அண்மைக் காலமாக இலங்கை அணி சந்தித்து வருகின்ற தொடர் தோல்விகளுக்கு கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்களால் தொடர்ந்து வெளியிடப்பட்டுவரும் எதிர்ப்பின் காரணமாக கவலைக்கும், மனச்சங்கடத்திற்கும் மத்தியில் கிரிக்கெட் தெரிவுக் குழு பதவிலிருந்து இராஜினாமாச் செய்வதாக சனத் ஜயசூரிய தலைமையிலான தெரிவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சனத் தலைமையிலான தெரிவுக்குழுவினர் தமது இராஜினாமா குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், மிகவும் கவலையுடனும், கண்ணீருடனும் தெரிவுக் குழுவிலிருந்து பதவி விலக நேரிட்டதாக தெரிவுக் குழுவின் தலைவரும், இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சனத் உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு ராஜினாமா
தற்போது நடைபெற்றுவரும் இந்தியாவுடனான தொடரை அடுத்து தமது பதிவியில் இருந்து…
சனத் ஜயசூரிய தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழு தமது இராஜினாமா கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் நேற்று கையளித்திருந்தனர். இந்நிலையில் குறித்த இராஜினாமாக் கடித்தத்தில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
கடந்த காலங்களில் எமது அணி பெற்றுக்கொண்ட தொடர் தோல்விகளையடுத்து இலங்கை கிரிக்கெட்டின் தெரிவுக் குழு உறுப்பினர்களான எமக்கு எதிராக பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. எனவே இவையனைத்தையும் கருத்திற்கொண்டு தற்போது நடைபெற்றுவருகின்ற இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடரிற்குப் பிறகு உடன் அமுலுக்கு வரும் வகையில் தெரிவுக் குழு பதவிகளிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்தோம்.
வெவ்வேறு தரப்பினரால் தெரிவிக்கப்பட்டு வருகின்ற மிகவும் கீழ்த்தரமான, மோசமான விமர்சனங்களால் இலங்கை கிரிக்கெட்டின் நற்பெயருக்கு ஏற்படுகின்ற கலங்கத்தை தவிர்த்துக் கொள்ளும் நோக்கிலும், இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
கிரிக்கெட் விளையாட்டின் போது இடைக்கிடையே ஏற்படுகின்ற பின்னடைவுகளைப் பார்த்து ஓரு சிலரின் தூண்டுதல் காரணமாக போட்டிகளைக் காண வருகின்ற எமது ரசிகர்களுக்கு மத்தியில் ஆவேசத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர். இதனால் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடுவதுடன், இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தெரிவுக் குழுவினர் மனநிலையை பெரிதும் பாதிக்கின்ற விடயமாகவும் அது மாறிவிடும். அத்துடன் எமது நாட்டின் கிரிக்கெட் விளையாட்டின் உண்மையான சுயரூபத்தை சர்வதேசத்துக்கு மத்தியில் வெளிச்சம் இட்டு காட்டுவது மாத்திரமல்லாது ஒரு தவறான கருத்தையும் அவர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும் அது காரணமாக அமைந்துவிடும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியின் இறுதி தருணத்தில் போட்டியைக் காண வந்த ரசிகர்கள் நடந்துகொண்ட விதம் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் நாம் சந்தித்த மிகவும் மோசமான சம்பவமாகும்.
ஒரு சிலரால் தூண்டிவிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த அநாகரீக செயலினால் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களில் குரோதத்தையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தி இலங்கை கிரிக்கெட்டின் அபிமானத்தை சீர்குலைப்பதற்கு முன்னர் எமது இராஜினாமாவை அறிவிக்க தீர்மானித்தோம். இதனால் எமது கிரிக்கெட் விளையாட்டு மாத்திரமல்லாது இந்நாட்டின் கலாசார பாரம்பரியம் மற்றும் கௌரவத்தை பாதுகாக்க முடியும் என நம்புகிறோம்.
மற்றைய அணிகளிடமிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும் : சங்கக்கார
தற்போது வெற்றிகரமாக அமையாத இலங்கை கிரிக்கெட் அணி குறித்து பலராலும் பலவிதமான கருத்துக்கள்…
கடந்த 15 வருடங்களாக எமது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தார், சொந்த வியாபாரங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு தியாகங்களை மேற்கொண்டோம். இந்நாட்டுக்காக விளையாடிய வீரர்களாக எமது அனுபவங்களை வைத்துத்தான் ஒவ்வொரு முடிவுகளும் எடுக்கப்பட்டன.
