ஸுபைர் ஹம்சாவின் சதத்தால் இலங்கை அபிவிருத்தி அணியினருக்கு தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணியினர் அதிர்ச்சியைக் கொடுத்தனர்.
தென்னாபிரிக்காவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் முக்கோண சுற்றுப் போட்டியில் இன்று நடைபெற்ற தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணிக்கும் இலங்கை அபிவிருத்தி அணியினருக்கும் இடையில் இடம் பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடிய இலங்கை அபிவிருத்தி அணியினர் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகளை இழந்து 240 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். இதில் அதிகமாக அணுக் பெர்னாண்டோ 53 ஓட்டங்களையும் அணித் தலைவர் ரமேஷ் புத்திக்கே 48 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் தோமஸ் கபார் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும், கெய்த் துஜான் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.
240 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணி 47.5 ஓவர்களி 4 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தனர்.
ஸுபைர் ஹம்சா ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களை 121 பந்துகளை எதிர்கொண்டு குவித்தார்.
தலைவர் விஹான் லுபெ 47 ஓட்டங்களை 1 சிக்ஸர் உள்ளடங்கலாகக் குவித்தார். பந்துவீச்சில் அமில அபோன்சோ 44 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் சுருக்கம் :
இலங்கை அபிவிருத்தி அணி – 240/7 (50)
அணுக் பெர்னாண்டோ 53, ரமேஷ் புத்திக 48, ஸஞ்ஜய சதுரங்க 36*, தோமஸ் கபார் 2/27, கெய்த் துஜான் 2/29
தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணி – 241/4 (47.5)
ஸுபைர் ஹம்சா 111*, விஹான் லுபெ 47*, ஜனநேமன் மாலன் 41, அமில அபோன்சோ 2/44, ஸஞ்ஜய சதுரங்க 1/56
தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணி 6விக்கட்டுகளால் வெற்றியடைந்ததுடன் ஆட்டநாயகனாக ஸுபைர் ஹம்சா தெரிவு செய்யப்பட்டார்.