நேபாளத்தின் கத்மண்டுவில் இடம்பெறும் தெற்காசிய விளையாட்டு விழாவின் T20 கிரிக்கெட் தொடரில் இலங்கை ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகள் தத்தமது முதல் போட்டிகளில் இன்று (3) விளையாடின.
இப்போட்டிகளில் இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுக்களால் நேபாளத்திற்கு எதிராக வெற்றியினை பதிவு செய்ய, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பங்களாதேஷிடம் தோல்வியடைந்திருக்கின்றது.
ஆடவர் கிரிக்கெட்
தெற்காசிய விளையாட்டு விழாவின் ஆடவர் T20 கிரிக்கெட் தொடரில் இலங்கையுடன் சேர்த்து நேபாளம், மாலைத்தீவு, பூட்டான் மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றின் கிரிக்கெட் அணிகள் பங்கெடுக்கின்றன.
மேலும் இரு பங்களாதேஷ் வீரர்களுக்கு ஒரு வருட தடை
பங்களாதேஷ் அணியின் வீரர் சஹாடட் ……..
இந்நிலையில் இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி தொடரின் முதல் போட்டியில் நேபாளத்தினை எதிர் கொண்டிருந்தது. இப்போட்டி கிர்க்பூர் நகரில் ஆரம்பமானது.
போட்டியில் இலங்கை தமது 23 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியுடன் களமிறங்க நேபாளம் அதன் தேசிய கிரிக்கெட் அணியுடன் மோதலுக்கு தயாரானது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கைத் தரப்பு தலைவர் சரித் அசலன்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை நேபாள அணிக்கு வழங்கினார்.
இதன்படி நேபாள கிரிக்கெட் அணி தீபக் ஐரியின் அதிரடி அரைச்சதத்தோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களைக் குவித்தது.
நேபாள அணியின் துடுப்பாட்டம் சார்பில் அரைச்சதம் பெற்ற தீபக் ஐரி 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 72 ஓட்டங்கள் குவித்தார். அதேநேரம், இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் கமிந்து மெண்டிஸ் 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க கவிஷ்க அஞ்சுல, துவிந்து திலகரட்ன மற்றும் அசித்த பெர்னாந்து ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டினர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 173 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணிக்கு சம்மு அஷான் மற்றும் நிஷான் மதுஷ்க ஆகியோர் தமது அதிரடி துடுப்பாட்டம் மூலம் உதவினர்.
SAG இல் பாலுராஜுக்கு முதல் பதக்கம் : ரனுக மூலம் இலங்கைக்கு முதல் தங்கம்
நேபாளத்தின் கத்மண்டுவில் நடைபெற்று வருகின்ற………..
இந்த இரண்டு வீரர்களினதும் துடுப்பாட்ட உதவியோடு இலங்கை அணி போட்டியின் வெற்றி இலக்கினை 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 175 ஓட்டங்களுடன் அடைந்தது.
இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்த முக்கிய வீரர்களில் ஒருவரான சம்மு அஷான் அரைச்சதம் பூர்த்தி செய்து 44 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் 4 பௌண்டரிகள் அடங்கலாக 72 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேநேரம், நிஷான் மதுஷ்க 42 பந்துகளில் 46 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
நேபாள அணியின் பந்துவீச்சு சார்பில் பவன் சர்ரப் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது.
போட்டியின் சுருக்கம்
நேபாளம் – 172/2 (20) தீபக் ஐரி 72(44)*, கமிந்து மெண்டிஸ் 34/2(4)
இலங்கை – 175/4 (19.1) சம்மு அஷான் 72(44)*, நிஷான் மதுஷ்க 46(42), பவன் சர்ரப் 20/2(2)
முடிவு – இலங்கை 6 விக்கெட்டுக்களால் வெற்றி
மகளிர் கிரிக்கெட்
மகளிர் கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியினை எதிர்கொண்ட போட்டி போக்காராவில் ஆரம்பமானது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் தரப்பு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினை முதலில் துடுப்பாடுமாறு பணித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்கள் எடுத்தது.
பாகிஸ்தானை வைட்வொஷ் செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி
சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் …………
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் உமேஷா திமாஷினி அரைச்சதம் பெற்று 49 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களைப் பெற்றார். அதேநேரம், இலங்கை மகளிர் அணித்தலைவி ஹர்சித மாதவி 33 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.
அதேநேரம், பங்களாதேஷ் மகளிர் அணியின் பந்துவீச்சு சார்பில் நஹிதா அக்தர் 4 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 123 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு சஞ்சிதா இஸ்லாம் அரைச்சதம் பெற்று உதவினார்.
இவரின் அரைச்சத உதவியோடு பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களுடன் அடைந்தது.
பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றியை உறுதி செய்த சஞ்சிதா இஸ்லாம் 45 பந்துகளுக்கு 51 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார்.
இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் உமேஷா திமாஷினி, சச்சினி நிசன்சல மற்றும் தரிக்க செவ்வந்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை மகளிர் – 122/6 (20) உமேஷா திமாஷினி 56(49), ஹர்சித மாதவி 33(30), நஹிதா அக்தர் 32/4(4)
பங்களாதேஷ் மகளிர் – 126/4 (20) சஞ்சிதா இஸ்லாம் 51(45)*, தரிக்கா செவ்வந்தி 18/1(4)
முடிவு – இலங்கை மகளிர் 4 விக்கெட்டுக்களால் வெற்றி