இலங்கையின் முன்னாள் குறுந்தூர ஓட்ட வீரரான ஷெஹான் அம்பேப்பிட்டிய, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள உயர் ஆற்றல் வெளிப்பாடு செயற்குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, தெற்காசியின் முன்னாள் நீச்சல் ஜாம்பவானான ஜுலியன் போலிங் தலைமையிலான இரண்டாவது குழுவில் ஷெஹான் அம்பேப்பிட்டிய இடம்பிடித்துள்ளமை சிறப்பம்சமாகும்.
தேசிய தேர்வுக் குழுவின் தலைவராக இராணுவ தளபதி
இந்தக் குழுவின் இலங்கையின் நட்சத்திர மோட்டார் பந்தய வீரரான டிலன்த மாலகமுவவும் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ரீதியில் அதிகளவான பதக்கங்களை வெற்றி கொள்கின்ற வீர வீராங்கனைகளை உருவாக்கும் நோக்கிலும், இலங்கையில் விளையாட்டுத்துறையை உயரிய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் மேலும் ஒரு விளையாட்டுத்துறை செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
உயர் ஆற்றல் வெளிப்பாட்டு செயற்குழுவாக பெயரிடப்பட்டுள்ள இந்தக் குழு இரண்டு பிரிவுகளைக் கொண்டதாக பெயரிடப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இதன்படி, குறித்த உயர் ஆற்றல் வெளிப்பாட்டு செயற்குழுவின் முதல் பிரிவின் தலைவராக தேசிய விளையாட்டுப் பேரவையைச் சேர்ந்த சஞ்சீவ விக்ரமநாயக்கவும், இரண்டாவது பிரிவின் தலைவராக முன்னாள் நீச்சல் வீரரான ஜுலியன் போலிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய ஒலிம்பிக் குழு, தேசிய விளையாட்டுத்துறை பேரவை, விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து நாடு பூராகவும் உள்ள ஆற்றல் மிக்க 20 விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு சர்வதேச அடைவு மட்டங்களை தெரிவுசெய்து அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும், பயிற்சியாளர்களுக்குத் தேவையான உதவிகளையும் பெற்றுக் கொடுப்பதுதான் இந்த குழுவின் முக்கிய பணியாக அமையவுள்ளது.
Today the High Performance Committee was appointed it was categorized into 2 tiers based on performance. Together with NOC, National Sports Council & the Department of Sports Development they will oversee the identification of talent & the upliftment of sporting standards in #LKA pic.twitter.com/hiAbnym9FD
— Namal Rajapaksa (@RajapaksaNamal) October 29, 2020
அத்துடன், வீரர்களுக்கு வெளிநாட்டு பயிற்சிகள், விளையாட்டு உபகரணங்கள், போசாக்கு உணவுகள், மருந்துகள் உள்ளிட்ட அனைத்து தேவைகள் தொடர்பிலும் இந்தக் குழு ஆராயவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
தேசிய விளையாட்டுத்துறை பேரவை உறுப்பினர்கள் விபரம்:
முதலாவது குழு: சஞ்சீவ விக்ரமநாயக்க (தலைவர்), யஸ்வன்த் முத்தெட்டுவேகம, ஜூலியன் போலிங், மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) ரஜித்த அம்ப்பேமொஹொட்டி, அமல் எதிரிசூரிய, அசங்க செனவிரத்ன, ரெயர் அட்மிரல் ஷெமால் பெர்னாண்டோ
இரண்டாவது குழு: ஜூலியன் போலிங் (தலைவர்), யஸ்வன்த் முத்தெட்டுவேகம, டிலன்த மாலகமுவ, பாஸில் ஹுசெய்ன், அமல் எதிரிசூரிய, ருவன் கேரகல, ஷெஹான் அம்பேபிட்டிய
மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க…