இலங்கை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மாபெரும் விளையாட்டுத் திருவிழாவின் (Sports Fiesta) T10 கிரிக்டெக் போட்டிகளில் பங்கேற்கும் அணி விபரங்களை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
ஐந்து அணிகள் பங்கேற்கவுள்ள இந்த தொடரானது எதிர்வரும் 16ம் திகதி முதல் 18ம் திகதிவரை கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மற்றும் புளூம்பீல்ட் மைதானங்களில் நடைபெறவுள்ளன.
இலங்கைத் தொடரினை முழுமையாக இழக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தலைவர்
இதில் கொழும்பு, தம்புள்ள, காலி, கண்டி மற்றும் ஜப்னா என அணிகள் பெயரிடப்பட்டுள்ளதுடன் அணிகளின் தலைவர்களாக முறையே சரித் அசலங்க, பானுக ராஜபக்ஷ, துனித் வெல்லாலகே, நிரோஷன் டிக்வெல்ல மற்றும் ஜனித் லியனகே ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த தொடரில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வீரர்களை தவிர்த்து ஏனைய முன்னணி தேசிய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
அதுமாத்திரமின்றி தமிழ்பேசும் வீரர்களான மொஹமட் சிராஸ், மொஹமட் சமாஸ் மற்றும் மேர்பின் அபினாஷ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். சிராஸ் மற்றும் அபினாஷ் ஆகியோர் தம்புள்ள அணிக்காகவும், மொஹமட் சமாஸ் ஜப்னா அணிக்காகவும் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<