இலங்கை ரக்பி அணியின் தேர்வாளர்கள், அடுத்த மாதம் ஹொங்கொங்கில் நடைபெறவுள்ள 20 வயதுக்கு உட்பட்ட ஆசிய எழுவர் (Sevens) ரக்பி தொடரில் விளையாடத் தெரிவு செய்யப்பட்டிருந்த 48 பேர் கொண்ட வீரர்கள் குழாமிலிருந்து 25 வீரர்கள் கொண்ட குழாமை தெரிவு செய்துள்ளனர். அத்தோடு, இக்குழாமும் இந்தவார இறுதியில் 15 பேர் கொண்ட குழாமாக குறைக்கப்பட்டு, 12 வீரர்களுடன் 3 மேலதிக வீரர்கள் கொண்ட இறுதி அணியாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொடரின் நடப்பு சம்பியனாக காணப்படும் இலங்கை, தனது சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள இம்முறை கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். அத்தோடு, தொடரை நடாத்தும் நாடான ஹொங்கொங் அணியுடன் இலங்கை ஆகஸ்ட் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் நடைபெறும், லீக் ஆட்டங்களில் ஒரு போட்டியில் மாத்திரமே மோதுகின்றது.
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அணியில் காணப்படும் 10 வீரர்கள் டயலொக் கழக ரக்பி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். கடற்படை அணியின் முக்கிய மூன்று வீரர்களான லஹிரு ஹேரத், தனுஜ மதுரங்க மற்றும் சுப்புன் தில்ஷான் ஆகியோரும் குழாமில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.
25 பேர்கள் கொண்ட குழாம்
1 | வினுல் பெர்னாந்து | புனித ஜோசப் கல்லூரி |
2 | சதுர செனவிரத்ன | புனித ஜோசப் கல்லூரி |
3 | ரணிது பத்மசங்க | இசிபதன கல்லூரி |
4 | அதீச வீரத்துங்க | இசிபதன கல்லூரி College |
5 | சாமோத் பெர்னாந்து | இசிபதன கல்லூரி |
6 | ஹரித் பண்டார | இசிபதன கல்லூரி |
7 | தினுக் அமெரசிங்க | புனித அந்தோனியர் கல்லூரி |
8 | யுஸ்ரான் லந்த்ரா | ஸாஹிரா கல்லூரி |
9 | தனுஜ மதுரங்க | கடற்படை விளையாட்டு கழகம் |
10 | அவிஸ்க லீ | வெஸ்லி கல்லூரி |
11 | அவந்த லீ | வெஸ்லி கல்லூரி |
12 | டியோன் டயஸ் | புனித தோமியர் கல்லூரி |
13 | நவீம் ஹெனக்கன்கனமகே | புனித தோமியர் கல்லூரி |
14 | தியத் பெர்னாந்து | புனித பேதுரு கல்லூரி |
15 | தீக்ஷன தசநாயக்க | புனித பேதுரு கல்லூரி |
16 | வாஜித் பெளமி | பொலிஸ் விளையாட்டுக் கழகம் |
17 | சந்தேஷ் ஜயவிக்ரம | பொலிஸ் விளையாட்டுக் கழகம் |
18 | சுரங்க | பொலிஸ் விளையாட்டுக் கழகம் |
19 | லஹிரு ஹேரத் | கடற்படை விளையாட்டு கழகம் |
20 | சுப்புன் தில்ஷான் | கடற்படை விளையாட்டு கழகம் |
21 | குஷன் இந்துனில் | CR & FC |
22 | மதுசங்க | |
23 | அஷ்வந்த ஹேரத் | புனித தோமியர் கல்லூரி |
24 | உதேஷ் | |
25 | ரமேஷ் பெர்னாந்து | ஹெவலொக் விளையாட்டு கழகம் |