இலங்கையின் ஐந்து வெவ்வேறு விளையாட்டு சம்மேளனங்களுக்கு இடைக்காலத் தடையை விளையாட்டுத்துறை அமைச்சு இன்று புதன்கிழமை (27) விதித்துள்ளது.
அதன்படி இலங்கை கபடி சம்மேளனம், இலங்கை வில் வித்தை சங்கம், இலங்கை மல்யுத்த சம்மேளனம், இலங்கை பிரிட்ஜ் சம்மேளனம் மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் ஆகியவற்றுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்கான் வீரர்கள் மூவருக்கு லீக் தொடர்களில் ஆடும் வாய்ப்பு கேள்விக்குறி
அதேநேரம் குறிப்பிட்ட இந்த காலப்பகுதியில், விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர். (ரியர் அட்மிரல்) ஷெமல் பெர்னாண்டோவுக்கு, இடைநிறுத்தப்பட்ட இந்த விளையாட்டு நிர்வாக சபைகளின் நிர்வாக, பிற செயல்பாடுகளைக் கையாள்வதற்கும் மற்றும் பொருத்தமான தேர்தல்களை நடத்துவதற்குமான தகுதிவாய்ந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<