நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு விழாவில் இன்றைய தினம் (6) ஆரம்பமாகிய நீச்சல் போட்டிகளில் இலங்கை 3 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
முதலாவது தெற்காசிய நீர்சார் சம்பியன்சிப்பில் இந்தியா முதலிடம் : இலங்கைக்கு இரண்டாமிடம்
இலங்கை நீர்சார் வீளையாட்டு……………
இலங்கையின் மிகச்சிறந்த நீச்சல் வீரர் என வர்ணிக்கப்படும் மெதிவ் அபேசிங்க இன்றைய தினம் இலங்கைக்காக 2 தங்கப் பதக்கங்களை வென்றுக்கொடுத்ததுடன், ஆண்களுக்கான 4x100M சாதாரண நீச்சல் (Freestyle) அஞ்சலோட்டத்திலும் பங்குபற்றி இலங்கைக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கத்தை வென்றுக்கொடுத்தார்.
மெதிவ் அபேசிங்க ஆண்களுக்கான 200 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியில் தன்னுடைய முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். இவர் போட்டி நேரத்தை, 1.48.92 நிமிடங்களில் நிறைவுசெய்திருந்தார்.
இதற்கு அடுத்தப்படியாக ஆண்களுக்கான 100 மீற்றர் வண்ணத்துபூச்சு நீச்சல் (Butterfly) போட்டியில் கலந்துக்கொண்டு, குறுகிய நேரத்தில் தன்னுடைய இரண்டாவது தங்கப் பதக்கத்தை இலங்கைக்காக பெற்றுக்கொடுத்தார். இவர் போட்டி நேரத்தை 53.65 செக்கன்களில் நிறைவுசெய்து இந்த வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
அத்துடன், நீச்சல் போட்டிகளில் தங்களுடைய மூன்றாவது தங்கத்தை ஆண்களுக்கான 4x100M சாதாரண நீச்சல் போட்டியில் இலங்கை அணி பெற்றுக்கொண்டது. போட்டித் தூரத்தை இலங்கை அணி 3.19.07 நிமிடங்களில் கடந்து வெற்றியை பெற்றிருந்தது. போட்டியில், இலங்கை அணி சார்பில், ஸ்டீபன் பெரேரா, கவிந்ர நுகவெல, அகலங்க பீரிஸ் மற்றும் மெதிவ் அபேசிங்க ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
அதேநேரம், இன்றைய நீச்சல் நிகழ்வில் இலங்கை அணி ஒரு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொண்டது. பெண்களுக்கான 4×100 மீற்றர் சாதாரண அஞ்சல் நீச்சல் போட்டியில் இலங்கை அணி இந்த பதக்கத்தை வெற்றிக்கொண்டது.
Photos: Day 5 | South Asian Games 2019
ThePapare.com | Dinushki Ranasinghe | 05/12/2019 Editing and re-using…………….
இதேவேளை, இன்றைய தினம் இலங்கை நீச்சல் போட்டிகளில் மூன்று வெண்கலப்பதக்கங்களை வெற்றிக்கொண்டது. ஆண்களுக்கான 200 மீற்றர் ப்ரெஸ்ட்ரொக் (Breast-stroke) நீச்சல் போட்டியில் கிரன் ஜாசிங்க, பெண்களுக்கான 200 மீற்றர் ப்ரெஸ்ட்ரொக் நீச்சல் போட்டியில் ரமுதி சமரபோன் மற்றும் பெண்களுக்கான 100 மீற்றர் வண்ணத்துபூச்சு (Butterfly) நீச்சல் போட்டியில் அனிகா கபூர் (1.04.85 நிமிடம்) ஆகியோர் மேற்குறித்த வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தனர்.
>>தெற்காசிய விளையாட்டு விழா கொடர்பான மேலதிக தகவல்களை படிக்க<<