இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென்னாபிரிக்க ஒருநாள் மற்றும் T20I குழாம்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒருநாள் மற்றும் T20I குழாம்களுக்கான தலைவராக டெம்பா பவுமா நியமிக்கப்பட்டுள்ளதுடன், டுவைன் பிரிட்டோரியர்ஸ் ஒருநாள் மற்றும் T20I குழாம்களில் இடம்பிடித்துள்ளார்.
எவரஸ்ட் பிரீமியர் லீக் தொடரில் ஆடவுள்ள தினேஷ் சந்திமால்
அதேநேரம், தென்னாபிரிக்க அணியின் முன்னணி விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் குயிண்டன் டி கொக், இலங்கை அணிக்கு எதிரான T20I போட்டிகளில் மாத்திரம் விளையாடவுள்ளதுடன், லுங்கி என்கிடியும் T20I குழாத்தில் மாத்திரம் இணைக்கப்பட்டுள்ளார்.
குயிண்டன் டி கொக்கிற்கு, ஒருநாள் போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்கா சுட்டிக்காட்டியுள்ளதுடன். லுங்கி என்கிடி தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஜூனியர் டலா ஒருநாள் போட்டிகளுக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்க அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரான டேவிட் மில்லர் T20I போட்டிகளுக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ள போதும், அவர் உபாதையிலிருந்து குணமடைந்து வருகின்றார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, அவரை தொடர்ந்தும் அவதானித்துவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க குழாத்தில், எய்டன் மர்க்ரம், காகிஸோ ரபாடா, கேஷவ் மஹாராஜ் மற்றும் டெப்ரைஷ் ஷம்ஷி போன்ற முன்னணி வீரர்களுடன், கடந்த காலங்களில் பிரகாசித்துவரும் இளம் வீரர்களுக்கும் இணைக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர்கள் எதிர்வரும் 2ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்க ஒருநாள் குழாம்
டெம்பா பவுமா (தலைவர்), பியூரன் ஹென்ரிக்ஸ், ரீஷா ஹென்ரிக்ஸ், ஹென்ரிச் கிலாசன், ஜென்னமன் மலன், கேஷவ் மஹாராஜ், எய்டன் மர்க்ரம், வியான் முல்டர், என்ரிச் நோக்கியா, எண்டைல் பெஹெலுக்வாயோ, காகிஸோ ரபாடா, கெயல் வெர்ரைன், ஜோர்ஜ் லிண்டே, ஜூனியர் டலா, டுவைன் பிரிட்டோரியர்ஸ்
தென்னாபிரிக்க T20I குழாம்
டெம்பா பவுமா (தலைவர்), குயிண்டன் டி கொக், பிஜோன் போர்ச்சுன், ரீஷா ஹென்ரிக்ஸ், ஹென்ரிச் கிலாசன், ஜோர்ஜ் லிண்டே, கேஷவ் மஹாராஜ், எய்டன் மர்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி என்கிடி, என்ரிச் நோக்கியா, டுவைன் பிரிட்டோரியர்ஸ், காகிஸோ ரபாடா, டெப்ரைஷ் ஷம்ஷி, ரஸ்ஸி வென் டர் டஸன், லிஷாட் வில்லியம்ஸ், சசிண்டா மக்லா, பியூரன் ஹென்ரிக்ஸ்
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…