சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில், டக்வெத் லூயிஸ் முறையில் தென்னாபிரிக்க அணி 67 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
இவ்வெற்றியுடன் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 1-1 என சமநிலைப்படுத்தியிருக்கின்றது.
இன்று (04) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்திருந்தது.
>> இறுதிவரை போராடிய இலங்கைக்கு திரில் வெற்றி
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி, இலங்கையுடன் ICC இன் ஒருநாள் சுபர் லீக்கிற்காக 3 ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் 3 T20I போட்டிகள் கொண்ட தொடர்களிலும் ஆட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (01) நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், தொடரின் இரண்டாவது போட்டி ஆரம்பமாகியிருந்தது.
அதேநேரம், இன்றைய போட்டியில் மழையின் குறுக்கீடு காணப்பட்ட காரணத்தினால் போட்டி அணிக்கு 47 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்க அணித்தலைவர் டெம்பா பவுமா இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான தொடர்களிலிருந்து காயம் காரணமாக விலகியிருக்கும் நிலையில் இன்றைய போட்டிக்கான தென்னாபிரிக்க அணியினை சுழல் பந்துவீச்சாளரான கேசவ் மஹராஜ் வழிநடாத்தியிருந்தார். இதேநேரம், இலங்கை அணியில் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
>> இலங்கையுடனான தொடரிலிருந்து டெம்பா பவுவா விலகல்
இலங்கை அணி
தசுன் ஷானக (தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, மினோத் பானுக (விக்கெட் காப்பாளர்), பானுக ராஜபக்ஷ, தனன்ஜய டி சில்வா, சரித் அசலங்க, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, அகில தனன்ஜய, பிரவீன் ஜயவிக்ரம,
தென்னாபிரிக்க அணி
எய்டன் மர்க்ரம், ஜென்னமன் மலன், ரீசா ஹென்ரிக்ஸ், ரஸ்ஸி வென் டர் டஸன், வியான் முல்டர், ஹென்ரிச் கிலாசன் (விக்கெட் காப்பாளர்), எண்டைல் பெஹெலுக்வாயோ, கேஷவ் மஹாராஜ், காகிஸோ ரபாடா, ஜோர்ஜ் லின்டே, டப்ரைஷ் சம்சி
தொடர்ந்து போட்டியில் முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக களம் வந்த ஜென்னமன் மலான் மற்றும் தெம்பா பவுமாவுக்கு மாற்று வீரராக இன்று விளையாடிய ரீசா ஹென்ரிக்ஸ் ஆகியோர் சிறந்த முறையில் துடுப்பாடி பெறுமதி சேர்த்தனர்.
பின்னர் இந்த இரண்டு வீரர்களினதும் துடுப்பாட்ட உதவியோடு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி 47 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 283 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கையில் பெண்களுக்கான சர்வதேச T-20 லீக் தொடர்
தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் தன்னுடைய 03ஆவது ஒருநாள் சதத்தினை பூர்த்தி செய்த ஜென்னமன் மலான் 135 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 121 ஓட்டங்களைப் பெற்றார். மறுமுனையில், அரைச்சதம் தாண்டிய ரீசா ஹென்ரிக்ஸ் 51 ஓட்டங்களையும், ஹென்ரிச் கிலாசன் வெறும் 27 பந்துகளுக்கு 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் துஷ்மன்த சமீர மற்றும் சாமிக்க கருணாரட்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து போட்டியின் வெற்றி இலக்காக இலங்கை அணிக்கு 47 ஓவர்களுக்கு 283 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்ட போதும், மீண்டும் மழை பெய்ததன் காரணமாக போட்டியின் வெற்றி இலக்கு டக்வெத் லூயிஸ் முறையில் 41 ஓவர்களுக்கு 265 ஓட்டங்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
இந்த வெற்றி இலக்கினை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணியின் சார்பில் சரித் அசலன்க மற்றும் சாமிக்க கருணாரட்ன ஆகியோர் போராட்டம் காட்டிய போதும் ஏனைய வீரர்கள் மோசமான ஆட்டத்தினையே வெளிப்படுத்தினர்.
இதனால், 36.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இலங்கை அணி 197 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.
இலங்கை 19 வயதின்கீழ் அணியின் பயிற்சியாளரானார் அவிஷ்க
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் சரித் அசலன்க தன்னுடைய 3ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 69 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 77 ஓட்டங்களைப் பெற, சாமிக்க கருணாரட்ன 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 23 பந்துகளுக்கு 36 ஓட்டங்களை விளாசினார்.
தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பில் தப்ரைஸ் சம்ஷி 49 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள் சாய்த்து சிறப்பாக செயற்பட்டிருக்க, ககிஸோ றபாடாவும் 2 விக்கெட்டுக்களை சாய்த்து தென்னாபிரிக்க அணியின் வெற்றியினை உறுதி செய்தார்.
போட்டியின் ஆட்டநாயகனாக தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டவீரரான ஜென்னமன் மலான் தெரிவாகினார்.
