன் மேலதிகமாக சொனால் தினுஷ, வனுஜ சஹான், தரிந்து ரத்நாயக்க மற்றும் டிலும் சுதீர போன்ற வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். 

இலங்கை A மற்றும் ஆப்கானிஸ்தான் A அணிகளுக்கு இடையிலான நான்கு நாள் போட்டி இம்மாதம் 29ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை A குழாம் 

பசிந்து சூரியபண்டார (தலைவர்), லஹிரு உதார, ரவிந்து ரசந்த, கமில் மிஷார, நுவனிது பெர்னாண்டோ, பவன் ரத்நாயக்க, சதீர சமரவிக்ரம, சொனால் தினுஷ, தரிந்து ரத்நாயக்க, வனுஜ சஹான், இசித விஜேசுந்தர, மிலான் ரத்நாயக்க, டில்ஷான் மதுசங்க, அசங்க மனோஜ், சிரான் பெர்னாண்டோ (மேலதிக வீரர்) 

>>மேலும் கிரிக்கெட் செய்திளைப் படிக்க<<