இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு கெதிராக நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் லீக் போட்டியில் துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பான ஆட்டத்தால் தென்னாபிரிக்கா வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்கா வளர்ந்துவரும் அணி, தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணிகளுடனான முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது.
சரித், சம்முவின் அபார ஆட்டத்தால் இலங்கைக்கு ஹெட்ரிக் வெற்றி
தென்னாபிரிக்க விளையாட்டு………..
இந்தப் போட்டித் தொடரில் இன்று (06) நடைபெற்ற 6 ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் மற்றும் தென்னாபிரிக்கா வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பிரிட்டோரியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணித் தலைவர் சரித் அசலங்க முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சந்துன் வீரக்கொடி மற்றும் மினோத் பானுக்க ஆகியோர் களமிறங்கினர்.
இதில் மினோத் பானுக்க ஓட்டமெதுவும் பெறாத நிலையில் முதலாவது ஓவரின் இரண்டாவது பந்தில் நந்திரே பெர்கரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து சந்துன் வீர்கொடியுடன் ஜோடி சேர்ந்த பெதும் நிஸ்ஸங்க 2 ஆவது விக்கெட்டுக்காக 78 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து கொண்டனர்.
எனினும், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெதும் நிஸ்ஸங்க 37 ஓட்டங்களுடனும், அடுத்து வந்த அணித் தலைவர் சரித் அசலங்க 6 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இந்த நிலையில், அரைச் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சந்துன் வீரக்கொடி 42 ஓட்டங்களுடன் தய்யான் கெலியமின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதன் பிறகு ஜோடி சேர்ந்த சம்மு அஷான் மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் தென்னாபிரிக்கா வளர்ந்துவரும் அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர்.
நிதானமாக ஓட்டங்களைக் குவித்த இருவரும் 5 ஆவது விக்கெட்டுக்காக 39 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள, சம்மு அஷான் 19 ஓட்டங்களுடனும், அஷேன் பண்டார 23 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
எனினும், பின்வரிசையில் களமிறங்கி இலங்கை அணிக்காக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரமேஷ் மெண்டிஸின் அரைச் சதத்தின் உதவியுடன் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களை எடுத்தது.
சதமடித்து இலங்கையின் துடுப்பாட்டத்துக்கு வலுச்சேர்த்த மெதிவ்ஸ்
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு……..
துடுப்பாட்டத்தில் இலங்கை அணிக்காக அபாரமாக விளையாடிய ரமேஷ் மெண்டிஸ் 54 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொடுக்க, அவருடன் இணைந்து கடைசி நேரத்தில் வலுச்சேர்த்த லஹிரு மதுஷங்க 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.
தென்னாபிரிக்கா வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில், தய்யான் கெலியம் மற்றும் கைல் சிம்மென்ட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
இதையடுத்து 248 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்கா வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி களமிறங்கியது. அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக மெத்திவ் பிரீட்ஸ்கி மற்றும் ஜென்னமன் மாலன் களமிறங்கினர்.
அந்த அணி, தங்களுடைய முதல் விக்கெட்டினை 32 ஓட்டங்களுக்கு இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜென்னமன் மாலன் (18) அமில அபோன்சோவின் பந்து வீச்சில், LBW முறையில் ஆட்டமிழந்தார்.
இதற்கு அடுத்தபடியாக வந்த ரெய்னார்ட் வான் டான்டர் ஓட்டமின்றி அமில அபோன்சோவின் பந்துவீச்சில் மீண்டும் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மெத்திவ் பிரீட்ஸ்கியுடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் டோனி டி சோர்சி 3 ஆவது விக்கெட்டுக்காக 61 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று நம்பிக்கை கொடுத்தார்.
எனினும், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்திவ் பிரீட்ஸ்கி அரைச் சதம் கடந்த நிலையில் 54 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் டோனி டி சோர்சி 30 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனை அடுத்து மத்திய வரிசையில் களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிபெனலோ மெகான்யா (20), கியூஷல் (37), தய்யான் கெலியம் (28) ஆகியோரது பங்களிப்புடன் அந்த அணி வெற்றி இலக்கை நெருங்கியது.
இறுதியில் கைல் சிம்மென்ட்ஸனுடன் ஜோடி சேர்ந்த மார்கோ ஜென்சன் பெறூப்பாக விளையாடி 42 ஆவது ஓவரில் தமது அணியை வெற்றி பெற செய்தனர்.
இதற்கமைய தென்னாபிரிக்கா வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி இறுதியில் 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று, முத்தரப்பு ஒருநாள் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது.
