ஆப்கானிஸ்தான் A அணிக்கு எதிராக நாளை (11) ஆரம்பமாகும் நான்கு நாள் போட்டிக்கான 15 பேர்கொண்ட இலங்கை A குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை A குழாத்தின் தலைவராக ஒருநாள் தொடரில் சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்திவந்த பசிந்து சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
டிக்வெல்ல, அவிஷ்கவின் பிரகாசிப்புடன் SLC டீம் ரெட் அணிக்கு வெற்றி
இவருடன் தேசிய குழாத்தில் இடம்பெற்றிருந்த வீரர்களான ஓசத பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ, லஹிரு உதார, சாமிக்க குணசேகர மற்றும் மிலான் ரத்நாயக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதுமாத்திரமின்றி இளம் வீரர்களான நிபுன் கருணாநாயக்க, பவன் ரத்நாயக்க, அஹான் விக்ரமசிங்க, விஷாட் ரந்திக, சொனால் தினுஷ, அஷைன் டேனியல், வனுஜ சஹான், நிசால தாரக மற்றும் நிசான் பீரிஸ் ஆகியோரும் அணியில் இடத்தை பிடித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் A மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை A குழாம்
லஹிரு உதார, ஓசத பெர்னாண்டோ, பசிந்து சூரியபண்டார (தலைவர்), நிபுன் கருணாநாயக்க, நுவனிது பெர்னாண்டோ, பவன் ரத்நாயக்க, அஹான் விக்ரமசிங்க, விஷாட் ரந்திக, சொனால் தினுஷ, சாமிக்க குணசேகர, நிசால தாரக, வனுஜ சஹான், நிசான் பீரிஸ், அஷைன் டேனியல், மிலான் ரத்நாயக்க
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<