Home Tamil வேகப் பந்துவீச்சாளர்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்த தென்னாபிரிக்கா

வேகப் பந்துவீச்சாளர்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்த தென்னாபிரிக்கா

200
Getty Images

தென்னாபிரிக்க மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையில் T20 உலகக் கிண்ணத்தின் சுபர் 12 சுற்றுக்காக நடைபெற்று முடிந்திருக்கும் போட்டியில் தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

LPL தொடரின் வீரர்கள் வரைவுக்கான திகதி அறிவிப்பு!

மேலும் தென்னாபிரிக்கா இந்த வெற்றியுடன் T20 உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றான அரையிறுதிக்கு செல்லும் தமது வாய்ப்பினையும் அதிகரித்திருக்கின்றது.

சுபர் 12 சுற்றின் குழு 1 இல் காணப்படும் தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான இந்தப் போட்டி, அபுதாபி நகரில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணியின் தலைவர் டெம்பா பெவுமா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பங்களாதேஷ் வீரர்களுக்கு வழங்கினார்.

அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி தென்னாபிரிக்க வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 84 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் மஹேதி ஹஸன் 27 ஓட்டங்களுடன் தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களைப் பதிவு செய்ய, தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பில் வேகப் பந்துவீச்சாளர்களான ககிஸோ றபாடா மற்றும் என்ட்ரிஜ் நோர்கியா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். இவர்களுடன்

மணிக்கட்டு சுழல்வீரரான தப்ரைஸ் சம்ஷியும் தென்னாபிரிக்க அணி சார்பில் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LPL 2021: கொழும்பு அணிக்கு புதிய உரிமையாளர்

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 85 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, 13.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து போட்டியின் வெற்றி இலக்கினை 86 ஓட்டங்கள் பெற்றவாறு அடைந்தது.

தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த அதன் தலைவர் டெம்பா பவுமா 31 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காது களத்தில் நின்றார். இதேநேரம், பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மட் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக தென்னாபிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளரான ககிஸோ றபாடா தெரிவாகினார்.

இனி தென்னாபிரிக்க அணி T20 உலகக் கிண்ணத்தில் ஆடும் அடுத்த போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (06) இங்கிலாந்துடன் நடைபெற, பங்களாதேஷ் தமது அடுத்த போட்டியில் அவுஸ்திரேலிய அணியினை எதிர்வரும் வியாழக்கிழமை (04) எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்


Result


South Africa
86/4 (13)

Bangladesh
84/10 (18.2)

Batsmen R B 4s 6s SR
Mohammad Naim Sheikh c Reeza Hendricks b Kagiso Rabada 9 11 1 0 81.82
Liton Das lbw b Tabraiz Shamsi 24 36 1 0 66.67
Soumya Sarkar lbw b Kagiso Rabada 0 1 0 0 0.00
Mushfiqur Rahim c Reeza Hendricks b Kagiso Rabada 0 3 0 0 0.00
Mahmudullah c Aiden Markram b Anrich Nortje 3 9 0 0 33.33
Afif Hossain b Dwaine Pretorius 0 1 0 0 0.00
Shamim Hossain c Keshav Maharaj b Tabraiz Shamsi 11 20 0 0 55.00
Mehidy Hasan Miraz c & b Anrich Nortje 27 25 2 1 108.00
Taskin Ahamed run out () 3 5 0 0 60.00
Nasum Ahmed hit-wicket b Anrich Nortje 0 1 0 0 0.00
Shoriful Islam not out 0 0 0 0 0.00


Extras 7 (b 0 , lb 1 , nb 2, w 4, pen 0)
Total 84/10 (18.2 Overs, RR: 4.58)
Bowling O M R W Econ
Keshav Maharaj 4 0 23 0 5.75
Kagiso Rabada 4 0 20 3 5.00
Anrich Nortje 3.2 0 8 5 2.50
Dwaine Pretorius 3 0 11 1 3.67
Tabraiz Shamsi 4 0 21 2 5.25


Batsmen R B 4s 6s SR
Quinton de Kock b Mehidy Hasan Miraz 16 15 3 0 106.67
Reeza Hendricks lbw b 4 5 1 0 80.00
Rassie van der Dussen c Shoriful Islam b Nasum Ahmed 22 27 2 0 81.48
Aiden Markram c Mohammad Naim Sheikh b Taskin Ahamed 0 4 0 0 0.00
Temba Bavuma not out 31 28 3 1 110.71
David Miller not out 5 2 1 0 250.00


Extras 8 (b 4 , lb 1 , nb 0, w 3, pen 0)
Total 86/4 (13 Overs, RR: 6.62)
Bowling O M R W Econ
Taskin Ahamed 4 0 18 2 4.50
Shoriful Islam 4 0 15 0 3.75
Mehidy Hasan Miraz 2 0 19 1 9.50
Nasum Ahmed 2 0 22 1 11.00
Soumya Sarkar 1 0 7 0 7.00



முடிவு – தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<