போட்டியை வென்றது மழை

231
1st Sunfoil International Test: South Africa v New Zealand - Day 2

தென்ஆபிரிக்கா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் வெள்ளிக்கிழமை(19) டர்பனில் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆபிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 236 ஓட்டங்கள் சேர்த்திருந்தது. ரபாடா 14 ஓட்டங்களுடனும், ஸ்டெயின் 2 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். அம்லா அதிகபட்சமாக 53 ஓட்டங்களும், பவுமா 46 ஓட்டங்களும் சேர்த்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஸ்டெயின் நேற்று எடுத்திருந்த 2 ஓட்டங்களோடு நடையைக் கட்டினார். இவர் சவுத்தி பந்தில் க்ளீன் போல்டானார்.

அடுத்து பியட் களம் இறங்கினார். இவர் 9 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, தென் ஆபிரிக்கா அணி 263 ஓட்டங்களுகு சகல விக்கட்டுகளையும் இழந்தது. ரபாடா 32 ஓட்டங்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணியி சார்பாகப் பந்துவீச்சில் டிட்ரென்ட் போல்ட் மற்றும் வாக்னர் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின் தமது இனிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி 15 ஓட்டங்களைப் பெற்று 2 விக்கட்டுகளை இழந்த நிலையில் மழை பொழிந்தது. இந்த மழை தொடர்ந்ததால் 2ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.  றோஸ் டெய்லர் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் தலா 2 ஓட்டங்களோடு களத்தில் இருந்தனர். டேல் ஸ்டெய்ன் வீழ்ந்த 2 விக்கட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்.

அதன் பின் 3ஆம் நாள் ஆட்டம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும் தொடர்ந்து மழை மற்றும் சீரற்ற காலநிலை காணப்பட்டதால் 3ஆம் நாளும் எந்தவித பந்தும் வீசப்படாத நிலையில் முடிவுக்கு வந்தது. பின் போட்டியில் மழையின் ஆதிக்கம் அதிகரிக்க 4ஆம் மற்றும் 5ஆம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டு போட்டி வெற்றி தோல்வி இன்றி  முடிவுக்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்

தென் ஆபிரிக்கா – 263/10

ஹசீம் அம்லா 53, தெம்பா பாவுமா 46, குயின்டன் டி கொக் 33, ரபடா 32*

நீல் வேக்னர் 47/3, மிச்சல் சட்னர் 22/2, ட்ரெண்ட் போல்ட் 52/3

நியூசிலாந்து 15/2

றோஸ் டெய்லர் 02*, கேன் வில்லியம்சன் 02*, மார்ட்டின் கப்டில் 7

டேல் ஸ்டெய்ன் 3/2

போட்டி வெற்றி தோல்வி இன்றி  முடிவு