தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை மகளிர் அணி தொன்னாபிரிக்க அணியுடன் ஆடிய கடைசி ஒருநாள் போட்டியிலும் 6 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்தது.
சமரி அட்டபத்துவின் அதிரடி ஆட்டம் வீண்; தென்னாபிரிக்க மங்கைகளிடம் வீழ்ந்த இலங்கை மங்கைகள்
தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை மகளிர் அணி
தென்னாபிரிக்க மகளிர் அணி இந்த வெற்றிகளுடன் ஐ.சி.சி மகளிர் சம்பியன்ஷிப் தொடரில் புள்ளிகளை அதிகரித்துக் கொண்டு, குறித்த புள்ளிப்பட்டியலில் 13 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது. இதில் இலங்கை மகளிர் அணி 2 புள்ளிகளுடன் 8ஆவது மற்றும் கடைசி இடத்தில் உள்ளது.
2021 மகளிர் உலகக் கிண்ணத்திற்கு அணிகளை தேர்வு செய்வதற்காக ஐ.சி.சி மகளிர் சம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் பெட்சஸ்ட்ரூமில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற தென்னாபிக்க மகளிர் அணியுடனான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தபோது அணித்தலைவி சமரி அத்தபத்து முதலாவது ஓவரிலேயே ஓட்டமேதுமின்றி ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து இலங்கை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து பறிபோயின. முதல் வரிசையில் அனுஷ்கா சஞ்சீவனி 65 பந்துகளுக்கு முகம்கொடுத்து பெற்ற 28 ஓட்டங்களுமே அதிகமாகும். குறிப்பாக தென்னாபிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனே லுவுஸ் மத்திய வரிசையை முழுமையாக விக்கெட்டுகளை சாய்த்தார். அவர் ஷஷிகலா சிரிவர்தன உட்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இலங்கை மகளிர் அணி 44.2 ஓவர்களில் 139 ஓட்டங்களுக்கே சுருண்டது.
தனித்துப் பேராடிய குசல் பெரேரா டெஸ்ட் தரவரிசையில் அதிரடி முன்னேற்றம்
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்காக தனி மனிதனாக நிலைத்துநின்று
இந்நிலையில், பதிலெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க மகளிர் அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளையும் 28 ஓட்டங்களுக்கே வீழ்த்துவதற்கு இலங்கையின் இனோக்கா ரணவீரவால் முடிந்தது. எனினும் மத்திய வரிசையில் மிக்னோன் டூ பிரீஸ் சிறப்பாக துடுப்பெடுத்தாடி தென்னாபிரிக்க அணியில் வெற்றியை உறுதி செய்தார்.
தென்னாபிரிக்க அணி 38.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. பிரீஸ் ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களை பெற்றார். இலங்கை அணி சார்பில் இனோகா ரணவீர 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்படி தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் செய்த இலங்கை மகளிர் அணி மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் முழுமையாகத் தோல்வியை சந்தித்த நிலையில் நாடு திரும்பவுள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க