இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் மீண்டும் நடைபெறும் வரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் சகல அதிகாரங்களும், பொறுப்புகளும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
விளையாட்டுத்துறை சட்டமூலத்தை திருத்தியமைக்க அறுவர் கொண்ட குழு நியமனம்
வருடாந்த கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறுகின்ற விளையாட்டு …
விளையாட்டுத்துறை அமைச்சில் நேற்று (31) இரவு நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த தீர்மானத்தை அறிவித்தார்.
எனவே, எதிர்வரும் காலங்களில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்துப் பணிகளும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறியின் கீழ் இடம்பெறும் என அமைச்சர் கூறினார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் (30) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. அது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து நேற்று (31) நடைபெறவிருந்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக சபைத் தேர்தலை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு திலங்க சுமதிபால போட்டியிடுவது சட்டத்திற்கு முரணானது எனவும், குறித்த பதவிக்காக அவர் போட்டியிட்டால் விளையாட்டுச் சட்டத்தின் விதிகள் மீறப்படும் எனவும் தெரிவித்து நிஷாந்த ரணதுங்க கடந்த 28ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இந்த வழக்கு நேற்றுமுன்தினம் (30) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது எதிர்வரும் 14ஆம் திகதிக்கு குறித்த தேர்தலை ஒத்திவைக்கும்படி இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பயிற்சிப் போட்டியில் சகலதுறைகளிலும் திறமையினை வெளிப்படுத்திய இலங்கை வீரர்கள்
மேற்கிந்திய தீவுகளுக்கு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கச் …
இது இவ்வாறிருக்க, திலங்க சுமதிபால தலைமையிலான இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக சபையின் பதவிக்காலம் நேற்று (31) நிறைவுக்கு வந்தது.
இதனையடுத்து தேர்தல் நடைபெறும்வரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக கமல் பத்மசிறியை விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று இரவு நியமித்தார்.
இதுதொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் கருத்து வெளியிடுகையில்,
”இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதவிக்காலம் நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துவிடும். நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், தேர்தல் நடைபெறாவிட்டாலும், இலங்கை கிரிக்கெட்டின் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற வேண்டும். இதில் ஒருசிலர் இடைக்கால நிர்வாக சபையை நியமிக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். ஆனால் தேர்தல் பிற்போடப்பட்ட தருணத்தில் அவ்வாறு இடைக்கால நிர்வாக சபையை நியமிப்பது சட்டத்திற்கு முரணானது. எனினும், விளையாட்டு சட்டமூலத்திற்கு அமைய எனக்கு அதிகாரியொருவரை நியமிக்க முடியும். எனவே, விளையாட்டுத்துறை அமைச்சராக, எனது செயலாளரை இப்பதவிக்கு நியமிக்க நான் நடவடிக்கை எடுத்தேன்” என தெரிவித்தார்.
முன்னதாக, 2009ஆம் ஆண்டிலும் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காமினி லொகுகே, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் நடைபெறும் வரை தகுதிவாய்ந்த அதிகாரியாக அவருடைய செயலாளரை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்று நடைபெறவிருந்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமையகத்தில் நேற்று மதியம் நடைபெற்ற இந்த ஊடகவியலாயளர் சந்திப்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,
”நேற்றைய தினம் தேர்தலை நடாத்தி கிரிக்கெட் யாப்பில் மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானித்திருந்தோம். ஆனால் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை அடுத்து அதனை முன்னெடுக்க முடியாது போனது. அதிலும் குறிப்பாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் தருணத்தைப் பார்த்து என்னை இந்த தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்கு பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதற்காக நீதிமன்றத்தில் மனுவொன்றையும் தாக்கல் செய்து இந்த தேர்தலை பிற்போடுவதற்காக தடை உத்தரவொன்றை பெற்றுக்கொண்டுள்ளனர்.
எனினும், எனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான சாட்சியங்களை நிரூபிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் கைகூடாமல் போனதால் நான் போட்டியிடுவதை தடுப்பதற்கு முடியாமல் போனது. அதுமாத்திரமின்றி எனக்கு எதிராக அடுக்கடுக்காக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தகுதிகளையும் நான் பெற்றுள்ளேன் என்பதை தேர்தல் குழு ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.
உலக பதினொருவர் அணியை இலகுவாக வென்ற உலக சம்பியன் மேற்கிந்திய தீவுகள்
உலக பதினொருவர் அணியுடனான T20 போட்டியில் உலக சம்பியன் மேற்கிந்திய …
இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு (30) விசேட நிறைவேற்றுக் குழு கூட்டத்தை நடத்தி தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் எழுத்துமூலம் சமர்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். இதனையடுத்து நேற்று (31) காலை விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்தித்து இதுதொடர்பில் மிக நீண்ட கலந்துரையாடினோம்.
இதன்போது, எமது அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளனர். தொடர்ந்து தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு விளையாடவுள்ளனர். அந்தக் காலப்பகுதியில் லங்கன் பிரீமியர் லீக் தொடரையும் நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். எனவே எதிர்வரும் மூன்று, நான்கு மாதங்கள் இலங்கை கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியாக இருப்பதால் எமது பதவிக்காலத்தை தொடர்ந்து நீட்டிப்பதற்கு கோரிக்கை விடுத்திருந்தோம்” என்றார்.
அதுமாத்திரமின்றி, நாங்கள் ஏற்கனவே கலந்துரையாடியது போல அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தை வெல்வதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்கான வேலைத்திட்டங்களை படிப்படியாக நாம் மேற்கொண்டு வருகின்றோம். ஸ்தீரமான அணியொன்றை உருவாக்குவதே எமது பிரதான நோக்கமாகும். எனவே, இவற்றையெல்லாம் நிறைவேற்றுவதற்கு ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாக சபையை தொடர்ந்து செயற்படுவதற்கு அனுமதி அளிப்பதே சிறந்த தீர்வு என கருதுகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆசிய கிண்ண மகளிர் டி-20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் மலேஷியா …
ஆனால் தேர்தலை பிற்போடுவதற்காக தேசிய முக்கியத்துவத்தை மறந்துவிட்டு தனி ஒரு நபரின் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் எமக்கு எதிராக எடுக்கப்பட்ட பிராயத்தனம் இது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். எம்மைப் பொறுத்தமட்டில் தனிப்பட்டவர்களின் பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டு கிரிக்கெட் விளையாட்டை ஸ்தீரப்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும். எனவே அதற்கான சூழலை விளையாட்டுத்துறை அமைச்சர் ஏற்படுத்திக் கொடுப்பார் என நான் நம்புகிறேன். அத்துடன், ஐ.சி.சிக்கும் தற்போதைய நிலை குறித்து அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்.
எனவே நாட்டின் நலன்கருதி தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். இந்த தீர்ப்பு குறித்து நான் மிகவும் வேதனை அடைகிறேன். கடந்த ஒன்றரை வருடங்களாக நாங்கள் பல்வேறு பணிகளை முன்னெடுத்திருந்தோம். ஆனால் அவை அனைத்தும் இந்த தீர்ப்பின் மூலம் முடங்கி போய்விட்டது. எனினும், நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் ஏற்கின்றோம். ஆனால் இந்த தீர்ப்பினால் தோன்றியுள்ள சிக்கல் நிலை மிகவும் அபாயமனாது” என திலங்க சுமதிபால இதன்போது தெரிவித்திருந்தார்.