இனி இந்த ஒருநாள் தொடரினை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (07) நடைபெறவிருக்கின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Janneman Malan | lbw b Dushmantha Chameera | 121 | 135 | 9 | 1 | 89.63 |
Aiden Markram | c Minod Bhanuka b Chamika Karunaratne | 21 | 29 | 1 | 1 | 72.41 |
Reeza Hendricks | b Dhananjaya de Silva | 51 | 54 | 5 | 0 | 94.44 |
Rassie van der Dussen | st Minod Bhanuka b Wanindu Hasaranga | 16 | 25 | 1 | 0 | 64.00 |
Heinrich Klaasen | c Dasun Shanaka b Dushmantha Chameera | 43 | 27 | 4 | 1 | 159.26 |
Andile Phehlukwayo | c & b Chamika Karunaratne | 4 | 4 | 0 | 0 | 100.00 |
Wiaan Mulder | not out | 5 | 4 | 0 | 0 | 125.00 |
George Linde | not out | 9 | 5 | 1 | 0 | 180.00 |
Extras | 13 (b 1 , lb 0 , nb 1, w 11, pen 0) |
Total | 283/6 (47 Overs, RR: 6.02) |
Did not bat | Keshav Maharaj, Kagiso Rabada, Tabraiz Shamsi, |
Fall of Wickets | 1-43 (8.5) Aiden Markram, 2-139 (27.3) Reeza Hendricks, 3-177 (35.5) Rassie van der Dussen, 4-263 (44.5) Heinrich Klaasen, 5-263 (44.6) Janneman Malan, 6-269 (45.6) Andile Phehlukwayo, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dushmantha Chameera | 7 | 0 | 52 | 2 | 7.43 | |
Praveen Jayawickrama | 8 | 0 | 46 | 0 | 5.75 | |
Akila Dananjaya | 7 | 0 | 46 | 0 | 6.57 | |
Chamika Karunaratne | 5 | 0 | 25 | 2 | 5.00 | |
Wanindu Hasaranga | 10 | 0 | 63 | 1 | 6.30 | |
Dasun Shanaka | 3 | 0 | 21 | 0 | 7.00 | |
Dhananjaya de Silva | 7 | 0 | 30 | 1 | 4.29 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Avishka Fernando | c Reeza Hendricks b Kagiso Rabada | 8 | 15 | 1 | 0 | 53.33 |
Minod Bhanuka | c Heinrich Klaasen b Wiaan Mulder | 7 | 13 | 0 | 0 | 53.85 |
Bhanuka Rajapaksa | c Heinrich Klaasen b Kagiso Rabada | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Dhananjaya de Silva | c Heinrich Klaasen b Tabraiz Shamsi | 12 | 24 | 0 | 0 | 50.00 |
Charith Asalanka | c Tabraiz Shamsi b Kyle Verreynne | 77 | 69 | 4 | 3 | 111.59 |
Dasun Shanaka | c George Linde b Tabraiz Shamsi | 30 | 41 | 2 | 0 | 73.17 |
Wanindu Hasaranga | c & b George Linde | 3 | 4 | 0 | 0 | 75.00 |
Chamika Karunaratne | b Keshav Maharaj | 36 | 23 | 1 | 2 | 156.52 |
Dushmantha Chameera | b Tabraiz Shamsi | 11 | 23 | 0 | 0 | 47.83 |
Akila Dananjaya | c Aiden Markram b Tabraiz Shamsi | 3 | 4 | 0 | 0 | 75.00 |
Praveen Jayawickrama | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 9 (b 0 , lb 2 , nb 0, w 7, pen 0) |
Total | 197/10 (36.4 Overs, RR: 5.37) |
Fall of Wickets | 1-18 (4.3) Avishka Fernando, 2-18 (4.6) Bhanuka Rajapaksa, 3-19 (5.1) Minod Bhanuka, 4-61 (14.1) Dhananjaya de Silva, 5-125 (26.1) Dasun Shanaka, 6-141 (27.5) Wanindu Hasaranga, 7-147 (28.4) Charith Asalanka, 8-192 (35.3) Chamika Karunaratne, 9-194 (36.1) Dushmantha Chameera, 10-194 (36.4) Akila Dananjaya, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kagiso Rabada | 6 | 0 | 16 | 2 | 2.67 | |
Wiaan Mulder | 5 | 0 | 30 | 1 | 6.00 | |
Keshav Maharaj | 8 | 0 | 32 | 1 | 4.00 | |
Tabraiz Shamsi | 7.4 | 0 | 49 | 5 | 6.62 | |
Andile Phehlukwayo | 5 | 0 | 28 | 0 | 5.60 | |
George Linde | 5 | 0 | 40 | 1 | 8.00 |
முடிவு – தென்னாபிரிக்க அணி 67 ஓட்டங்களால் வெற்றி (டக்வெத் லூயிஸ் முறையில்)
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<