உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 15 ஆவது லீக் ஆட்டமாக அமைந்த மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான போட்டி மழையினால் முழுமையாக கைவிடப்பட்டுள்ளது.
செளத்எம்ப்டன் நகரில் இன்று (10) ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, தென்னாபிரிக்க அணியினரை முதலில் துடுப்பாட பணித்திருந்தது.
சகலதுறை ஆட்டத்தினால் இந்திய A அணியை வீழ்த்திய இலங்கை A
இந்திய A அணியுடனான மூன்றாவது உத்தியோகபூர்வமற்ற….
இதன்படி முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 7.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 29 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில் போட்டியில் மழையின் குறுக்கீடு ஏற்பட்டது. மழை நிலைமைகள் தொடர்ந்தும் சீராகாத காரணத்தினால் போட்டி கைவிடப்பட்டது.
இதேநேரம் இந்த உலகக் கிண்ணத் தொடரில் மழையின் காரணமாக கைவிடப்பட்ட இரண்டாவது போட்டியாக தென்னாபிரிக்க, மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான மோதல் அமைகின்றது. இதற்கு முன்னர், கடந்த வெள்ளிக்கிழமை (7) உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவிருந்த போட்டி மழையினால் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் தென்னாபிரிக்க அணியின் சார்பில் துடுப்பாடுவதற்கு களம் வந்த அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஹஷிம் அம்லா 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றதோடு, அவரை அடுத்து புதிய வீரராக வந்த எய்டன் மார்க்ரம் 5 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார்.
அதேவேளை தென்னாபிரிக்க அணியின் சார்பில் களத்தில் நின்ற குயின்டன் டி கொக் 17 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு, பாப் டு பிளேசிஸ் ஓட்டம் எதனையும் பெறாமல் நின்றார்.
மறுமுனையில் தென்னாபிரிக்க அணியில் பறிபோயிருந்த இரண்டு விக்கெட்டுக்களையும் மேற்கிந்திய தீவுகள் அணியின் செல்டோன் கோல்ட்ரல் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை A அணியின் இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டிய இந்தியா
இலங்கை A அணி போராடி பெற்ற வெற்றி இலக்கை இந்திய A அணி……
இப்போட்டி கைவிடப்பட்ட காரணத்தினால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்கும் தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்பட்டிருக்கின்றது.
இம்முறைக்கான உலகக் கிண்ணத் தொடரில் தாம் பங்கேற்ற முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்த தென்னாபிரிக்க அணிக்கு, இப்போட்டியின் மூலமே முதல் புள்ளி கிடைத்திருக்கின்றது.
இதேநேரம் மேற்கிந்திய தீவுகள் அணி, இப்போட்டியில் கிடைத்த புள்ளியுடன் மொத்தமாக 3 புள்ளிகள் பெற்று தமது உலகக் கிண்ணப் பயணத்தினை தொடர்கின்றது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Quinton de Kock | not out | 17 | 21 | 1 | 0 | 80.95 |
Hashim Amla | c Chris Gayle b Sheldon Cottrell, | 6 | 7 | 1 | 0 | 85.71 |
Aiden Markram | c Shai Hope b Sheldon Cottrell, | 5 | 10 | 1 | 0 | 50.00 |
Faf du Plessis | not out | 0 | 7 | 0 | 0 | 0.00 |
Extras | 1 (b 0 , lb 0 , nb 0, w 1, pen 0) |
Total | 29/2 (7.3 Overs, RR: 3.87) |
Fall of Wickets | 1-11 (2.5) Hashim Amla, 2-28 (6.1) Aiden Markram, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sheldon Cottrell, | 4 | 1 | 18 | 2 | 4.50 | |
Kemar Roach | 3 | 0 | 10 | 0 | 3.33 | |
Oshane Thomas | 0.3 | 0 | 1 | 0 | 3.33 |
முடிவு – போட்டி கைவிடப்பட்டது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<