ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை A குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை A குழாத்தின் தலைவராக தேசிய அணியின் வீரர் சதீர சமரவிக்ரம பெயரிடப்பட்டுள்ளார். இவருடன் லஹிரு உதார, கமில் மிஷார, லசித் குரூஸ்புள்ளே, நுவனிது பெர்னாண்டோ, பசிந்து சூரியபண்டார மற்றும் பவன் ரத்நாயக்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இலங்கை முக்கோணத் தொடருக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு
சுழல் பந்துவீச்சை பொருத்தவரை துஷான் ஹேமந்த, வனுஜ சஹான் மற்றும் தரிந்து ரத்நாயக்கவுடன், பகுதிநேர சுழல் பந்துவீச்சாளர்களான சஹான் ஆராச்சிகே மற்றும் சொனால் தினுஷ ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
வேகப்பந்துவீச்சாளர்களாக தேசிய அணியில் விளையாடியுள்ள டில்ஷான் மதுசங்க, மிலான் ரத்நாயக்க மற்றும் மொஹமட் சிராஸுடன் சகலதுறை வீரர் சமிந்து விக்ரமசிங்க குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் அயர்லாந்து A மற்றும் ஆப்கானிஸ்தான் A அணிகளுக்கு எதிராக இலங்கை A அணி முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் நாளை (10) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை A குழாம்
சதீரசமரவிக்ரம (தலைவர்), கமில்மிஷார, லசித்குரூஸ்புள்ளே, நுவனிதுபெர்னாண்டோ, பசிந்துசூரியபண்டார, பவன்ரத்நாயக்க, சஹான்ஆராச்சிகே, சொனால்தினுஷ, துஷான்ஹேமந்த, தரிந்துரத்நாயக்க, வனுஜசஹான், சமிந்துவிக்ரமசிங்க, டில்ஷான்மதுசங்க, மொஹமட்சிராஸ், மிலான்ரத்நாயக்க
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<