கொழும்பு கல்வி வலயத்தினை சேர்ந்த கிரிக்கெட் விளையாடும் 11 பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு, இன்று (28) விளையாட்டு அமைச்சினுடைய காரியாலயத்தில் இலங்கையின் விளையாட்டு அமைச்சர் மாண்புமிகு பைசர் முஸ்தபா தலைமையின் கீழ் நடைபெற்றது.
காலி ஆட்ட நிர்ணய விவகாரம் CID விசாரணைக்கு
இலங்கையில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுடனான டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றதாகத் ….
அந்த வகையில் விளையாட்டு அமைச்சினால் பகிர்ந்தளிப்பு செய்யப்பட்ட இந்த கிரிக்கெட் உபகரணங்களை கொழும்பு இந்து மகா வித்தியாலயம், அல்–ஹிக்மா கல்லூரி – கொழும்பு – 12, அல்–நாஷேர் பாடசாலை, தாருஸ்சலாம் மகா வித்தியாலயம், கொட்டாஞ்சேனை மகா வித்தியாலயம், தெமட்டகொட சென். மெதிவ் பாடசாலை, லும்பினி வித்தியாலயம் மற்றும் டட்லி சேனநாயக்க வித்தியாலயம் ஆகியவை பெற்றிருந்தன.
கிரிக்கெட் உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் இந்த நிகழ்வில் பேசியிருந்த அமைச்சர் பைசர் முஸ்தபா, “ இந்தக் காலப் பிள்ளைகள் இலத்திரனியல் உபகரணங்களான கையடக்க தொலைபேசி, மடிகணிணி போன்றவற்றினால் கவனம் சிதறடிக்கப்பட்டவர்களாக ஆகிவிடுகின்றனர். எனவே, நாங்கள் அவர்களை இப்படியான விடயங்களில் ஈடுபடுவதை குறைக்க வைத்து, விளையாட்டுக்களில் ஈடுபடுத்த வேண்டியது முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. விளையாட்டுக்களில் ஈடுபடுவது அவர்களை ஆரோக்கியமான மனிதர்களாகவும் மாற்றும். “ எனக் குறிப்பிட்டிருந்தார்.
பகிர்ந்தளிக்கப்பட்ட கிரிக்கெட் உபகரணங்களில் துடுப்பாட்ட மட்டை (Cricket Bat), துடுப்பாட்ட திண்டு (Batting Pad), கையுறை (Batting Gloves), கிரிக்கெட் பந்துகள் (Cricket Balls), விக்கெட்காப்பு சாதனம் மற்றும் ஏனைய பாதுகாப்பு சாதனங்கள் போன்றவை அடங்கியிருந்தன.
ஐ.சி.சியின் ஆலோசனைக் குழுவில் இணைக்கப்பட்ட மஹேல ஜயவர்தன
இலங்கையின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன மற்றும் இங்கிலாந்தின் அன்ட்ரூ ஸ்ட்ரோஸ் ஆகியோர் ஐ.சி.சியின்….
இந்த நிகழ்வில் கிரிக்கெட் உபகரணங்களை பெறுகின்ற குறிப்பிட்ட பாடசாலைகளின் மாணவத் தலைவர்கள்/தலைவிகள், இளம் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கொழும்பு கல்வி வலயத்தின் முக்கிய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
விளையாட்டு அமைச்சர் பைசர் முஸ்தபா தற்போது நாட்டில் அனைவராலும் பேசப்பட்டு வருகின்ற கிரிக்கெட் ஆட்ட நிர்ணய சதி பற்றியும் இந்த நிகழ்வில் கருத்து வெளியிட்டிருந்தார்.
“ விளையாட்டுக்களில் பங்கேற்கும் நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இப்போது சிலர் (விளையாட்டில்) ஊழல்களை மேற்கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் வந்திருக்கின்றன. இப்படியான செயல்களில் ஈடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வாங்கி கொடுக்கப்படும் என்பதை நான் உங்களுக்கு உறுதி செய்கின்றேன். “ என்றார்.