தெற்காசிய விளையாட்டு விழாவின் ஆடவர் T20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியினை பங்களாதேஷ் 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.
தங்கப் பதக்கத்தை தவறவிட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
தெற்காசிய விளையாட்டு விழாவின் T20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் கிரிக்கெட்…
அதோடு, இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் தெற்காசிய விளையாட்டு விழாவின் ஆடவர் T20 கிரிக்கெட் தொடருக்கான தங்கப் பதக்கத்தினை பங்களாதேஷ் வெல்ல, இறுதிப் போட்டியில் தோல்வியினை தழுவிய இலங்கை அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்திருக்கின்றது.
ஆடவர் T20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (9) கிர்த்திப்பூர் நகரில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் தரப்பு இலங்கை வீரர்களை முதலில் துடுப்பாட பணித்தது.
பின்னர், இந்த ஆடவர் T20 கிரிக்கெட் தொடரில் எந்த தோல்விகளையும் சந்திக்காத இலங்கை அணி, அதே நம்பிக்கையுடன் இறுதிப் போட்டியில் தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது.
எனினும், இலங்கை அணிக்கு எதிர்பார்த்த ஆரம்பம் அமையவில்லை. இலங்கை அணியின் நம்பிக்கைக்குரிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான பெதும் நிஸ்ஸங்க மற்றும் நிஷான் மதுஷ்க ஆகியோர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், பெதும் நிஸ்ஸங்க 22 ஓட்டங்கள் எடுக்க, நிஷான் மதுஷ்க 16 ஓட்டங்களைப் பெற்றார்.
இதன் பின்னர் புதிய துடுப்பாட்ட வீரர்களாக வந்த கமிந்து மெண்டிஸ், லஹிரு குரூஸ்புள்ளே ஆகியோரும் துடுப்பாட்டத்தில் ஏமாற்றினர். இதன் காரணமாக தொடர்ந்தும் தடுமாறிய இலங்கை அணி 20 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 122 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் பின்வரிசையில் போராடிய சம்மு அஷான் 25 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடிய ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறினார்.
இதேநேரம், பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ஹசன் மஹ்மூட் 3 விக்கெட்டுக்களை சாய்க்க தன்வீர் இஸ்லாம் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 123 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய பங்களாதேஷ் அணி துடுப்பாடியது.
இலங்கை – பாகி. டெஸ்ட் தொடரில் சிறப்பு விருந்தினராக வர்ணபுர, ஜாவேட்
பாகிஸ்தான் மண்ணில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையில்…
அவ்வணிக்காக சயீப் ஹஸன் மற்றும் அணித்தலைவர் நஜ்முல் ஹசன் ஷன்டோ ஆகியோர் துடுப்பாட்டத்தில் ஜொலிக்க அவ்வணி போட்டியில் 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 125 ஓட்டங்களை எடுத்தது வெற்றியைப் பதிவு செய்தது.
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக சிறப்பாக செயற்பட்ட நஜ்முல் ஹொசைன் ஷன்டோ ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்கள் எடுக்க, சயீப் ஹஸன் 33 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பு தங்கப் பதக்கம் வெல்ல காரணமாக இருந்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக கமிந்து மெண்டிஸ் மற்றும் சசிந்து கொலம்பகே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை ஆடவர் – 122 (20) சம்மு அஷான் 25(20), பெதும் நிஸ்ஸங்க 22(24), ஹசன் மஹ்மூட் 20/3(4), தன்வீர் இஸ்லாம் 28/2(4)
பங்களாதேஷ் ஆடவர் – 125/3 (18.1) நஜ்முல் ஹொசைன் ஷன்டோ 35(28)*, சயீப் ஹஸன் 33(30), கமிந்து மெண்டிஸ் 9/1(2), சசிந்து கொலம்பகே 33/1(4)
முடிவு – பங்களாதேஷ் ஆடவர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி