சுற்றுலா தென்னாபிரிக்கா – இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது T20 போட்டியில் 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் இலங்கை வீரர்களை 3-0 என வைட்வொஷ் செய்திருக்கின்றது.
முன்னதாக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தார்.
மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்று தொடரினை ஏற்கனவே 2-0 எனக் கைப்பற்றிய நிலையில், தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி ஒன்றுக்காக (14) களமிறங்கியிருந்தது.
ஐசிசியின் ஆகஸ்ட் மாத விருதை வென்றார் ஜோ ரூட்
இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ அணியில் மீள தினேஷ் சந்திமாலுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. அதேநேரம் சரித் அசலன்க, பிரவின் ஜயவிக்ரம ஆகியோருக்குப் பதிலாக கமிந்து மெண்டிஸ் மற்றும் லஹிரு மதுசங்க ஆகியோர் இலங்கை அணியில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
அதேபோன்று தென்னாபிரிக்க அணியில் ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சகலதுறைவீரரான வியான் முல்டர், என்ட்ரிச் நோர்கியாவிற்கு பதிலாக இணைக்கப்பட்டிருந்தார்.
இலங்கை அணி
தசுன் ஷானக (தலைவர்), குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, பானுக்க ராஜபக்ஷ, தனன்ஜய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, மகீஷ் தீக்ஷன, லஹிரு மதுசங்க
தென்னாபிரிக்க அணி
எய்டன் மர்க்ரம், குயின்டன் டி கொக், ரீசா ஹென்ரிக்ஸ், ட்வைன் ப்ரைடொரியஸ், ரஸ்ஸி வான் வென்டர் டஸன் , ஹென்ரிச் கிலாசன், வியான் முல்டர், கேஷவ் மஹராஜ், காகிஸோ ரபாடா, ஜொர்ன் போர்டியுன், டப்ரைஷ் சம்ஷி
பின்னர் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த இலங்கை அணி, ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றம் காட்டத் தொடங்கியது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் குசல் ஜனித் பெரேரா தவிர ஏனைய முன்வரிசை துடுப்பாட்டவீரர்கள் அனைவரும் மோசமாக செயற்பட 20 ஓவர்கள் நிறைவில், இலங்கை கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரம் எடுத்துக்கொண்டது.
அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெற்றார் மாலிங்க!
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் குசல் ஜனித் பெரேரா 33 பந்துகளுக்கு 39 ஓட்டங்கள் எடுக்க, சாமிக்க கருணாரட்ன 19 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் அடங்கலாக 24 ஓட்டங்களை குவித்திருந்தார்.
தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பில் ஜொர்ன் பொர்டியுன் மற்றும் ககிஸோ றபாடா ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 121 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, குறித்த போட்டி வெற்றி இலக்கினை 14.4 ஓவர்களுக்கு எந்தவொரு விக்கெட்டினையும் பறிகொடுக்காமல் அடைந்தது.
தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் தன்னுடைய 11ஆவது T20 அரைச்சதத்தினை பூர்த்தி செய்த, குயின்டன் டி கொக் 46 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருக்க, ரீசா ஹென்ரிக்ஸ் 42 பந்துகளுக்கு தன்னுடைய 6ஆவது T20 அரைச்சதத்துடன் 56 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தென்னாபிரிக்க அணியின் குயின்டன் டி கொக் தெரிவாகினார்.
இந்த T20 தொடர் வெற்றியுடன் தமது இலங்கை சுற்றுப்பயணத்தினை நிறைவு செய்து கொள்ளும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, நாளை (15) அவர்களது தாயகம் நோக்கி பயணமாகவிருக்கின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kusal Perera | lbw b Keshav Maharaj | 39 | 32 | 3 | 0 | 121.88 |
Avishka Fernando | c & b Kagiso Rabada | 12 | 8 | 2 | 0 | 150.00 |
Dhananjaya de Silva | st Quinton de Kock b Bjorn Fortuin | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Bhanuka Rajapaksa | b Kagiso Rabada | 5 | 6 | 1 | 0 | 83.33 |
Kamindu Mendis | c Keshav Maharaj b Aiden Markram | 10 | 16 | 0 | 0 | 62.50 |
Dasun Shanaka | c Keshav Maharaj b Wiaan Mulder | 18 | 26 | 2 | 0 | 69.23 |
Wanindu Hasaranga | c Keshav Maharaj b Bjorn Fortuin | 4 | 4 | 0 | 0 | 100.00 |
Lahiru Madushanka | run out () | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Chamika Karunaratne | not out | 24 | 19 | 0 | 0 | 126.32 |
Dushmantha Chameera | not out | 2 | 2 | 0 | 0 | 100.00 |
Extras | 4 (b 0 , lb 1 , nb 0, w 3, pen 0) |
Total | 120/8 (20 Overs, RR: 6) |
Fall of Wickets | 1-18 (1.5) Avishka Fernando, 2-19 (2.2) Dhananjaya de Silva, 3-28 (3.6) Bhanuka Rajapaksa, 4-62 (9.3) Kamindu Mendis, 5-80 (12.6) Kusal Perera, 6-85 (13.5) Wanindu Hasaranga, 7-86 (14.2) Lahiru Madushanka, 8-101 (18.2) Dasun Shanaka, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Bjorn Fortuin | 4 | 0 | 21 | 2 | 5.25 | |
Kagiso Rabada | 3 | 0 | 23 | 2 | 7.67 | |
Dwaine Pretorius | 2 | 0 | 19 | 0 | 9.50 | |
Tabraiz Shamsi | 4 | 0 | 27 | 0 | 6.75 | |
Aiden Markram | 2 | 0 | 4 | 1 | 2.00 | |
Keshav Maharaj | 4 | 1 | 14 | 1 | 3.50 | |
Wiaan Mulder | 1 | 0 | 11 | 1 | 11.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Quinton de Kock | not out | 59 | 46 | 7 | 0 | 128.26 |
Reeza Hendricks | not out | 56 | 42 | 5 | 1 | 133.33 |
Extras | 6 (b 0 , lb 0 , nb 0, w 6, pen 0) |
Total | 121/0 (14.4 Overs, RR: 8.25) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Maheesh Theekshana | 4 | 0 | 28 | 0 | 7.00 | |
Wanindu Hasaranga | 4 | 0 | 35 | 0 | 8.75 | |
Kamindu Mendis | 3 | 0 | 22 | 0 | 7.33 | |
Dushmantha Chameera | 1 | 0 | 9 | 0 | 9.00 | |
Chamika Karunaratne | 1.4 | 0 | 13 | 0 | 9.29 | |
Dasun Shanaka | 1 | 0 | 14 | 0 | 14.00 |
முடிவு – தென்னாபிரிக்க அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க