தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பிட்கொயின் விளம்பரம்

428
Image Courtesy - Twitter CSA

கிரிக்கெட் விளையாட்டில் விளையாடுகின்ற ஒவ்வொரு அணிகள் மற்றும் கழகங்கள் போன்றவை தங்களது அணிகளுக்கும், கழகங்களுக்கும் உரித்தான சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றது. உதாரணமாக இணையத்தளம், பேஸ்புக் (Facebook), டுவிட்டர் (Twitter), இன்ஸ்டாகிராம் (Instagram), யுடியூப் (Youtube) போன்றவையாகும்.

21ஆம் நூற்றாண்டானது ஒரு இலத்திரனியல் நூற்றாண்டாக அமைந்திருக்கின்றது. இந்த நூற்றாண்டில் பத்திரிகைகளில் வெளியாகின்ற செய்திகளை விட சமூக ஊடகங்கள் மூலமாக வெளியாகின்ற செய்திகளே விரைவுத்தன்மை கொண்ட செய்திகளாக காணப்படுகின்றது.

டோனியின் சாதனையை 4 ஆண்டுகளில் முறியடித்த சர்ப்ராஸ் அஹமட்

ஒவ்வொரு அணிகளும், கழகங்களும் தங்களது விளையாட்டு செய்திகள், நிகழ்வுகள் போன்றவை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விரைவாக சென்றடைய வேண்டும் என்பதற்காக இவ்வாறான சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றன.

இந்த சமூக ஊடகங்களில் டுவிட்டர் என்பது மிக விரைவாக செய்திகளை வழங்கும் ஊடகமாக காணப்படுகின்றது. அத்துடன் ஏனைய சமூக ஊடகங்கள் மூலமாக வெளியாகும் செய்திகளை விட டுவிட்டர் மூலமாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் நம்பகத்தன்மை உடையவையாக காணப்படுகின்றது.

அவ்வாறு ஒவ்வொரு அணிகளும் தங்களது அணிகளின் பெயர்களில் ஒவ்வொரு உறுதிப்படுத்தப்பட்ட டுவிட்டர் கணக்குகளை பேணி வருகின்றன. ஒவ்வொரு கணக்குகளும் அந்த அந்த அணிகளினுடைய ஊடகத்துறை பிரிவினால் இயக்கப்பட்டு வருகின்றது.

அதில் ஒன்று தான் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியினுடைய டுவிட்டர் கணக்காகும். இந்த டுவிட்டர் கணக்கினை 1.03 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் குறித்த டுவிட்டர் கணக்கிலிருந்து கிரிக்கெட்டுடன் தொடர்பு அல்லாத செய்தி விளம்பரம் ஒன்று வெளியாகியிருந்தது.

அவ்வாறு வெளியாகிய விளம்பரமானது பிட்கொயின் (Bitcoin) எனப்படும் லொத்தர் சீட்டு தொடர்பானது. விளம்பரம் வெளியாகியமை மாத்திரமல்லாது அதனை கொள்வனவு செய்யுமாறும் வலியுறுத்தப்பட்டது. இதனை அவதானித்த மில்லியன் கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் குழப்பமடைந்தனர்.

மேலும் பிட்கொயின் எனப்படும் இணையவழி வர்தகமானது பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். ஏன் இதனை தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி விளம்பரப்படுத்துகின்றது என்ற சந்தேகம் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு ஏற்பட்டது.

உடனடியாக சர்வதேச கிரிக்கெட் பேரவை இதனை விசாரணைக்கு கொண்டுவந்த போது உண்மை நிலை என்னவென தெரிய வந்தது. இதற்கான காரணத்தினை சர்வதேச கிரிக்கெட் பேரவை அதனுடைய டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளது.

”தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கானது சிலரினால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அவர்களினாலேயே இவ்வாறான விளம்பரம் டுவிட்டர் கணக்கினூடாக பதிவிடப்பட்டிருக்கின்றது.”

”மேலும் தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகத்தினால் குறித்த பிரச்சினை விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும், அடுத்த அறிவிப்பு வரும் வரையில் குறித்த டுவிட்டர் பக்கத்தினை யாரும் பார்வையிட வேண்டாம்” என சர்வதேச கிரிக்கெட் பேரவை குறிப்பிட்டுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<