இலங்கையின் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காவும், அதனை மேம்படுத்துவதற்காகவும் முன்னாள் இராணுவ தளபதி தயா ரத்நாயக்க தலைமையில் தேசிய விளையாட்டு பேரவையின் புதிய உறுப்பினர்கள் விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய விளையாட்டு பேரவையின் புதிய உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் தலைமையில் நேற்று (17) விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் வைத்து உத்தியோபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தெரிவுப் போட்டிகள் 19ஆம் திகதி முதல் கொழும்பில்
மெய்வல்லுனர் விளையாட்டைப் பொருத்தமட்டில் …
இந்நாட்டின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக சேவையாற்றிய முப்படைகளின் உயர் அதிகாரிகள், முன்னாள் வீரர்கள், வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகளை உள்ளடக்கியதாக இந்த விளையாட்டுத்துறைப் பேரவை ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி. இலங்கையின் விளையாட்டுத்துறை சட்டவிதிமுறைகளில் 1973ஆம் ஆண்டு 25ஆவது இலக்க விளையாட்டுத்துறைச் சட்டத்தின் 04ஆவது பிரிவின் கீழ் இந்த தேசிய விளையாட்டுப் பேரவை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த இரு வருடங்களுக்கு (2019-2020) இந்த புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இதன்படி, 14 உறுப்பினர்களைக் கொண்ட புதிய விளையாட்டுத்துறைப் பேரவையின் புதிய தலைவராக முன்னாள் இராணுவ தளபதியும், தேசிய விளையாட்டுத்துறைப் பேரவையின் முன்னாள் தலைவருமான தயா ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த வைபவத்தில் கலந்துகொண்டு பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர், ”விளையாட்டுத்துறை பேரவையில் ஒருபோதும் அரசியல் ரீதியான தலையீடுகளோ, நியமனங்களோ இடம்பெற மாட்டாது. இந்த குழுவில் அங்கம் வகிப்பவர்கள் அனைவரும் இந்நாட்டின் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காக அளப்பெரிய சேவையாற்றியவர்கள். அத்துடன், இந்தக் குழுவில் அங்கம் வகிப்பவர்களின் பெயர் விபரங்களை எனது செயலாளர் கையளித்த போது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஏனெனில், இந்தக் குழுவில் இடம்பெற்ற அநேகமானவர்கள் என்னால் மிகவும் மதிக்கப்படுகின்றவர்கள்” என தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலுக்கான வேட்பாளர் பெயர் விபரங்கள் வெளியீடு
இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் ….
மேலும், ”இந்தக் குழுவில் இலங்கை அணியின் முன்னாள் வீரரரும், டெஸ்ட் தலைவர்களில் ஒருவருமான சிதத் வெத்தமுனியும் இடம்பெற்றுள்ளார். இதுதொடர்பில் நான் அவருடன் உரையாடினேன். அப்போது இலங்கையின் விளையாட்டுத்துறையை தூய்மைப்படுத்துகின்ற பொறுப்பு உங்களிடம் உண்டு என்பதை ஞாபகப்படுத்தினேன். ஏனெனில் இந்தப் பதவிகளுக்காக நியமிக்கப்பட்ட அனைவரும் தத்தமது தொழில் துறையில் பாரிய சேவையை ஆற்றியுள்ளீர்கள். எனவே, அரசியல்வாதிகளாக எமது பதவி தற்காலிகமாக இருந்தாலும், நீங்கள் அனைவரும் விளையாட்டுத்துறையை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எனது இலக்காகும்” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, புதிதாக நியமிகப்பட்ட விளையாட்டுத்துறைப் பேரவையின் முதலாவது கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டுப் பேரவையின் அங்கத்தவர்கள்
- முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க (தலைவர்)
- சாலிக்கா காரியவசம் (செயலாளர்)
- பேராசிரியர் அர்ஜுன டி சில்வா (ஊக்கமருந்த தடுப்பு மையத்தின் தலைவர்)
- தம்மிக முத்துகல (விளையாட்டுத்துறைப் பணிப்பாளர்)
- கலாநிதி லக்ஷ்மன் எதிரிசிங்க (விளையாட்டு வைத்திய நிறுவகத்தின் பணிப்பாளர்)
- சஜித் ஜயலால் (தேசிய விளையாட்டு நிறுவகத்தின் பணிப்பாளர்)
- மஞ்சுள காரியவசம் (கல்வி அமைச்சின் முன்னாள் விளையாட்டுப் பணிப்பாளர்)
- லெப்டினன்ட் கேர்னல் எஸ். கரவிட்டகே (முன்னாள் பரா ஒலிம்பிக் வீரர்)
- மொஹமட் ஹாபிஸ் மார்ஸோ (இரகசிய குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர்)
- சிதத் வெத்தமுனி (முன்னாள் கிரிக்கெட் வீரர்)
- அசங்க செனவிரத்ன் (முன்னாள் றக்பி வீரர்)
- பண்டுக்க கீர்த்தினந்த (சட்டத்தரணி)
- அசோக்க குணதிலக்க (சிரேஷ்ட விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்)
- பிரியன்த ஏக்கநாயக்க (முன்னாள் வீரர்)
- ஸ்ரீயானி குலவன்ச (முன்னாள் மெய்வல்லுனர் வீராங்கனை)
>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<