இலங்கை அணியை இலகுவாக வீழ்த்திய இந்தியா!

South Asian Basketball Association Championship 2021

295
SLvBAS-IND

தெற்காசிய கூடைப்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப்பில் இன்று (17) நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை அணி 48-114 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்துள்ளது.

போட்டியில், ஆரம்பம் முதல் பலமான ஆட்டத்தை  வெளிப்படுத்திய இந்திய அணி, இந்த போட்டியில் முழுமையான ஆதிக்கத்தை செலுத்தி இலகுவாக வெற்றியை பதிவுசெய்தது.

>> இறுதி காற்பகுதியில் அபாரம் காண்பித்து பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை!

ஆட்டத்தின முதல் காற்பகுதியில், இந்திய அணி 30-15 என்ற புள்ளிகள் கணக்கில் மிகச்சிறந்த முன்னிலையை பெற்றுக்கொண்டது. இரண்டாவது காற்பகுதியிலும் மேலும் 28 புள்ளிகளை இந்திய அணி பெற்றுக்கொண்டு, 58 புள்ளிகளை அடைய, இலங்கை அணி 17 புள்ளிகளை பெற்றுக்கொள்ள, முதற்பாதியில் 58-32 என இந்திய அணி முன்னிலையை அதிகரித்துக்கொண்டது.

தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது காற்பகுதியில் இலங்கை அணி வெறும் 2 புள்ளிகளை மாத்திரம் பெற்றுக்கொள்ள, இந்திய அணி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன்மூலம் இலங்கை அணி மூன்றாவது காற்பகுதியின் போது, 34 புள்ளிகளை மொத்தமாக பெற்றுக்கொள்ள, இந்திய அணி 89 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளது.

இறுதி காற்பகுதியில் இலங்கை அணி போராடி 16 புள்ளிகளை பெற்று, மொத்தமாக 48 புள்ளிகளை பெற்றபோதும், இந்திய அணி மொத்தமாக 114 புள்ளிகளை பெற்று, 114-48 என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் நடப்பு சம்பியனான இலங்கை அணியை வீழ்த்தியது.

இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியிருந்த நிலையில், அடுத்த போட்டியில் நாளைய தினம் (18) மாலைத்தீவுகள் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

சுருக்கம்

  • முதல் காற்பகுதி – இந்தியா 30-15 இலங்கை
  • 2வது காற்பகுதி – இந்தியா 58-32 இலங்கை
  • 3வது காற்பகுதி – இந்தியா 89–34 இலங்கை
  • 4வது காற்பகுதி – இந்தியா 114–48 இலங்கை
  • முடிவு – இந்திய அணி 114-46 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி

>> மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க <<