இலங்கை வீரர்களை ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்திற்கு தயார்படுத்தும் நோக்கோடு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரொன்றினை இலங்கை கிரிக்கெட் வாரியம் மாகாண ரீதியாக நடாத்தவுள்ளது.
“SLC Super Provincial Limited-Over Tournament“ என அழைக்கப்படும் இந்த தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.
இத்தொடரில் கொழும்பு, காலி, தம்புள்ளை மற்றும் கண்டி ஆகிய அணிகள் பங்கேற்கவுள்ளதோடு, தொடரின் முதற்கட்டப்போட்டிகளில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கிடையே இரு தடவைகள் மோதிக்கொள்ளவுள்ளன. இதில், புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப்பெறும் அணிகள் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பலப்ரீட்சை நடாத்தவுள்ளன.
“நாங்கள் ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்தை பற்றி பேசிக்கொண்டுள்ளோம். தேசிய அணி வீரர்களோடு சேர்த்து கிட்டத்தட்ட 60 வீரர்கள் இத்தொடரில் களமிறங்கவுள்ளனர். நடைபெறவிருக்கும் சம்பியன் கிண்ணத்திற்கான பயிற்சியாக இது இருக்கவுள்ளது“
என்று இத்தொடர் பற்றி, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் பிரதி தலைவர் K. மதிவாணன் கருத்து தெரிவித்திருந்தார்.
இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ், நிரோஷன் திக்வெல்ல, அசேல குணரத்தன மற்றும் லசித் மலிங்க ஆகிய வீரர்கள் காயம் காரணமாகவும், இந்திய பிரிமியர் லீகில் பங்கேற்பதன் காரணமாகவும் இத்தொடரில் இணைக்கப்படவில்லை.
இத்தொடரின் முதல் தொகுதி போட்டிகள் நாள் போட்டிகளாக (Day Match) இடம்பெறவுள்ளதோடு, தொடரின் இரண்டாம் தொகுதிப்போட்டிகள் (இறுதிப்போட்டி உட்பட) மின்னொளி விளக்குகளின் துணயுடன் நடாத்தப்படவுள்ளது.
அணிகளில் பங்கேற்கும் வீரர்கள் விபரம்
கொழும்பு – தினேஷ் சந்திமால், அஷான் பிரியஞ்சன், லஹிரு திரிமன்ன, திசர பெரேரா, தில்ஷான் முனவீர, அஞ்சலோ பெரேரா, கித்ருவான் விதானகே, ஷெஹான் ஜயசூரிய, சசித்ர சேனநாயக்க, கசுன் மதுசங்க, துஷ்மந்த சமீர, விஷ்வ பெர்னாந்து, ஜெப்ரி வன்டர்சேய், வனிது ஹஸரங்க, அலங்கார அசங்க
கண்டி – சாமர கப்புகெதர, மஹேல உடவத்த, தனுஷ்க குணத்திலக்க, ஹஷான் துமிந்து, சந்துன் வீரக்கொடி, சரித் அசலங்க, தில்ஹான் கூரே, சசித் பத்திரன, அமில அபொன்சோ, ரமித் ரம்புக்வெல, லஹிரு மதுசன்க, சமிந்த எரங்க, லஹிரு கமகே, நுவான் பிரதீப், இசுரு உதான
காலி – உபுல் தரங்க, திமுத் கருணாரத்ன, தனன்ஞய டி சில்வா, சதீர சமரவிக்ரம, சம்மு அஷான், யசோதா லங்கா, மினோத் பானுக்க, சத்துரங்க டி சில்வா, சீக்குகே பிரசன்ன, மலிந்த புஷ்பகுமார, அகில தனன்ஞய, தசுன் சானக்க, சமிக்க கருணாரத்ன, விக்கும் சஞ்சய, சுரங்க லக்மால்
தம்புள்ளை – குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், உதார ஜயசுந்தர, மிலிந்த சிறிவர்த்தன, அவிஷ்க பெர்னாந்து, பானுக்க ராஜபக்ச, ஹர்ஷ கூரே, லஹிரு மிலந்த, தில்ருவான் பெரேரா, சுராஜ் ரந்தீவ், லக்ஷான் சந்தகன், நுவன் குலசேகர, அசித்த பெர்னாந்து, பினுர பெர்னாந்து, லஹிரு குமார
மேலதிக வீரர்கள் – லியோ பிரான்சிஸ்கோ, சங்கீத் கூரே, சமித் துஷாந்த, ருவிந்து குணசேகர, சஞ்சிக்க ரித்ம, லஹிரு சமரக்கோன், கசுன் ராஜித, ஷெஹான் மதுசங்க
போட்டி அட்டவணை
திகதி | அணி 1 | அணி 2 | போட்டி நடைபெறும் இடம் |
ஏப்ரல் 9 | தம்புள்ளை | கொழும்பு | CCC மைதானம் |
ஏப்ரல் 9 | காலி | கண்டி | NCC மைதானம் |
ஏப்ரல் 11 | கொழும்பு | காலி | CCC மைதானம் |
ஏப்ரல் 11 | தம்புள்ளை | கண்டி | கோல்ட்ஸ் மைதானம் |
ஏப்ரல் 20 | கண்டி | கொழும்பு | NCC மைதானம் |
ஏப்ரல் 20 | காலி | தம்புள்ளை | தம்புள்ளை மைதானம் |
ஏப்ரல் 22 | காலி | கொழும்பு | R. பிரேமதாச மைதானம் (பகலிரவு போட்டி) |
ஏப்ரல் 22 | கண்டி | தம்புள்ளை | Dambulla (பகலிரவு போட்டி) |
ஏப்ரல் 24 | கொழும்பு | தம்புள்ளை | Dambulla (பகலிரவு போட்டி) |
ஏப்ரல் 24 | கண்டி | காலி | R. பிரேமதாச மைதானம் (பகலிரவு போட்டி) |
ஏப்ரல் 26 | கொழும்பு | கண்டி | R. பிரேமதாச மைதானம் (பகலிரவு போட்டி) |
ஏப்ரல் 27 | தம்புள்ளை | காலி | R. பிரேமதாச மைதானம் (பகலிரவு போட்டி) |
ஏப்ரல் 30 | இறுதிபோட்டி | R. பிரேமதாச மைதானம் (பகலிரவு போட்டி) |