IPL போன்ற தொடர்களில் எமது வீரர்கள் விளையாட வேண்டும் – திமுத்
உலகளாவிய ரீதியில் நடைபெறும் சர்வதேச………
இதன் போது, கைல் சிம்மென்ட்ஸ் ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களையும், மார்கோ ஜென்சன் 10 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் அமில அபோன்சோ 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இது இவ்வாறிருக்க, இலங்கை வளர்ந்துவரும் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழக விளையாட்டு பதினொருவர் அணிகளுக்கு இடையிலான 7 ஆவது லீக் போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Minod Bhanuka | c Sibonelo Makhanya b Nandre Burger | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Sandun Weerakkody | c Raynard van Tonder b Dayyaan Galiem | 42 | 51 | 6 | 0 | 82.35 |
Pathum Nissanka | c Sinethemba Qeshile b Jason Smith | 37 | 43 | 4 | 0 | 86.05 |
Charith Asalanka | c Kyle Simmonds b Dayyaan Galiem | 6 | 18 | 0 | 0 | 33.33 |
Sammu Ashan | c Raynard van Tonder b Kyle Simmonds | 19 | 37 | 0 | 0 | 51.35 |
Ashen Bandara | c Sinethemba Qeshile b Kyle Simmonds | 23 | 38 | 2 | 0 | 60.53 |
Ramesh Mendis | not out | 54 | 55 | 3 | 1 | 98.18 |
Lahiru Madushanka | lbw b Sibonelo Makhanya | 30 | 55 | 1 | 0 | 54.55 |
Chamika Karunarathne | not out | 12 | 5 | 1 | 1 | 240.00 |
Extras | 24 (b 0 , lb 7 , nb 4, w 13, pen 0) |
Total | 247/7 (50 Overs, RR: 4.94) |
Fall of Wickets | 1-2 (0.2) Minod Bhanuka, 2-80 (13.2) Pathum Nissanka, 3-92 (17.6) Charith Asalanka, 4-94 (19.3) Sandun Weerakkody, 5-133 (30.2) Sammu Ashan, 6-140 (32.1) Ashen Bandara, 7-215 (47.4) Lahiru Madushanka, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nandre Burger | 10 | 0 | 46 | 1 | 4.60 | |
Thando Ntini | 7 | 0 | 40 | 0 | 5.71 | |
Jason Smith | 10 | 0 | 56 | 1 | 5.60 | |
Kyle Simmonds | 10 | 0 | 35 | 2 | 3.50 | |
Dayyaan Galiem | 8 | 1 | 25 | 2 | 3.12 | |
Sibonelo Makhanya | 5 | 0 | 38 | 1 | 7.60 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Matthew Breetzke | c Sammu Ashan b Lahiru Madushanka | 53 | 57 | 5 | 0 | 92.98 |
Janneman Malan | lbw b Amila Aponso | 18 | 22 | 4 | 0 | 81.82 |
Raynard van Tonder | b Amila Aponso | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Tony de Zorzi | c Minod Bhanuka b Charith Asalanka | 30 | 47 | 2 | 0 | 63.83 |
Sinethemba Qeshile | c Sandun Weerakkody b Kalana Perera | 37 | 41 | 5 | 0 | 90.24 |
Sibonelo Makhanya | c Dilshan Madushanka b Chamika Karunarathne | 20 | 19 | 3 | 0 | 105.26 |
Dayyaan Galiem | b Ramesh Mendis | 28 | 34 | 3 | 0 | 82.35 |
Kyle Simmonds | not out | 44 | 26 | 2 | 3 | 169.23 |
Jason Smith | not out | 10 | 4 | 1 | 1 | 250.00 |
Extras | 10 (b 1 , lb 1 , nb 4, w 4, pen 0) |
Total | 250/7 (42 Overs, RR: 5.95) |
Fall of Wickets | 1-32 (5.5) Janneman Malan, 2-38 (7.6) Raynard van Tonder, 3-99 (19.5) Matthew Breetzke, 4-118 (25.1) Tony de Zorzi, 5-150 (30.3) Sibonelo Makhanya, 6-176 (33.4) Sinethemba Qeshile, 7-236 (40.6) Dayyaan Galiem, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kalana Perera | 8 | 1 | 37 | 1 | 4.62 | |
Lahiru Madushanka | 5 | 0 | 35 | 1 | 7.00 | |
Chamika Karunarathne | 5 | 0 | 35 | 1 | 7.00 | |
Amila Aponso | 10 | 1 | 46 | 2 | 4.60 | |
Kamindu Mendis | 9 | 0 | 41 | 1 | 4.56 | |
Charith Asalanka | 3 | 0 | 26 | 1 | 8.67 | |
Ashen Bandara | 2 | 0 | 28 | 0 | 14.00 |
முடிவு – தென்னாபிரிக்கா வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<