ஹம்பாந்தோட்டை – சூரியவெவயில் முதலாவது விளையாட்டுப் பாடசாலையை நிர்மாணிக்க விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கடந்த 3ஆம் திகதி ஹம்பாந்தோட்டைப் பகுதிக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள கரப்பந்தாட்ட நட்சத்திரங்கள்
இதன்போது கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுக்களை மேற்கொள்ளும் வகையில் பிரத்தியேகமான விளையாட்டுப் பாடசாலையொன்றை சூரியவெவயில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,
”எந்தவொரு வீரருக்கும், விளையாட்டுத் திறமையை வளர்த்துக் கொள்ளவதைப் போல கல்வி நடவடிக்கைகளையும் சிறந்த முறையில் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால் மாத்திரமே அவர் ஒரு பரிபூரண வீரராக உருவாகுவார்” என குறிப்பிட்டார்.
#Suriyawewa to have the first sports school dedicated to #cricket where talented players will be able to develop their skills as well as complete their education successfully. I thank Hon. Prof G L Peiris and the ministry of education for taking the lead & initiative on this. pic.twitter.com/E3iSiO2t56
— Namal Rajapaksa (@RajapaksaNamal) October 3, 2020
இதனிடையே, நாட்டில் சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் நோக்கில் சூரியவெவயில் நிர்மாணிக்கப்படவுள்ள விளையாட்டுப் பாடசாலையானது மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் இதன்போது கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க