தென்னாபிரிக்கா செல்லவுள்ள இலங்கை மகளிர் அணி

184

தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று T20I போட்டிகள் மற்றும் ஐசிசி (ICC) சம்பியன்ஷிப் தொடருக்கான மூன்று ஒருநாள் போட்டிகள் என்பவற்றுக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று (06) வெளியிட்டுள்ளது.

மகளிர் T20I உலகக் கிண்ணத் தொடரில் இலங்கைக்கு முதல் தோல்வி

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் ஆறாவது …

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இறுதியாக, ஐசிசி மகளிர் T20I உலகக் கிண்ணத் தொடரில் கடந்த மாதம் போட்டியிட்டிருந்தன. இதில், தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில், இலங்கைதென்னாபிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு ஒருநாள் மற்றும் T20I தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் T20I போட்டி பெப்ரவரி முதலாம் திகதி கேப்டவுனில் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து பெப்ரவரி 3ம் மற்றும் 6ம் திகதிகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் முறையே ஜொஹனஸ்பேர்க் மற்றும் செஞ்சூரியன் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளன.  

பின்னர், ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் தொடருக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 11ம் திகதி ஆரம்பமாகிறது. எனினும், இதற்கு முன்னர் பெப்ரவரி 9ம் திகதி இரு அணிகளுக்கும் இடையிலான பயிற்சிப் போட்டியொன்றும் நடைபெறவுள்ளது.

இலங்கை அணியின் இந்த சுற்றுப் பயணத்தின்போது இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரை பொருத்தவரை இரண்டு அணிகளுக்கும் மிக முக்கியமான தொடராக அமையவுள்ளது.

முதல் வெற்றியுடன் அரையிறுதிக்கான எதிர்பார்ப்பை நீடித்துள்ள இலங்கை மகளிர் அணி

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் ஆறாவது …

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள், ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் பின்தங்கிய நிலையில் உள்ளன. தென்னாபிரிக்க அணி 9 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றியுடன் 7வது இடத்திலும், இலங்கை அணி 9 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் 8வது இடத்திலும் உள்ளன.

இவ்வாறான நிலையில், இந்த தொடரில் சாதகமான முடிவுகளை பெரும் பட்சத்திலேயே, இரண்டு அணிகளும் 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

இவ்வாறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெப்ரவரி 11ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த ஒருநாள் தொடரின், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் பெப்ரவரி 14ம் மற்றும் 17ம் திகதிகளில் போட்ச்செப்ஸ்ரூமில் நடைபெறவுள்ளது.

தென்னாபிரிக்காஇலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை

T20I தொடர் அட்டவணை

  • முதலாவது T20I – பெப்ரவரி 1, கேப்டவுன்
  • இரண்டாவது T20I – பெப்ரவரி 3, ஜொஹனஸ்பேர்க்
  • மூன்றாவது T20I – பெப்ரவரி 6, செஞ்சூரியன்

ஒருநாள் தொடர் அட்டவணை

  • முதலாவது ஒருநாள் போட்டிபெப்ரவரி 11, போட்ச்செப்ஸ்ரூம்
  • இரண்டாவது ஒருநாள் போட்டிபெப்ரவரி 14, போட்ச்செப்ஸ்ரூம்
  • மூன்றாவது ஒருநாள் போட்டிபெப்ரவரி 17, போட்ச்செப்ஸ்ரூம்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<