தெற்காசிய கூடைப்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப்பில் இன்று (18) நடைபெற்ற மாலைத்தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை அணி 77-45 புள்ளிகள் என்ற கணக்கில் வெற்றிபெற்றது.
போட்டியில், பலமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணிக்கு மிகச்சிறந்த ஆரம்பம் கிடைத்தது. முதல் காற்பகுதியில் இலங்கை அணி 21-8 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலைப்பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியை இலகுவாக வீழ்த்திய இந்தியா!
தொடர்ந்து இரண்டாவது காற்பகுதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி, மேலும் 22 புள்ளிகளை பெற்று 43 புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன், மாலைத்தீவுகள் அணி மொத்தமாக 23 புள்ளிகளை பெற்றுக்கொண்டது.
மீண்டும் சிறந்த ஆட்டத்தை இலங்கை அணி வெளிப்படுத்த, மூன்றாவது காற்பகுதியில் 60 புள்ளிகளை பெற்றுக்கொள்ள, மாலைத்தீவுகள் அணி 32 புள்ளிகளை பெற்றுக்கொண்டது.
பின்னர், 28 புள்ளிகள் என்ற முன்னிலையுடன் நான்காவது காற்பகுதியில் களமிறங்கிய இலங்கை அணி, மேலும் 17 புள்ளிகளை பெற்று, 77 புள்ளிகளுடன் ஆட்டத்தை நிறைவுசெய்ய மாலைத்தீவுகள் அணி 45 புள்ளிகளை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இதன்மூலம் 32 புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை அணி இலகுவாக வெற்றியை பதிவுசெய்தது.
தெற்காசிய கூடைப்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப்பில், முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியிருந்த இலங்கை அணி, இரண்டாவது போட்டியில் இந்திய அணியுடன் தோல்வியடைந்திருந்தது. எவ்வாறாயினும், இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் முதல் சுற்றின் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.
சுருக்கம்
- முதல் காற்பகுதி – இலங்கை 21-8 மாலைத்தீவுகள்
- 2வது காற்பகுதி – இலங்கை 43-23 மாலைத்தீவுகள்
- 3வது காற்பகுதி – இலங்கை 60–32 மாலைத்தீவுகள்
- 4வது காற்பகுதி – இலங்கை 77–45 மாலைத்தீவுகள்
- முடிவு – இலங்கை அணி 77–45 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<