அதிலும் குறிப்பாக கடந்த காலங்களில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த பல வீரர்களின் அடிக்கடியான உபாதைகளால் அணித் தெரிவின்போது மிகப் பெரிய சவால்கiள ஏற்படுத்தின. இதனால் பலம் வாய்ந்த எதிரணிகளுக்கு எதிராக விளையாடுகின்ற சிறந்த வீர்ரகளை தொடர்ந்து அணியில் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போனது. ஆனால் எமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை இந்நாட்டுக்காக செய்கின்ற உன்னதமான சேவையாகக் கருதி அணியின் வெற்றிக்காக செயற்பட்டோம்.
எனவே, பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மிகவும் கவலை மிக்க மனதுடனும், கண்ணீருடனும் தெரிவுக்குழு பணியிலிருந்து விலகிச் சென்றாலும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் முன்னெடுக்கவுள்ள அனைத்து செயற்றிட்டங்களுக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்த்துள்ளோம். அத்துடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய செயற்றிட்டங்கள் வெற்றியைக் கொடுக்காவிட்டாலும், எதிர்வரும் காலங்களில் இவையனைத்துக்கும் சிறந்த பலன் கிடைக்கும். கிரிக்கெட் உலகில் பல சாதனைகளைப் படைத்த பழைய இலங்கை அணியை விரைவில் எதிர்பாக்கலாம் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
இந்நிலையில், தாம் விளையாடுகின்ற அனைத்து போட்டிகளிலும் 100 சதவீத பங்களிப்பினை வழங்கி வருகின்ற இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு இத்தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களிடம் உள்ள திறமைகள் தொடர்பில் என்றுமே நம்பிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என ரசிகர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதியாக, எமது பணிகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும், விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் இலங்கை கிரிக்கெட்டின் உயிர் நாடியாக உள்ள எமது ரசிகர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், இலங்கை கிரிக்கெட்டுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
வெளியே பாய்வதற்கு முன்னால் அது எப்பொழுதும் இருட்டாகவே இருக்கும் (it’s always darkest, before the dawn) என்பதை ஞாபகப்படுத்தி எமது இராஜினாமாக்க கடிதத்தை இவ்வாறு முன்வைக்கின்றோம்;.
நன்றி.
-முடிவு-
மேற்கண்டவாறே, தெரிவுக் குழுவின் இறுதிக் கடிதம் அமைந்திருந்தது.
தோற்றாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு இலங்கையன் என்று
ஆக்கம் – S.டெனிக்சன் பல சுவாரஷ்யமான ஆட்டங்களுக்கு சொந்தக்கார அணி ரசிகர்களுக்கு…
சனத் ஜயசூரிய தலைமையிலான தெரிவுக்குழுவினர் கடந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்டனர். அன்று முதல் இலங்கை கிரிக்கெட் 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர் தோல்விகளைச் சந்தித்து தரவரிசையில் பின்னடைவையும் சந்தித்தது.
இதில் பங்களாதேஷ், ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுடன் மாத்திரம் வெற்றிகொண்டதுடன், வரலாற்றில் முதற்தடவையாக ஜிம்பாப்வே அணிக்கெதிராக ஒருநாள் தொடரை இழந்து இலங்கை அவமானத்தையும் சந்தித்தது.
இதன்படி கடந்த 15 மாதங்களில் 31 ஒருநாள் போட்டிகளுக்காக 41 வீரர்கள் இலங்கை அணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர். இதில் T-20 போட்டிகளுக்கு 30 வீரர்களும், டெஸ்ட் போட்டிகளுக்காக 24 வீரர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கிரிக்கெட் சபையைக் கலைத்து இடைக்கால நிர்வாக சபையை உருவாக்கி புதிய தெரிவுக்குழுவை நியமிக்குமாறும் தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இலங்கையின் முன்ளாள் கிரிக்கெட் அணித் தலைவரும் உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த அணியின் தலைவருமான அர்ஜுன ரணதுங்க விசேட கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ள நிலையில் சனத் ஜயசூரிய தலைமையிலான தெரிவுக் குழுவினரின் இராஜினாமா கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சனத் ஜயசூரிய தலைமையிலான தெரிவுக் குழுவில் அணி முகாமையாளர் அசன்க குருசிங்க, ரஞ்சித் மதுரசிங்க, எரிக் உபஷான்த, ரொமேஷ் களுவித்தாரண ஆகியோர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்ககது.
இதன் பிரகாரம் இந்திய கிரிக்கெட் அணியுடனான கிரிக்கெட் தொடர் முடிவில் இந்த இராஜினாமா அமுலுக்கு வரவுள்ளது.