மீண்டும் ஒரு இறுதி போட்டியை தோற்ற இங்கிலாந்து

9
Euro 2024 Final

பெர்லின் ஒலிம்பியாஸ்டேடியனில் நடந்த யூரோ 2024 இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2க்கு 1 என வீழ்த்தி ஸ்பெயின் சம்பியன் பட்டம் வென்றது.

கரேத் சவுத்கேட்டின் இங்கிலாந்து அணியானது, ஸ்பெயின் அணியின் மைக்கேல் ஓயர்சபாலின் 86ஆவது நிமிட வெற்றி கோலினால் தோற்கடிக்கப்பட்டு, மேலும் தொடர்ந்து இரண்டாவது ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை மனவேதனைக்குள்ளாக்கியது. இதற்கு முன்  2021 இல் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இத்தாலி அணியிடம் இங்கிலாந்து தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினின் இளம் நட்சத்திர முன்கள வீரர்கள் ஒன்றிணைந்து இடைவேளைக்கு இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு (47) அவ்வணிக்கு முன்னணியை வழங்கினர். லாமின் யமலின் பந்து பரிமாற்றத்தை  நிகோ வில்லியம்ஸ் ஸ்பெயின் அணிக்கு கோலாக மாற்றினார்.

இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் மீண்டும் யூரோ கிண்ணத்தில் சோபிக்க தவறினார். இதனால் அவர் இரண்டாம் பாதியிலேயே மாற்றப்பட்டார்.  மேலும் அந்த நேரத்தில் இங்கிலாந்து அணியின்  கோபி மைனூவுக்கு பதிலாக மாற்று வீரராக வந்த கோல் பால்மர் 73ஆவது நிமிடத்தில் ஜூட் பெல்லிங்கமின் பந்து பரிமாற்றத்தை கோலாக மாற்றினார்.

எவ்வாறாயினும், ஸ்பெயினுக்கு மார்க் குகுரெல்லாவின் பந்து பரிமாற்றத்தை  ஓயர்சபால் கோல் கம்பத்துக்குள் புகுத்தியதால் நான்கு நிமிடங்களில் வெற்றியைப் பறித்தது ஸ்பெயின்.

இந்த தோல்விக்கு பின்னர் ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில், பலம் பொருந்திய இங்கிலாந்து அணி  1966 க்கு பின்னர் எந்த யூரோ கிண்ணத்தையும் வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.