15வது ஐரோப்பிய கிண்ண (யூரோ) கால்பந்து போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ‘டி’பிரிவில் உள்ள ஸ்பெயின் – துருக்கி அணிகள் மோதின.
இதில் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றது. அல்வாரா மொரடா 2 கோல்களும் (34-வது நிமிடம், 48-வது நிமிடம்), நொலிடோ ஒரு கோலும் (37-வது நிமிடம்) அடித்தனர். பதிலுக்கு துருக்கி அணியால் ஒரு கோல் கூட போட முடியாமல் போனது.
இது ஸ்பெயின் பெற்ற 2ஆவது வெற்றியாகும். அது தொடக்க ஆட்டத்தில் செக் குடியரசுவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. இதன் மூலம் ஸ்பெயின் ‘நாக்அவுட்’சுற்றுக்கு முன்னேறியது.
இது துருக்கி அணி சந்தித்த 2ஆவது தோல்வியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவிடம் தோற்று இருந்தது. இதன் மூலம் அந்த அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசு – குரோஷியா அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
‘இ’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் இத்தாலி 1-0 என்ற கோல் கணக்கில் சுவீடனை தோற்கடித்தது. 2ஆவது வெற்றி பெற்றதன் மூலம் அந்த அணி 2ஆவது சுற்றுக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் பெல்ஜியம் – வடக்கு அயர்லாந்து, அங்கேரி – ஐஸ்லாந்து, போர்ச்சுக்கல் – ஆஸ்திரியா அணிகள் மோதுகின்றன.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்